9 அக்டோபர், 2013

உண்மையான பெண்ணின் தலையை வைத்து வணங்கும் மக்கள்
தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள.சித்தையன் கோட்டை,
இது  நெசவாளர்கள் வாழும் கிராமம் .

சித்தையன்கோட்டை இங்கு சஞ்சீவி சௌண்டம்மன் ஆலயம் உள்ளது இங்கு பலநூறு வருடம் முன்பு நடந்த உண்மை சம்பவத்தின் காரணமாக
அந்த கோவிலில் சிலை இல்லை  உண்மையான ஒரு பெண்ணின் சிரசு பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது !!!!

இந்த கோவில் தேவாங்கர் சமூகம் கப்பேலார் வங்குச தயாதிகளுக்கு பாத்தியப்பட்டது.இரண்டு வருடத்திற்கு ஒரு முறை  சிவராத்ரி  அன்று இரவு சிரசை வெளியில் எடுத்து வைத்து வழிபாடு நடத்துகிறார்கள்.

அதன் வீடியோ பதிவுகள் சில வருடங்கள் முன்பு  "நடந்தது என்ன?" என்ற நிகழ்ச்சியில் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது அந்த வீடியோ தொகுப்பு கீழே கொடுக்க பட்டுள்ளது.

மேலும் இதன் விபரம் தெரிந்து கொள்வதற்காக  தேவாங்கர் பேஸ் புக் நண்பர்கள் ஆர்வத்துடன் பல ஊர்களை சேர்ந்தவர்களும் ஒன்று சேர்ந்து 27-2-2014 வியாழ கிழமை அன்று சித்தையன் கோட்டை சஞ்சீவி செளடம்மன் ஆலயம் சென்றிருக்கிறார்கள். பார்ப்பதற்கான அனைத்து உதவிகளையும் தேனி. செல்வன். வினோத் அவர்கள் செய்திருகிறார்கள்.

நேரில் பார்த்த விபரத்த செல்வன். பார்த்திபன் அவர்கள் விவரித்த விதம்:-


பல நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்து தெய்வமான ஒரு பெண்ணின் சிரசை பார்க்க போகிறோம் எப்படி இருக்குமோ என்று ஆர்வமாக இருந்தது. ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. திண்டுக்கல்லில் இருந்து 10 கி.மீட்டர் தூரம். சித்தையன் கோட்டை. இரவு 9 மணிக்கு போய் சேர்ந்தோம்.

கோவில் சிறியதாக இருந்தது. கும்பல் கட்டுக்கடங்காமல் இருந்தது. சிறப்பு தரிசனத்திற்கு ரூ. 50/- டிக்கெட் போடபட்டிருந்தது. போட்டோ எடுக்க அனுமதி இல்லை.

நண்பர் வினோத்தின் உதவியால் வரிசையில் நிற்காமல் நேராக 30 நிமிடத்திற்குள் கோவிலுக்குள் சென்று பார்க்க முடிந்தது.

ஒரு பெட்டியின் மேல் சிரசை வைத்து அதற்கு கீழ் சீலை உடுத்தியது போல் அலங்காரம் செய்திருந்தார்கள். கழுத்தில் நிறைய நகை போட்டிருந்தார்கள்.

முகம் கருத்துபோய் இருந்தது. மூக்கும், உதடும் பெரியதாக இருந்தது. வாய்விட்டு சிரித்தால் எப்படியிருக்குமோ அப்படி பல் ஐந்தும் நல்ல வெண்மையாக தெரிந்தது. தலையில் பாதிமுடியை கொண்டை வைத்தது போல் வைத்து மீதி முடியை அப்படியே தொங்க விட்டிருந்தார்கள். நீளமாக நிறைய முடி இருந்தது. கண்கள் உண்மையான கண்ணாக திறந்திருக்கும் என்று முன்பு சொல்லியிருந்தார்கள் ஆனால் கண்கள் இரண்டும் வெள்ளியில் செய்து வைக்கபட்டிருந்தது. மொத்தத்தில் பார்க்க, பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. அம்மனை வணங்கி விட்டு சந்தோஷத்துடன் வெளியில் வந்தோம்.

வெளியில் வந்து அம்மனின் உருவத்தை நினைவுக்கு கொண்டுவர நினைத்தால் எதுவுமே நினைவுக்கு கொண்டுவர முடிய வில்லை. கூட வந்திருந்த அனைவருக்குமே அதே நிலைத்தான் இருந்தது. புருவம் இருந்ததா இல்லையா என்பது கூட நினைவுக்கு கொண்டுவர முடிய வில்லை. இதற்கு 20 நிமிடம் வரை பார்த்து கொண்டு இருந்தோம். அனைவரிடமும் கலந்து பேசிதான் இந்த அளவிற்கு என்னால் சொல்ல முடிந்ததது. அனைவரும் ஒரு முறையேனும் அம்மனை தரிசிக்க வேண்டும்.

பெரியவர்களிடம் மேலும் விபரங்களை விசரித்த பொழுது, தேவாங்கர் சமுதாய கப்பலேரு வம்ச குலத்தவர்கள் தங்கள் வீட்டு திருமணத்தின் போது மணபெண்ணுக்கு இந்த கோவிலில் அம்மனுக்கு போடும் நகைகளை வாங்கி வந்து போடுவார்களாம் பின் திருமணம் முடிந்து திருப்பி கொடுத்து விடுவார்களாம். அப்படி இருந்த சமயத்தில் அம்மன் பெட்டிக்குள் இருந்த படி அடிக்கடி பேசுமாம். திடீரென்று பேசுவதை நிறுத்தி விட்டதாம். என்ன காரணம் என்று பார்த்த பொழுது நகையில் யாரோ திருடி விட்டது தெரிந்ததாம். அதிலிருந்து நகையை திருமணத்திற்கு  வெளியில் கொடுப்பதை நிறுத்தி கொண்டார்களாம்.


இதை பற்றிய விஜய் டிவியின் வீடியோ பதிவு.


   நன்றி :-   விஜய் டிவி    

மற்றும்     திரு. வினோத் தியாகராஜன்