28 ஜூன், 2014

இறந்தவர்களுடன் [ஆவிகளுடன்] பேசிய அனுபவம்

                                                                                 


நண்பர்களே! இறந்தவர்களுடன் தொடர்பு கொண்டு நான் பேசிய என் அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உடன் வேலை செய்த  நண்பர் ஒருவர் இப்படி தொடர்பு கொண்டு பேசியதை அறிந்து. அவர் மூலம் கற்று கொண்டேன்.

எனக்கு முதலில் இதில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. அவர் பொய் சொல்கிறார் என்று நிருபிக்கவே நான் முதலில் அவருடன் பேச உட்கார்ந்தேன். அவர் சொன்னது போலவே நகர்ந்தது. அப்படியும் அவர் தானே நகர்த்துகிறார் என்று  கூறி அவரிடம் நம்ப முடியாது என்று சொல்லி விட்டேன். 


இருந்தாலும் ஏதோ ஒர் ஆர்வத்தில் கடையில் வேலை செய்யும் எட்டு வயது பையனை  [1986 ல் குழந்தை தொழிலாளர் சட்டம் இல்லை]
மதியம் சாப்பாட்டு நேரத்தில் கடையின் மாடிக்கு கூட்டிசென்று தரையிலேயே கட்டம் போட்டு நண்பர் சொன்ன முறைப்படி பேசினேன். 

டப்பா நகர்ந்தது. அப்பொழுதும் எனக்கு நம்பிக்கை வராமல் அந்த பையனை மிரட்டி நீதானே நகர்த்துகிறாய் என்று அதட்டி கேட்டுபார்த்தேன். அவன் தான் நகர்த்தவில்லை என்று திரும்ப, திரும்ப சொன்னான். இன்னொரு பையனையும் உட்காரவைத்து அதேபோல் செய்து பார்த்தேன் நகர்ந்தது அதன் பிறகு தான் ஒரளவுக்கு நம்பிக்கை வந்தது. ஆனால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று வெளியிலோ, வீட்டிலோ தெரிவிக்க வில்லை அத்தோடு விட்டு விட்டேன்.

1989 ல் குடும்பத்தில் திடீரென்று எதிர்பாராத ஒரு பெரிய துக்க நிகழ்வு. குடும்பத்தில் அனைவருக்கும் அப்பொழுது சிறு வயது. குடும்பத்தையும், தொழிலையும் எப்படி கொண்டு செல்வது என்று தெரியாத நிலை. அந்த நேரத்தில் தான் ஏதோ ஒரு உதவி, ஆலோசனை சொல்ல ஆள் கிடைத்திடாதா  என்று வீட்டிலேயே இந்த முறையை உபயோக படுத்தி பேச ஆரம்பித்தோம். குடும்பத்தில் உள்ளவர்கள், மற்றும் பக்கத்தில் உள்ள உறவினர்கள் என்று 10,15 பேர் வந்து விடுவார்கள். அடிக்கடி பேசுவோம். அனைவருமே மாற்றி, மாற்றி உட்கார்ந்து பேசுவார்கள். ஆனால் பேசுவதால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. [நேரில் அவர் இருந்தால் என்ன பேசுவாரோ அதுபடிதான் பேசுவார். நடக்க போவதை பற்றியோ அல்லது எதிர்காலத்தை பற்றியோ அவருக்கு எதுவும் தெரியாது.] என்று தெரிந்து பேசுவதை 1990 றோடு நிறுத்தி விட்டோம். பேசிய முறைகளை கீழே தருகிறேன்.

நான் பேசிய முறை

வீட்டில் இருக்கும் கேரம் போர்டை லேசான ஈர துணியால் நன்றாக துடைத்து விட்டு ஸ்ரைக்கர் வைத்து அடிக்கும் இடத்தில் இரண்டு கோடுகள் நான்கு புறமும் இருக்கும். அதில் மூன்று புறத்தில் முழுவதுமாக ஆங்கில எழுத்தான A to z வரை எழுதிக் கொள்ள வேண்டும். மீதி உள்ள ஒரு பக்கத்தில் 1 to 9 அடுத்து O வரை எழுதிக் கொள்ள வேண்டும். நடுவில் வட்ட வடிவ படத்திற்கு மேல் YES என்று ஒருபுறமும் எதிர்புறம் NO என்றும் எழுதி கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய டப்பா அல்லது சிறிய சில்வர் டம்ளர் எடுத்து கொள்ள வேண்டும். எழுத்தின் மேல் இதன் வாய் தலைப்பை வைத்தால் ஒரு எழுத்தை மட்டுமே மறைக்கும் படி இருக்க வேண்டும். ஒரு எழுத்தை மறைக்க கூடிய அளவுக்கு எழுத்தை நல்ல இடை வெளி விட்டு எழுத வேண்டும் அல்லது டப்பாவோ டம்ளரோ அளவு சிறியதாக எடுத்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு எழுத்திலும் நிற்கும் போது அதை எழுதி வைத்து கொள்ள ஒரு நோட்டும், பேனாவும் வைத்து கொள்ள வேண்டும்.

சுவாமி படங்கள், ஊதுபத்தி, உங்களுடன் நல்ல முறையில் பிரியமுடன் இருந்து வயதாகி இறந்த உறவினர்களின் போட்டோஸ். இவைகளை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது அனைத்தும் ரெடி

நீங்கள் எங்கு உட்கார்ந்து பேச போகிறீர்களோ. அந்த அறையை கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது பேச ஆரம்பிக்கலாம்

சுத்தம் செய்ய பட்ட அறையில் எழுதி வைத்திருக்கும் அந்த போர்டை ABCD… எழுதிய பக்கம் கிழக்கு பக்கம் வரும்படி வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது எண்கள் எழுதிய பக்கம் வடக்கில் இருக்கும். போர்டின் மேற்கு பக்கம். கிழக்கு பார்க்க [போர்டுக்கு வெளியே] சுவாமி படங்களை வைக்க வேண்டும் அதன் முன் புறம் பத்தியை பொருத்தி வைக்க வேண்டும். சுவாமி படத்திற்கு முன் புறம் நீங்கள் பேசவிரும்புபவரின் இறந்தவரின் ஒருவர் படத்தை வைக்க வேண்டும்.

அந்த போர்டுக்கு அருகில் பேசவிரும்புபவர்களில்  வடக்கு நோக்கி ஒருவரும் தெற்கு நோக்கி ஒருவரும் எதிர் எதிரே உட்கார வேண்டும். இப்பொழுது தெற்கு நோக்கி உட்கார்ந்திருப்பவர் பக்கம் எண்கள் எழுதபட்ட பக்கம் இருக்கும்.

நோட்டு, பேனாவுடன் ஒருவர் போர்டுக்கு கிழக்கு பக்கம் உட்கார வேண்டும்.

இப்பொழுது டப்பாவையோ அல்லது டம்ளரையோ வாய் பக்கம் கீழே வருமாறு அந்த போர்டின் நடுமத்தியில் வைக்க வேண்டும்.

எல்லாம் தயார் இனி பேச வேண்டியது தான் பாக்கி
பேசுவதற்கு பகல், இரவு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பேசலாம்.

இரண்டு பக்கமும் உட்கார்ந்து இருப்பவர்களில் வடக்கு நோக்கி இருப்பவர் மட்டுமே பேசவும், கேள்வி கேட்கவும் வேண்டும்.

இப்பொழுது அந்த இருவரும் சாமிக்கு பத்தியை சுற்றி காட்டி விட்டு நடுவில் வைத்துள்ள டப்பாவை ஆள் காட்டி விரலால் தொட வேண்டும். லேசாக தொட்டு கொண்டு இருந்தால் போதும். எக்காரணத்தை கொண்டும் தொட்டு விட்டு விரலை எடுத்து விட கூடாது.

இப்பொழுது வடக்கு நோக்கி உட்கார்ந்து இருப்பவர்

“ஆவி உலக வாசிகளுக்கு வணக்கம்.
உங்களுடன் பேச விரும்புகிறோம்.
யாராவது ஒருவர் எங்களுடன் பேசவருமாறு அழைக்கிறோம்.”
என்று டப்பாவில் விரல் வைத்தபடியே
திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.

யராவது பேச வந்திருந்தால் அந்த டப்பா அந்த வட்டத்துக்குள். சுற்ற ஆரம்பிக்கும்.

அப்பொழுது. பேசுபவர் - நீங்கள் எங்களுடன் பேச வந்ததற்கு நன்றி. என்று சொல்ல வேண்டும்.

உங்களின் பெயர், என்ன என்று கேட்க வேண்டும்

அப்பொழுது அந்த டப்பா நகர்ந்து ஒவ்வொரு எழுத்தாக போய் நின்று அடுத்த எழுத்திற்கு போகும். அது நிற்கும் ஒவ்வொரு எழுத்தையும் குறித்து கொண்டு வர வேண்டும். அது பெயர் சொல்லி முடித்தவுடன் நடுவில் வந்து நின்று விடும். எழுதிய எழுத்துக்களை சேர்த்து படித்தால் ஒரு பெயர் கிடைக்கும்.

நீங்கள் வந்து பேசியதற்கு மிக்க நன்றி. என்று சொல்லி விட்டு போட்டோ வைத்திருப்பவரின் பெயரை சொல்லி இவரின் உங்களின் உறவு முறையை சொல்லி. இந்த படத்தில் இருப்பவரை நீங்கள் எங்களுடன் பேச அழைத்து வரும்படி கேட்டு கொள்கிறோம். நீங்கள் போய் விட்டு அவசியம் அவரை அழைத்து வாருங்கள் என்று திரும்ப, திரும்ப சொல்ல வேண்டும். அவர் அழைத்து வருவார்.

புதிதாக வந்திருப்பவர் தான் வந்ததை அந்த வட்டத்திற்குள் வட்ட மடித்து தெரிவிப்பார்.

நீங்கள்- வந்திருப்பவருக்கு நன்றி. தங்களின் பெயர் என்ன என்று கேட்க வேண்டும். அவர் தன் பெயரை ஒவ்வொரு எழுத்தில் டப்பாவை நகர்த்தி தெரிவிப்பார். நீங்கள் சொன்ன உறவினர் பெயர் வந்தால் அவருடன் உங்களின் சொந்த விசயங்களை தொடர்ந்து பேசிகொண்டிருக்கலாம்.
உங்களின் உறவினர் வந்து விட்டால்  அவரிடம் சொல்லி நீங்கள் யாரை வேண்டுமானாலும் வரவழைத்து பேசி கொள்ளலாம்.

எக்காரணத்தை கொண்டும் பேசி கொண்டு இருக்கும் போது விரலை எடுத்து விட கூடாது. ஒவ்வொரு பதிலுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

அடுத்தவர் உட்கார்ந்து பேச வேண்டும் என்றால் ஒரே நேரத்தில் முதலில் பேசிகொண்டிருப்பவர் இருவரும் மாறக் கூடாது. சிறிது நேரம் இடைவெளி விட்டு ஒவ்வொருவராக மாற வேண்டும். புதிதாக பேச வருபவர் விரலை வைத்த பின் தான். முதலில் இருப்பவர் விரலை எடுக்க வேண்டும். அப்பொழுது தொடர்பு கொண்டு பேசுபவரிடம் சொல்லி விட்டே மாற்ற வேண்டும். அதற்கு அவரிடம் பதில் பெற வேண்டிய அவசியம் இல்லை.

பேசி முடித்து தொடர்பை துண்டித்து விடலாம் என்று நீங்கள் நினைத்தால்.
அப்பொழுது- நீங்கள் இது வரை வந்து எங்களுடன் பேசியதற்கு நன்றி. நீங்கள் போகலாம் என்று சொல்லி விட்டு டப்பாவை திருப்பி வைத்து விட்டு போர்டையும் உடனே எடுத்து விட வேண்டும்- இது மிகவும் முக்கியம்.                       தற்போதைய ஒஜா போர்ட்

இதில் ஏற்படும் பிரச்சனைகளில் சிலநாம் பேச ஆரம்பித்தவுடன் யாராவது ஒருவர் பேசவருவார். நாம் நம் உறவினர் ஒருவரை அழைத்து வரும்படி திரும்ப, திரும்ப சொன்னாலும் அவரே பேச ஆசை பட்டு போகாமலே இருப்பார். அப்பொழுது நாம் பேசும் தொடர்பை சுத்தமாக நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை. பின் சிறிது நேரம் கழித்து பேசுவதற்கு தொடங்க வேண்டும். எப்பொழுதாவது இது போல் நடக்கும்.

இந்த மீடியேட்டர் பவர் 15 பேரில் ஒருவருக்கு இருப்பது இல்லை. முதலில் பேச ஆரம்பிக்கும் சமயம் இருவரில் ஒருவருக்கு பவர் இல்லாமல் இருந்தால். பேசுவதற்கு யாரும் வர மாட்டார்கள். அதனால் 10,15 நிமிடம் ஆகியும் நகரவில்லை என்றால். ஆள் மாற்றி உட்கார்ந்து தொடர்பு கொள்ள வேண்டும். பெரும்பாலனவர்களுக்கு பவர் இருக்கும். சில பேருக்கு மட்டுமே இருக்காது. அது என்ன காரணம் என்று தெரியவில்லை

துர் மரணம் அடைந்தவர்களுடன் பேச முடியாது

கேரம் போர்ட் பெரியதாக இருப்பதால் அதிக நேரம் பேசும் போது கை வலி எடுக்க ஆரம்பிக்கும். அதை விட அளவு குறைந்த ஒரு அட்டையில் இதை போல் தயார் செய்து உபயோகிப்பது சிறந்தது.

சில எச்சரிக்கைகள்

சாமி படங்களை வைக்காமல் பேச வேண்டாம்.

தங்கள் மீது பிரியமாக இருந்த உறவினர்களிடம் மட்டுமே தங்களுக்கு உதவிடும் படியான ஆலோசனைகளையும், பதில்களையும் பெறமுடியும். முடிந்த மட்டும் உறவினர்களிடம் மட்டுமே தொடர்ப்பு கொள்ளுங்கள்.

அடிகடி பேசாமல் இருப்பது நல்லது. அடிக்கடி பேசும் போது நம்முடன் பேசுபவர்கள் எப்பொழுதும் நம் அருகில் இருப்பது போன்ற உணர்வும் அதனால் ஒருவித பய உணர்வும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
                             நன்றி.

நம்பிக்கையுடன் செயல்படுங்கள். கண்ணால் காணமுடியாத ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.

S.V. ராஜ ரத்தினம், கரூர்.

ஓஜா முறையில் பேசும் வீடியோ பதிவு
மேலும் சில தகவல்கள்

1  இந்து மதத்தில் சொல்லப்படும் பிறப்பு தத்துவம்

மாணிக்கவாசக சுவாமிகளின் பின்வரும் திருவாசகம்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவாராயத் தேவராய்ச்
செல்லா அநின்றவித் தாவர சங்கமத்து
ளெல்லா பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்”.


.


.2.. Ouija Board / Witch Boards / Talking boards...
Please Dnt Ever Try it.


Actually Its Relatively Easy to Call a Spirit but Very difficult to send it back specially if its of a
"Poltergeists"{Pls Check my first posts for details}.

I hve personally seen people bein Traumatised truout their Lifetime.

"Even if Ur a Non Believer den to Scientifically it has been proved dat people involved in using Ouija Board hve noticed lower concentration power n a Constant Fear of bein Followed."

"So its Ma Personal Request to all Stay Away from such Mediums".

Read on Further only on Ur own Risk n Concequences.

A ouija board is a medium tru which messages r supposedly communicated by d "Dead" to the "INTERPRETOR".
The playing pieces consist of a game board (like a Chess board) n a pointer also called a "PLANCHETTE".D board has all the letters of alphabet written on it. Also no's 0-9, along with yes-no n hello-goodbye. 

A few basic guidelines:-

1> Use a silver coin as the planchette, or wear an article made of silver. The silver is supposed to protect you from evil spirits.

2> To improve "communication" use a solid wood board.

3> {Most Important} Draw a circle around you and the board,or make a circle of candles on which you concentrate on creating a safe, protected place to drive away or keep at distance the evil spirits.

4> Now Make a Circle n touch each others Fingers.
Completly shut Ur mind 4m d Outside World n Concentrate on d Spirit U wanna call. Be Very Polite n Gentle in Ur Behaviour.

5> Always say goodbye to d entity Ur talking with when you want to end a session. If you don't say goodbye,or d spirit doesn't reply in kind, BEWARE he may be trying to STICK around n HARM U in some way. "Do not explicitly invite the spirit to enter someplace,since this will make it hard to get rid of him later.

Sometimes, a “WRITER” is necessary to translate the session as the pointer starts moving too fast for U to read and process the words it's spelling out.{A Writer dsn't Touch d board he's just a "Viewer"}

Don't take for granted or literally anything the board says.Ouija boards are famous for lying or otherwise giving false information.

Spirit are always trying to communicate with us and will take every opportunity to do so through whatever means is available, and this includes Ouija boards, remember not all spirits have good intentions, there are more of negative spirits around.
Like?


How to Make Ur Own Board :-

Designing your board :-

Step 1
Design your board. You will need to include numbers, the alphabet and relevant words like "yes" and "no." Include other elements that you find important. Choose a design that is personally meaningful.

Step 2
Place your design on paper or directly on a piece of wood, fiberboard or heavy cardboard. Draw or paint your board to make it both beautiful and easy to read. If your design is on paper, glue it to a board.

Step 3
Cover your Ouija board with plexiglass or glass if it does not have a smooth surface. Your board needs a slippery surface for the planchette to move easily. The plexiglass or glass does not need to be permanently adhered to the board. You can just cover it whenever you use your Ouija board. If the slippery surface is not heavy, tape it to your board or to the surface on which you will use the board.
Like?

RULES U must FOLLOW :-

1> NEVER PLAY ALONE!!! Evil spirits can harm you if you are alone.

2> NEVER HAVE LIGHTS ON! Lights hurt spirits. A candle or two is fine, even a small Flash light [torch] is okay.

2> NEVER ASK IF THE SPIRIT IS EVIL OR NOT!!! I am serious about this, asking if a spirit is evil or not is only bringing you into trouble. Evil spirits WILL lie. They can haunt you if you do ask this.

3> Ask how many spirits are in the room. It is just interesting to know. If there are over 2 spirits, then after each question say "All contribute to the board" - this way, each will help in answering your question. This will also help the "main" spirit have more energy so he or she could answer.

4> NEVER ANGER THE SPIRIT! I don't think this needs EXPLANATION

5> Have an open mind. If you believe the board isn't going to work, it probably won't.

6> Limit the number of people playing. Try not to have more than 4-5 people touching the planchette at once. If you have more than 4-5 people who want to try it, just take turns.

7> Don't try to contact anyone specifically. A good question to ask is "Is there anyone in the room with us now?".

8> When you say goodbye, PUT THE BOARD AWAY. This is because leaving the board out can invite more spirits to enter.

9> NEVER TRY TO TAKE VIDEOS OF SPIRITS WHILE PLAYING OUIJA. Seances are fine, but while playing Ouija, the videos won't show anything, other than what you see through the screen.

10 > Never EVER b Under d influence of ALCOHOL or DRUGS.
Like?

Prayer's

Invocation for Creating a Sacred Space (say before using the board):

Dear Spirit,
As I light these candles, bless this sacred place.
Let the light of their flames radiate love and protection to all four corners of this room.
I ask at this time that any negative energies be released from this space.
With a bath of white light, I ask that it be cleansed and neutralized.
Turn my dwelling into a sanctuary.
May it be the foundation for your teachings and the inspiration for my higher perceptions.


Invocation for Protection (another one to say before using the board):

Dear Spirit,
As I sit with you now, I open my heart.
I surround myself with the love and light of your protection.
I release any negativity that I have picked up throughout the day so that I speak to the universe with the purity of my soul.
I ask that any energy (information, healing) be given for my absolute good.
Dismiss now all energies that are not of the Highest and Greatest source.
As I bathe in your grace, I will listen to your resounding voice within me.
I will be true to my hear and your gentle guidance.
(you can follow this with a moment of appreciation for the universe...)


Invocation for Closing Your Connection and Your Sacred Space (say this one after you've finished using the board):

Dear Spirit,
Thank you for sharing this sacred time with me.
I appreciate the flow of energy I have just experienced.
I will use it for my highest good.
As I blow out these candles, I close this sacred space, and ask that your protection surround me wherever I go today.
Like?
Quote

STONE COLD ADMIN PROFILE - Jun 23, 2010
Guys dis Article n its Contents r according to ma Belief's n Understanding's of d

subject. In no ways mI trying to imply dat d Subject matter is precise n Perfect.

Although d same has worked absolutely fine wit me n ma Team. I wud yet Request :-

Try d Instructions at Ur Own Risk
God Bless n Take Care3. ஓஜா முறையை முதலில் உபயோகித்தவர்களின் விபரங்கள் வீடியோ பதிவு