6 ஆகஸ்ட், 2014

தேவாங்கர் குல வரலாறு - இரண்டாம் பகுதி

                                                                       
ஶ்ரீஶ்ரீஶ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் :- ஹம்பி ஹேமகூட பீடாதிபதியாக ஹம்பியில் ஜெகத்குரு பட்டாபிஷேகம் 30-4–1990 ல் நடைபெற்றது.
இயற்பெயர்- ஶ்ரீ தத்தாத்ரேயஸ்வாமி
கோத்திரம்- மனுமகரிஷி கோத்திரம்
வங்குசம்- நாகாபரணதவரு
தந்தை பெயர்- ஶ்ரீ பணிகெளடர் வம்ச ஹேமகூட பீடத்தின் ஐந்தாவது ஜகத்குருவின் வாரிசு கம்பளி மடம் ஶ்ரீ சங்கரையா சுவாமிகள்

ஹேமகூட பீடம்:- ஶ்ரீ பணிகெளடர் வம்சத்தில் உதித்தவர்களே குருவாக இருந்து வருகின்றனர். இது பீடத்தின் நடைமுறை.

தேவாங்கர்களின் ஐந்து குரு பீடங்களான
காசி, ஸ்ரீ சைலம், ஹேமகூடம், சோணாசலம், சம்புசைலம்
பீடாதிபதிகள்.                            ஐம்பதூர் பட்டத்து எஜமானர் ஸ்ரீ வேல் முருககிருஷ்ணன் M.Com. அவர்கள்முப்பதூர் பட்டத்து எஜமானர் ஸ்ரீ சிவானந்தம் [எ] மல்லி செட்டியார்அவர்கள்  
பட்டத்து எஜமானர்கள்:- மக்கள் இவர்களை பட்டகாரர் என்று அழைப்பார்கள். இவர்கள் வசிக்கும் வீட்டை அரண்மனை என்று தான் சொல்வார்கள்.இவர்கள் வாரிசு உரிமைப்படி பட்டத்திற்கு வருபவர்கள். ராஜ முத்திரை பத்தித்த மோதிரம் இவர்களிடம் இருக்கும். மாதா மாதம் குறிப்பிட்ட அளவு ஊர்பணம் [ சிறு தொகை- கொடுக்க வேண்டும் என்ற பெயருக்காக] இவர்களுக்கு கொடையாக வழங்கப்படும்.

இவர்கள் அமைதியானவர்கள் எதற்காகவும் கோபபட மாட்டார்கள். ஊர்களில் நடக்கும் கோவில் விஷேசங்களில்  இவர்கள் கலந்து கொள்வார்கள்.ஊரில் ஏதாவது பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்பட்டால். இவரிடம்  தெரிவிப்பார்கள் இவர்களின் சொல்லுக்கு  அனைவரும் கட்டுபடுவார்கள்.

இவர்கள் இறந்தவர்களின் முகத்தையோ உடலையோ பார்க்க மாட்டார்கள். இவர்கள் இருக்கும் ஊரில் யாராவது இறந்து விட்டால். உடலை மயானத்திற்கு எடுத்து செல்லும் வரை உணவு உண்பதில்லை. எப்பொழுதும் சைவ உணவு மட்டுமே உண்பவர்கள்.

கோவில் விஷேசங்களுக்கு முன்நின்று கவனிக்க அழைப்பு விடுத்தால். கரகம் சிங்காரிப்பதிலிருந்து. அம்மனுக்கு அபிஷேகங்கள், வித, விதமான அலங்காரங்கள் இவர்கள் செய்து கொடுப்பார்கள்.

ஏதாவது ஊரிலோ அல்லது கிராமத்திலோ உள்ள மக்களுக்கு தொழில் சரியில்லாமலோ வேறு முன்னேற்றங்கள் இல்லாமலோ வேறு பல பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தால். இவர்களிடம் சொல்லி அழைப்பார்கள். இவர்கள் தங்களிடம் மதிப்பு வாய்ந்த கம்பளி வைத்திருப்பார்கள். அதை தங்கள் ஊர் முக்கியஸ்தர்களுடன்   எடுத்து கொண்டு போய். அந்த ஊரில் அம்மனை வழிபட்டு விட்டு . பட்டத்து எஜமானர் அந்த கம்பளியில் உட்கார்ந்து. அனைவருக்கும் அவரவர்களின் குறைகளை கேட்டு திருநீறு பூசிவிடுவார்.
எந்த பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கி விடும். தனிபட்ட குடும்பங்களில் தொடர் பிரச்சனைகளை சமாளிக்க முடியாதவர்கள் இவர்களின் வீட்டிற்கு வந்து கம்பளியில் உட்கார்ந்து திருநீறு பூசிகொண்டு செல்வார்கள். இதற்கு முன்கூட்டியே அவரிடம் கேட்டு நாள் குறித்து வாங்க வேண்டும்.

மேலும் யாருக்காவது உடம்பு முடியாமல் இறக்கும் தருவாயில் நாள் கணக்கில் உயிர் போகாமல் இழுத்து கொண்டே சிரம பட்டு கொண்டு  இருந்தால். இவர்களிடம் வந்து சொல்வார்கள். பூஜை அறையில் பூஜை செய்து இன்னும்  எத்தனை நாள் ஆகும் என்பதை சொல்லி திரு நீறு கொடுப்பார். அதை  கொண்டு போய் பூசினால் அவர் சொல்லியது போலவே நடக்கும்.

ஒரு பட்டத்து எஜமானர், இன்னொரு பட்டத்து எஜமானரை நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளமாட்டார்கள்.

ஐம்பதூர் மற்றும் முப்பதூர் என்று சொல்லக்கூடிய இரண்டும் தனித்தனி அமைப்புகள். இந்த இரண்டு அமைப்புகளுக்கும், தனித்தனியாக  சொத்துக்களும்  இருவருக்கும் சரிசமமான உரிமையுடைய  சொத்துக்களும்  பல உண்டு. பல ஊர்களில் மடங்களும், சத்திரங்களும் இருக்கின்றன.

இந்த இரண்டு அமைப்புகளுக்கும் பிரச்சனைகள் வந்து விட கூடாது என்பதற்காக. ஒவ்வொரு வருடமும் இரண்டுக்கும் தனித்தனி தலைவர்களை தேர்ந்தெடுத்தாலும். இரண்டு அமைப்புகளுக்கு சேர்த்து பொது தலைவர் ஒருவரும் தேர்ந்தெடுக்க படுவார்கள்.

தேவலரின் ஏழு அவதார காலங்களும்
ஶ்ரீசெளடேஸ்வரி தேவியை ஶ்ரீஇராமலிங்க செளடாம்பிகை என்று
அழைக்கப்பட்ட காலமும்

பொதுவாக யுகங்கள் நான்காகப் பிரித்து ஓவ்வொரு யுகத்திற்கும் ஆண்டு கணக்குகள் கூறப்படுகிறது. ஒரு யுகம் முடிந்தவுடன் உலக பிரளயத்தில் அனைத்து உயிர்களும் அழிந்து புதிய உயிர்கள் படைக்கப் படுவதாக கூறப்படுகிறது. இப்பொழுது நடப்பது கலியுகம். எத்தனையாவது கலியுகம் என்பது யாருக்கும் தெரியாது.

கிருத்யுகம் – 17,28,000 வருடங்கள்
திரேதாயுகம்- 12,96,000 வருடங்கள்
துவாபரயுகம்- 8,64,000 வருடங்கள்
கலியுகம்-     4,32,000 வருடங்கள்

இதில் நம் தேவல அவதாரத்தை பார்போம்.
அவதாரங்கள்:- 1.தேவலர் 2. வித்யாதரர். 3. புஷ்பதந்தன். 4. வேதாளம். 5. வரரிஷி. 6. தேவசாலி. 7. தேவதாஸ்

இராமாயண காலம் திரேதாயுகம் என்ற இரண்டாம் யுகத்திலும். மகாபாரதம் மூன்றாம் யுகமான துவாபரயுகத்திலும் நிகழ்ந்துள்ளது.
தேவல அவதாரத்தை பற்றிய செய்திகள் வால்மீகி இராமாயணத்துள் இல்லை.

இரண்டாம் இதிகாசம் ஐந்தாம் வேதம் எனப்படும் பாரதத்துள் தேவலர் பல இடங்களில் கூறப்பெறுகின்றார். கீதை மற்றும் கீதையின் உரைகளிலும் தேவலர் கூறப் பெறுகின்றார். ஸாமவேதத்துள் தேவலோபநிஷத் உள்ளது. தேவல ஸ்மிருதி தர்மசாஸ்திரங்கள் உள்ளன. எனவே

1.முதல் தேவல அவதாரக் காலம்- இராமாயண காலத்திற்கு பின்னும், மகாபாரத காலத்திற்கு முன்னும் எனக் கொள்ளலாம்.

2. இரண்டாம் அவதாரமான வித்யாதர அவதாரம் பெரும்பாலும் கந்தர்வ உலகிலும், திருக்கயிலையிலுமாக நடந்தது. – இது நடந்தது கலியுக ஆரம்பமாக கொள்ளலாம்.

3. மூன்றாம் அவதாரமான புஷ்பதந்த அவதாரம்தான் சிவசாபத்தினால் நான்காம் அவதாரமான வேதாள மகரிஷி அவதாரம் ஆனது. வேதாள அவதாரம் விக்கிரமாதிதன் காலம் ஆகும் இது கி.மு 58 ம் வருடம். ஆகவே மூன்றாவது அவதாரம் இதற்கு முந்தைய காலம் என்று கொள்ள வேண்டும்.

4 வேதாள அவதாரம் முன்பு சொன்னது போல் கி.மு 58 ம் வருடம்.

5. வரருஷி அவதாரம்- வரருஷியின் சீடன்தான் மகாகவி காளிதாஸன். காளிதாஸன் போஜ மன்னனின் நெருங்கிய நண்பன். போஜ மன்னனின் காலம் சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன்பு.

6. தேவசாலி. 7. தேவதாஸ் அவதாரங்கள்- இவ்விரு அவதார மூர்த்திகளும் சமண, பெளத்த சமயங்களை எதிர்த்து வாதிட்டிருகின்றனர். கி.பி முதல் இரண்டு,மூன்று நூற்றாண்டுகளில் சமணம், பெளத்தம் பரவியது எனக் காண்கின்றோம். எனவே கி.பி முதல் இரண்டு நூற்றாண்டுக்குள் ஆறு மற்றும் ஏழாவது அவதாரங்கள் நிகழ்ந்து பூர்த்தி ஆகின்றன என்பது ஓரளவு பொருத்தமான அனுமானம்.

ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை பெயர் காலம்- இராமலிங்கேசுவரரையும் ஶ்ரீசெளடேஸ்வரியையும் சேர்த்தே என் குலமான தேவாங்கர்கள் வணங்க வேண்டும் என அருளியது  ஏழாவது அவதாரமான தேவதாஸ மையனின் காலத்தில்தான். இது இரண்டாம் நூற்றாண்டு. அதற்கு முன்பு வரை ஶ்ரீ செளடேஸ்வரி தேவி மட்டுமே.
ஆகவே . செளடேஸ்வரி தேவியாக இருந்த நம் அன்னை இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்புதான் ஶ்ரீஇராமலிங்க செளடாம்பிகை என்று வணங்க படுகிறார்.
ஆதாரம்- தேவாங்க சிந்தாமணி- இரண்டாம் பதிப்பு- பக்கம் எண்-150-701-702-

சிவன் - சக்தி பெயர்கள்

சிவனுடைய ஓவ்வொரு அவதாரத்திலும் சக்தியும் அவதாரம் செய்து கணவன் மனைவி ஆகிறார்கள்

உதாரணம்

பரமசிவன் - பார்வதி
சொக்கநாதன் - மீனாட்சி
விசுவநாதன் - விசாலாட்சி
ஏகாபரேசுவரன் - காமாட்சி
பிரகதீஸ்வரன் - பிரகதாம்பாள்

ஓவ்வொரு சிவன் கோவிலிலும் சிவசக்தியின் பெயர் மாற்றம் இருக்கும்
இது போல் தான் 
இராமலிங்கேஸ்வரர் - செளடாம்பிகை

1.தேவாங்கர்கள் தமிழ் நாட்டிற்கு வந்த விபரம்

தேவாங்கர் என்பவர்கள் ஆதியில் சகரநாடு எனப்படும் காசி பகுதியில் சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக் கொண்டு வசித்து வந்தனர்.
பின்பு ஹம்பி பகுதியை அடுத்த மன்னர் ஆணைக் கொந்தி மகாராஜா வீரப்பிராதாப ராய் [கி.பி.1336] ல் விஜய நகர சாம்ராஜ்யம் ஏற்படுவதற்கு முன் காசி பகுதியில் இருந்து தேவாங்கர்களை அழைத்து வந்து வேண்டிக் கொண்டதின் பேரில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க இராச குருவாக இருந்து நல்வழி காட்டி நடத்திச் சென்றனர். பின்னர் வம்சம் பெருகியது இந்நிலையில் ஹம்பியைத் தலை நகராகக் கொண்ட விஜயநகர சாம்ராஜ்யம் பரந்து விரிந்து செயல் பட்டது.

அந்த விஜய நகர சாம்ராஜ்யத்தின் மேற்கு பகுதியில் தற்போதைய கர்நாடகத்தின் ஒரு பகுதி கன்னட மொழியும் கிழக்கு பகுதியில் தற்போதைய ஆந்திரத்தின் ஒருபகுதி தெனாலிவரை தெலுங்கு மொழியும் பேசி வந்தனர். இவர்கள் பிறசமயங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்திற்குள் நுழையாமல் இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் கட்டிக்காத்தனர்.
பின்னர் கி.பி.1565 ல் விஜயநகரப் பேரரசின் கடைசி மன்னன் ராமராயர் காலத்தில் பாமினி சுல்தான்கள் ஐவரும் சேர்ந்து படையெடுத்ததில் விஜயநகரத்துப் படைகள் தோற்றுப் போயின. ஹம்பி நகருக்கு பேரழிவு நேர்ந்தது.

இந்து சமயத்தைக் கட்டிக் காத்துவந்த தேவாங்க பிராமணர்கள் உயிருக்கு பயந்து, ஒரு பகுதியினர் பெங்களுர் வழியாக வந்தனர். ஒரு பகுதியினர் தாராபுரம் வரை வந்து தங்கி, பின்னர் மேலும் பிழைப்புக்கு வழி தேடி மதுரை முதலான தென் தமிழ் நாடு வரை வந்து  விட்டனர். மற்றொரு பகுதி மைசூர் வழியாக திம்பம் மலைமீதும் பன்னாரி கோபி செட்டி பாளையம், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் வந்து தங்கி அப்படியே நிலைத்து விட்டனர். மிகச் சிறிய பகுதியினர் தற்போதைய கேரளாவில் கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் ஶ்ரீ கிருஷ்ணாபுரம் எனும் ஊருக்கு பக்கம் கிராமங்களில் வசித்து வருகின்றனர்.
எனவே தான் தேவாங்கர்களில் ஒருபகுதியினர் கன்னடமும் ஒருபகுதியினர் தெலுங்கும் பேசுகின்றனர். மொழி வேறுபட்டாலும் குலத்தால் தேவாங்கர்களே.

2. சேலம் தேவாங்கர்கள்:-.

தமிழ்நாட்டில் தேவாங்ககுல சோணாசல மடாதிபதிகள் குருவம்ச பரம்பரையில் முதல் குருவான இராமலிங்க சுவாமிகள் இன்றைக்கு 1150 ஆண்டுகளுக்கு முன் பட்டத்திற்கு வந்தவர் ஆகவே இதிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் தேவாங்கர்கள் குடியேறிவிட்டார்கள் என்பதை உறுதி செய்யலாம்..
சேலம் ஜில்லாவைச் சேர்ந்த தேவாங்கர்கள், தாங்கள் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான "ஹம்பி"யில் வாழ்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேலம் ஜில்லாவில் தாரமங்கலத்தை அடுத்துள்ள கெட்டிமுதலி வம்சத்தாரின் தலைநகரமான "அமரகுந்தி" என்னும் ஊரே தங்கள் முதல் குடியிருப்பு பகுதி என்று கூறுவதாக "சென்னை கெஜட்-1967 ம்ஆண்டு-சேலம் ஜில்லா-பக்கம் 131-132" ய் திரு A.இராமசாமி என்பவர் குறிப்பிட்டுள்ளார்...

தேவாங்கர்கள் வாழும் ஒவ்வொரு ஏரியாக்களிலும் வெவ்வேறான நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் 

நம் தேவாங்கர் குல அன்னை ஸ்ரீசௌடேஸ்வரி அம்மனை சில ஏரியா மக்கள் வீட்டில் வைத்து கும்பிடுகிறார்கள், பல ஏரியா மக்கள் வீட்டில் வைத்து கும்மிடுவதற்கு அனுமதிப்பது இல்லை.

மேலும் சில உதாரணமாக

    A மற்றும், B  என்பதை.இரு பகுதி மக்களாக எடுத்து கொண்டால்


        A
          B
1
ஶ்ரீசெளடம்மன் வழிபாடு [அம்மனை ஏதோ ஒரு ரூபத்தில்]
வீட்டில் வைத்து கும்பிடுகிறார்கள்
வீட்டில் வைத்து கும்பிடுவது இல்லை
2
கோவிலில் பிரசாதமாக அணிய கொடுப்பது
பண்டாரம் என்கிற மஞ்சள் கலவை
திருநீறு, குங்குமம், சந்தனம்
3
ஜனிமாரா என்ற பூணூல்
வருடம் ஒரு முறை ஆவணி மாதத்தில் நோன்பு வைத்து போடுகிறார்கள்
பூணூல் போடுகிறார்கள் நோன்பு வைத்து போடும் பழக்கம் இல்லை
4
கோவில் அப்ப என்று சொல்லக்கூடிய வருட திருவிழா [சில இடங்களில் நவராத்ரி விழா]
சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு, ஜோதி கொண்டு வருதல், மஞ்சள் மெரமனை, வீரமுட்டி வேஷம்
அப்ப என்ற வார்த்தையே தெரியாது. விழா என்பார்கள். கரகம் கொண்டு வருதல், முளைப்பாரி, ரதி சேர்த்தல் [அரிசிமாவு+ வெல்லம் சேர்த்தல்], அம்மன் வீதி உலா
5
கத்தி போடுதல்
சிரிய கத்தி போட்டு கொண்டு சலங்கை கட்டிக் கொண்டு வித,விதமாக நாட்டியம் போல் செய்கிறார்கள். 
பெரிய கத்தி போடுகிறார்கள். இரத்தம் வழிய ஆக்ரோஷமாக போடுகிறார்கள். பத்தேவு சொல்வது-  வாளை வீசிக் கொண்டே தேவாங்கர் சரித்திரங்களும்  மக்களுக்கான வேண்டுதல்களையும் சொல்கிறார்கள்
6
சக்தி நிலை நிறுத்துதல் [மண் சட்டியின் மேல் விழிம்பில் ஜம்முதாடு கத்தியை நிறுத்துவது]
இந்த வழக்கம் இல்லை
10 திலிருந்து 20 வருடத்திற்கு ஒரு முறை நிறுத்துகிறார்கள்
7
கத்தேவு பெட்டி [திரு நீறுபை, ஜம்முதாடு கத்தி என்ற சக்தியை வைத்திருப்பது]
இந்த முறை இல்லை
இதை முக்கியமாக கருதுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் இன்னல் ஏற்படும் காலங்களில் இதை வைத்து சொல்லி கும்பிடுவது உண்டு.  
8
திருமணம்-- தாலி கட்டுவது
மணமகனின் வலது பக்கம் மணமகளை உட்கார வைத்து தாலி கட்டுகிறார்கள்
மணமகனின் இடது பக்கம் மணமகளை உட்கார வைத்து தாலி கட்டுகிறார்கள்
9
இறந்தவர்களுக்கு செய்யும் திவசம்
மூன்று படையல் வைத்து அரிசியை வைத்து முறை செய்கிறார்கள்
ஒரு படையல் மட்டும் வைத்து கும்பிடுகிறார்கள்


இன்னும் மற்ற பல சடங்கு முறைகளிலும், பழக்க வழக்கங்களிலும், கன்னடம் பேச்சு வழக்கும் அந்த, அந்த ஏரியா மக்களின் பழக்க வழகங்களோடு கலந்து இருக்கிறது.

தேவாங்கர் குல பெருமைகள்

பல இன மக்கள் உலகில் வாழ்ந்தாலும். வேதங்களிலும், இதிகாசங்களிலும், புராணங்களிலும் இடம் பெற்று பாராட்டை பெற்ற இனம் தேவாங்கர் இனம்.

பிறப்பின் பெருமை:- தேவங்கர் இனத்தின் ஆதி மூலவர்  தேவலர். இவர் சிவபெருமானின் நெற்றிகண்ணிலிருந்து தோன்றியவர்.
மற்ற இனத்தாரின் கோத்திரங்கள் அந்த அந்த கோத்திர பெயருடைய ரிஷிக்கு பிறந்து பின் பெருகியவர்கள். ஆனால் தேவங்கர்கள் பிறப்பில் தேவங்கர்களே. ரிஷிக்கள் உபதேச குருமார்களே. அந்த உபதேச ரிஷிக்களின் பெயர்களே கோத்திரங்கள். யோனி பிறப்பில்லாதவர் ஆதலினால்தான். பூணுல் அணிந்திருந்தாலும் தினமும் சந்தியா வந்தனம் மந்திரத்தை பாராயாணம் செய்யாமலே பூணுலுக்குண்டான மகத்துவம் உண்டு என்ற பெருமை பெற்றவர்கள்.

தொழில்:- தேவங்கர்களுக்கு ஆடை நெய்யும் உன்னதமான நெய்யும் தொழிலே குல தொழில். பல இனத்து மக்களும் ஆடை நெய்யும் தொழிலில் இருந்தாலும் நுணுக்கமான வேலைபாடுகள், மற்றும் உறுதி இல்லாத மிக மெல்லிய நூல்களை கொண்டும் திறம்பட ஆடைகள் நெய்வதில் வல்லவர்கள் தேவாங்கர்கள். கோயில்களில் கொடியேற்றத்திற்கு உபயோக படுத்தும் கொடிகள் தேவாங்கர் நெய்யும் துணிகளே
திருப்பதி, திருவண்ணாமலை, திருவதிகை, வீரட்டானம் முதலான ஆலயங்களில் கொடியேற்ற கட்டளை தேவங்கர்குரியது. இது ஶ்ரீசைலத்தில் இன்றும் நடைபெருகிறது. சேலம் சுகவனேஸ்வரர் கோவில், சேலம் கோட்டை அழகிரிப் பெருமாள் கோவில், சேலம் சின்ன திருப்பதி மரக்கோட்டை ஶ்ரீவெங்கட்ரமணா சுவாமி திருக்கோவில்களில் தேவாங்கர்கள் நெய்து கொடுக்கும் துணியே கொடியேற்றத்திற்கு பயன்படுத்தப் படுகிறது.

செளடேஸ்வரி அம்மன்:- கலாசாரம் வேறுபாடு இருந்தாலும், எந்த மொழி பேசினாலும் எந்த மாநிலத்தில் இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும் செளடேஸ்வரியை வணங்குபவர்கள் அனைவரும் தேவாங்கர்களே.  அனைவரையும் ஓன்று சேர்ப்பதிலும் அடையாளம் காணவைப்பதிலும்.
தேவாங்கர்களுக்கு மிக சிறப்பான அம்சமாகும்.

ஆன்மீக அமைப்பு:- தேவங்கர்களுக்கு என்று குரு சன்னிதானங்களும், குரு பீடங்களும், மடங்களும் அதற்கென்று குருக்களும், பட்டகாரர்களும், தேவுருமனை காரர்களும், செட்டிகாரர்களும். மந்திரங்களை கற்று தேர்ந்த தேவாங்க புரோகிதர்களும்.என்ற வரிசை கிரமமான அமைப்பும்.  கோத்திர பிரிவுகளும் அதனுள் அடங்கிய குல பிரிவுகளும். அந்த அந்த குலத்திற்கென்று தனி, தனி தெய்வங்களும் ஆன்மீகத்தில் தேவங்கர்களின் ஆழ்ந்த அறிவை காட்டுகிறது. இது எந்த இனத்திற்கும் இல்லாத சிறப்பல்லவா

தேவாங்கர்களின் தனி சிறப்பு அம்சங்கள்:- தேவங்கர்களுக்கு செட்டிமார்கள், ஜேன்டர்கள் என்ற சிறப்பு பெயர் உண்டு. மற்றவர்களிடம் எந்த வம்பு, தும்புக்கும் போகாதவர்கள். அமைதியானவர்கள். மற்ற இனத்து மக்கள் தங்களின் தெய்வங்களுக்கு உயிர்களை பலி கொடுக்கிறார்கள். தேவாங்கர் இன மக்கள் மட்டுமே தன் ரத்தத்தை பலியாக கொடுக்கிறார்கள். இந்த இனத்திற்கே உண்டான மிக பெரிய சிறப்பு.
தெய்வ வழிபாடு:- மற்ற இனத்து மக்களை போல் வருடம் ஒருமுறை குலதெய்வ வழிபாடும், சிறப்பு வழிபாடுகளும் இருந்தாலும் ஓவ்வொரு அமாவாசையும் அம்மனை வழிபடுவதற்காகவே தொழிலுக்கு விடுமுறை விடுத்து தெய்வ வழிபாடு செய்வது தேவங்கர் இனத்துக்கான தனி சிறப்பு

இவ்வளவு பெருமைகள் கொண்ட தேவாங்கர் இனத்தில் நாம் பிறந்ததற்கு பெருமை கொள்ளுங்கள்.