14 டிசம்பர், 2014

நெசவுத் தொழில் ஆதி முதல் நவீனம் வரைநெசவுத் தொழில்.:-

நெசவு என்பது துணிகள் தயார் செய்வது.

வியாபாரிகள் ஒரு துணியை வாங்க போகும் பொழுது அந்த துணிகளின் தரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பாவு நூல் என்ன ஊடை நூல் என்ன அதன் எடை எவ்வளவு என்று கேட்டு அதன் தரத்தை தெரிந்து கொள்வார்கள்.

இன்னும் துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த துணியின் பாவு நூல் எந்த வகையான நூல் என்ன கவுன்ட், ஊடை நூல் என்ன நூல் என்ன கவுண்ட், ரீட், பிக் எவ்வளவு, அகலம், நீளம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டால் அந்த துணிக்கு உபயோகப் படுத்திய நூலின் எடையை கண்டு பிடித்து விடலாம். அந்த நூலுக்கு உண்டான விலையையும் நெய்யும் கூலியையும் சேர்த்து கொண்டால் அந்த துணியின் அடக்க விலையை தெரிந்து கொள்ளலாம்.

1s கவுண்ட் காட்டன் நூல் 1 கிராம் எடை 1.65 மீட்டர்
2s கவுண்ட் காட்டன் நூல் 1 கிராம் எடை 2.30 மீட்டர்
இதை வைத்து அனைத்து கவுண்டின் நூலின் எடையையும் கண்டு பிடித்து விடலாம். 

கவுண்ட் - நூலின் திக்னஸ்குண்டான அளவு எண் [ ஓவ்வொரு நூலுக்கும் ஒரு எண் இருக்கும். உதாரணம் 10s, 20s, 30s, 2/20s, 2/30s, 

ரீட் :- பாவு நூல் ஒரு இன்ஞ்சில் இருக்கும் இழைகளின் எண்ணிக்கை 
பிக் :- ஊடை நூல் ஒரு இன்ஞ்சில் இருக்கும் இழைகளின் எண்ணிக்கை

நெசவு நெய்யும் முறைகளை பற்றி தெரிய படுத்தி இருக்கிறேன். இதில் எதுவும் புரிய வில்லை என்றால் கீழே துணி தயாரிப்பது எப்படி எளிய முறை விளக்கம்  வீடியோ பதிவை பாருங்கள் . S.V. ராஜ ரத்தினம். கரூர்.

25 ஆகஸ்ட், 2014

தேவாங்கர் குல வரலாறு - மூன்றாம் பகுதிதேவாங்க சமுதாயத்தைப் பற்றி ஜப்பானியப் பெண்மணி யுமிகொ நானாமி ஆய்வு செய்துள்ளார். அது பற்றிய விபரம்1998 ஆம் ஆண்டு தேவாங்க சமுதாயத்தை ஆய்வு செய்யும் பொருட்டு சேலம் வந்துள்ளார். அங்கு, சேலம் திருமண மண்டப நிர்வாகத் தலைவராக அப்போது இருந்த காலஞ் சென்ற திரு.ஓ.எஸ்.சுப்பிரமணியஞ் செட்டியாரை சந்தித்து, தான் மேற்கொண்டு வரும் ஆய்வுப் பணிகள் குறித்து விளக்கியுள்ளார். மேலும், அவருடைய உதவியையும் நாடியுள்ளார்.

அதனடிப்படையில், தேவாங்க சமுதாயம் குறித்த இரண்டு புத்தகங்களை, யுமிகொவிற்கு அவர் தந்துள்ளார். அதற்காக நன்றி தெரிவித்து 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியன்று கடிதம் ஒன்றை, திரு.ஓ.எஸ். சுப்பிரமணியஞ் செட்டியாருக்கு யுமிகொ எழுதியுள்ளார்.

அதன்பிறகு 4 வருடம் கழித்து (07.12.2002) தனக்கெழுந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கோரி திரு.ஓ.எஸ். சுப்பிரமணியஞ் செட்டியாருக்கு யுமிகொ கடிதம் எழுதியுள்ளார். அவர் கேட்ட கேள்விகளுக்கு வைணவக்கடல் தேவாங்கர் செம்மல் சேலம் புலவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பதிலளித்துள்ளார். 

ஜப்பானியப் பெண்மணியின் கேள்விகளும், அதற்கு வைணவக் கடல் அளித்த பதில்களும் பின்வருமாறு

7 ஆகஸ்ட், 2014

தேவாங்கர்களின் திவ்யதேசங்கள்

தேவாங்கராக உள்ள அனைவரும் ஒரு முறையாவது  தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள் .

.1 ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன மூர்த்தி கோவில்.
2 மொதனூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில்.
3. நந்தவரம் செளடேஸ்வரி தேவி கோவில்
4. கங்காசாகர் கபிலேஸ்வரர் ஆலயம்
5. நேபாளத்தில் பசுபதிநாத் கோவில்.
6. மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில்.
7. ஹம்பி ஹேமகூட காயத்ரி பீடம்.
8. ஸ்ரீ காயத்ரி பீடம் , திருமூர்த்திமலை.
9. உஜ்ஜைன் மகாகாளேஸ்வரர் ஆலயம்.

தேவாங்கர்களுக்கு இந்த ஒன்பது ஸ்தலங்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.

6 ஆகஸ்ட், 2014

தேவாங்கர் குல வரலாறு - இரண்டாம் பகுதி

                                                                       
ஶ்ரீஶ்ரீஶ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் :- ஹம்பி ஹேமகூட பீடாதிபதியாக ஹம்பியில் ஜெகத்குரு பட்டாபிஷேகம் 30-4–1990 ல் நடைபெற்றது.
இயற்பெயர்- ஶ்ரீ தத்தாத்ரேயஸ்வாமி
கோத்திரம்- மனுமகரிஷி கோத்திரம்
வங்குசம்- நாகாபரணதவரு
தந்தை பெயர்- ஶ்ரீ பணிகெளடர் வம்ச ஹேமகூட பீடத்தின் ஐந்தாவது ஜகத்குருவின் வாரிசு கம்பளி மடம் ஶ்ரீ சங்கரையா சுவாமிகள்

ஹேமகூட பீடம்:- ஶ்ரீ பணிகெளடர் வம்சத்தில் உதித்தவர்களே குருவாக இருந்து வருகின்றனர். இது பீடத்தின் நடைமுறை.

13 ஜூலை, 2014

கும்மிப் பாடல்கள்அனைத்துப் பாடல்களையும் பாடியவர்கள்:-

செல்வி. R. பவித்ரா. கரூர்.
செல்வி. S. கீர்த்தனா. கரூர்.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

28 ஜூன், 2014

இறந்தவர்களுடன் [ஆவிகளுடன்] பேசிய அனுபவம்

                                                                                 


நண்பர்களே! இறந்தவர்களுடன் தொடர்பு கொண்டு நான் பேசிய என் அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உடன் வேலை செய்த  நண்பர் ஒருவர் இப்படி தொடர்பு கொண்டு பேசியதை அறிந்து. அவர் மூலம் கற்று கொண்டேன்.

எனக்கு முதலில் இதில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. அவர் பொய் சொல்கிறார் என்று நிருபிக்கவே நான் முதலில் அவருடன் பேச உட்கார்ந்தேன். அவர் சொன்னது போலவே நகர்ந்தது. அப்படியும் அவர் தானே நகர்த்துகிறார் என்று  கூறி அவரிடம் நம்ப முடியாது என்று சொல்லி விட்டேன்.