1 ஜனவரி, 2013

கரூர் சௌடம்மனின் மகிமை


   கரூர்  சௌடம்மனின் மகிமைக்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்


முதன் முதலாக சங்கம் ஆரம்பிக்கும் போது, சங்க செயல் பாட்டின் முக்கிய திட்டமாக, கரூர் தேவாங்க மக்களை ஒன்று கூட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், வருடம் ஒரு முறை கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அதில் செளடம்மனை வழிபடலாம். என்று விண்ணப்ப படிவத்தில் போட்டிருந்தோம்.

அதன் படி தனியார் மண்டபத்தில் எப்படி கும்பிடுவது என்பதை பற்றி விசாரிக்க ஆரம்பித்தோம். பலரும் அப்படி எல்லாம் கும்பிட முடியாது. நீங்கள் கும்பிட வேண்டும் என்று நினைத்து விட்டால் யாரவது ஒருவர் கோவிலுக்கு என்று இலவசமாக இடம் கொடுப்பார்கள்.என்றே பலரும் சொன்னார்கள்.

கரூரில் இடத்தின் விலை அதிகம் அப்படி இலவசமாக இடம் கொடுக்க யார் இருக்கிறார்கள். இது நடக்காத விசயம். என்று சொல்லி கொண்டிருந்தோம்.

நடந்தது என்ன வென்றால்.

சங்கம் ஆரம்பித்து ஆறு மாதத்தில் செளடேஸ்வரி மகளிர் குழு ஒன்று அமைத்தோம். மாதம் ஒரு முறை பெண்கள் கூட்டம் போட்டு தங்களுக்குள் கலந்துரையாடுவது. அல்லது சந்தித்து கொள்வது  என்பது மட்டுமே திட்டம்.

முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பெண்களும் 20,30 வருடங்களாக வாடகை வீட்டிலேயே இருக்கிறோம். ரூ. 30,000/-க்குள் ஒரு இடம் ஏதாவது வாங்கி கொடுத்தால் இருக்கும் நகைகளை விற்றாவது வாங்குகிறோம். அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார்கள்.

மகளிர் குழுவில் தெரிவித்த கருத்தின்படி சதுர அடி ரூ. 25, 30 க்கு கரூரில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகத்திலேயே சங்கத்தில் முடிவு செய்யபட்டு கரூரிலிருந்து 10 கிமி சுற்றளவுக்கு உள் ஏக்கர் 5 லட்சத்தில் தேடி பிடித்து ஏழு ஏக்கர் வாங்கப்பட்டது. சங்கத்தில் எந்த பணமும் இல்லை. இடம் கேட்ட உறுப்பினர்களிடமே பணம் வாங்கி மனையாக பிரித்து 111 உறுப்பினர்களுக்கு மனையாக கொடுக்கபட்டது. ஒரு சதுர அடி ரூ 27/ தான். மற்ற பக்கத்து இடங்களை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு. இதில் மீதமான இடம் கோவிலுக்கு என்று ஒதுக்கப் பட்டது.  

.செளடம்மனை கும்பிட வேண்டும் என்று திட்டம்  போட்ட  ஆறு  மாதத்திற்கு  உள்ளாகவே ,எந்த பணசெலவும் இல்லாமல் இலவசமாக 18,000 சதுர அடி இடம் கிடைத்தது. மீத மான தொகையில் மகாஜன சபை கட்டிடமும் கட்டபட்டது. இப்படி அமையும் என்று யாரும் நினைத்து கூட பார்க்க வில்லை, கற்பனை செய்து கூட பார்க்க வில்லை. கல்யாண மண்டபத்தில் கும்பிட நினைத்த நம்மை சொந்த இடத்தில் ஒரு வருடத்திற்க்குள் கும்பிட்டோம்  இது கரூர் சௌடம்மனின் மகிமையே  அல்லாமல்  வேறு  என்னவென்று  சொல்ல முடியும்.


 2.  பல ஊர்களில் இருந்து வாங்கி வந்திருந்த திரு நீற்றை கத்தேவு பெட்டியில் வைக்கும் திரு நீறு பையில் நிறைத்து வைத்து விட்டு ஜம்முதாடு கத்தியை வைத்து முதன் முதலில்அதற்கு தீபாராதனை காட்ட சூடம் பொருத்தியவுடன் குழந்தையின் சத்தம் போன்று ஒரு சத்தம் கேட்டது .அங்கிருந்த அனைவரின் உடலும் சிலிர்த்தது.பட்டக்காரரும் இதை உணர்ந்து சௌடம்மன் வந்து விட்டார் என்று சிலிர்ப்புடன் கூற அனைவருக்கும் மீண்டும் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டதை அனைவரும் உணர்ந்தோம்

 3. ஸ்ரீ சௌடாம்பிகா நகரில் இடம் பிரிக்கப்பட்ட போது பணம் கொடுத்தவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவுகளில் இடம் கேட்டார்கள்.அவர்கள் கேட்ட  அளவுகளில் இடம் கொடுக்கப்பட்டதுஇது எளிதான காரியமல்ல .அம்மனின் அருள் இல்லாமல் நடந்திருக்க முடியாது

 4. குலுக்கல்  முறையில் 111 பேருக்கு இடம் தேர்வு செய்த போது பல ஆச்சர்யமான நிகழ்வுகள்நடத்தி அம்மன் தான் இருப்பதை உறுதி செய்தார்.உதாரணமாக கோவிலுக்கு அருகில் உள்ள ஒன்றாம் எண் கொண்ட முதல் மனை ஊர் செட்டியாருக்கு விழுந்தது

 5.  மூன்று வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக பூஜைகள் செய்து வந்த 38 வயதுடைய மதிப்பிற்குரிய பூசாரி  K.M. லோகனாதன் அவர்கள்  11 -5- 2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் .

பொதுவாக வாரம் இரண்டு நாள் செவ்வாய், வெள்ளி கிழமை காலையில் பூஜை செய்யப்படும். இந்த வேலைகளை பேங்கில் வேலை செய்யும் திரு. K.M.லோகனாதன் அதி காலையில் சென்று  பூஜை செய்து விட்டு தன் வேலைக்கு சென்று விடுவார். கோவில் ஊரிலிருந்து 10 கி.மீ தள்ளி இருப்பதால் அமாவாசை தினம் தவிர மற்ற தினம் யாரும் கோவிலுக்கு வர மாட்டார்கள்.

காலமான அன்றைய தினம்  கலையில் கோவிலில் பூஜை செய்த போது  அவருக்கு சௌடம்மன் தத்ரூபமாக  ஜெகஜோதியாக காட்சி அளித்திருக்கிறார்.  இதை பார்த்து அதிசயபட்டு,  என்ன செய்வது என்று புரியாமல் வீட்டிற்கு வந்தவுடன்  இந்த  விஷயத்தை தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
 
மூன்று வருடமாக பூஜை செய்து வந்தாலும் கோவில் சம்மந்தமாக எந்த ஒரு விசயத்தை பற்றியும் தன் அம்மாவிடம் அதுவரை  சொன்னது இல்லையாம். இதை சொன்னவுடன் அவரின் அம்மா இதை யாரிடம் சொல்வது சொன்னாலும் யாரும் நம்புவார்களா என்ற யோசனையிலேயே இருந்திருக்கிறார்.  

மறு நாள் சனி கிழமை பூசாரி தன் நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து காசி, கயா போன்ற புன்னிய ஸ்தலங்களுக்கு  யாத்திரை செல்வதாக திட்டம். 

அதனால் வெள்ளி கிழமை போங்க் வேலை முடிந்தவுடன் அன்று மாலை தன் குடும்பத்தாருடன் சந்தோஷமாக பொழுதை கழிக்க  கரூரில் நடந்து கொண்டிருந்த பொருள் காட்சிக்கு தன் குடும்பத்தாருடன் சென்றார். தன் இரண்டு சக்கர வண்டியை நிறுத்தி விட்டு  அவரும், இரண்டு குழந்தைகளும், அடுத்து அவரின் மனைவியும் கைகோர்த்தபடி டிக்கட் கவுண்டருக்கு  சென்று இருக்கிறார்கள். வண்டியை நிறுத்தி விட்டு சென்ற 10, 15 அடி தூரத்திலேயே  அப்படியே சுருண்டு விழுந்து இறந்து விட்டார். எந்த ஒரு சத்தமோ, துள்ளலோ, துடிப்போ எதுவுமே இல்லை. எதனால் இறந்தார் என்ன காரணம் என்று டாக்டர்களால் சொல்ல முடியவில்லை. காலமாகிவிட்டார்

அதன் பிறகுதான் அவரின் அம்மா தன் மகன் காலையில் செளடேஸ்வரி அம்மன் காட்சி கொடுத்ததை சொன்னதாக சொல்லி அழுதார். அதன் பிறகு தான் அனைவருக்கும் இந்த விசயம் தெரிந்தது.

அவரின் வாழும்  காலம் அன்று முடியபோவதை நினைத்து இது வரை தனக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக அம்மன் அவருக்கு ஆசி வழங்கி காட்சி கொடுத்தார் போலும்.

 6.  9 -7- 2012  திங்கள்கிழமை அன்று சௌடம்மன் அன்பே உருவான தன் சுய உருவத்துடன் கடவுள் சிந்தனையே இல்லாத  21 வயதுடைய  ஒரு  பையனின் வீட்டிற்கே வந்து கோவிலுக்கு அழைத்து சென்று அன்புடன்  உரையாடி   யிருக்கிறார்  மேலும் தனக்கு துணையாக இருக்ககூடிய   ஐந்து நாய்களை (பைரவர்) வித விதமான கலர்களில் காட்டியிருக்கிறார்

 தனக்கு கோவில் எழுப்ப வேண்டும் என்றும் இதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அனைவரும் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டம் வகுத்தால் தானே கோவில் கட்டி முடித்துக் கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார் எதுவும் தெரியாத பையன் தான் பார்த்த சௌடம்மனின் சுய உருவத்தை பையன் விளக்கி கூறிய போது ஆச்சரியப்பட வைத்தது

 7. மூன்று மாதங்களுக்கு முன் புன்னம்சத்திரத்தில் உள்ள சங்க கட்டிடத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பெரிய  கண்ணாடி உடைக்கப் பட்டிருந்ததுஇரண்டு பாத்ரூம்களின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது . மேலும் கிணற்றின் ஆயில் இஞ்ஜினின்  சிறியப்பகுதி  ஒன்று உடைக்கப் பட்டிருந்தது இதை செய்தது யார் என்று தெரியவில்லை

12 -10- 2012 அன்று புன்னம்சத்திரம் ஊர்காரர்கள் கோழி திருட வந்த பள்ளிக்கூட பையன்ஒருவனை பிடித்து வைத்துக் கொண்டு  சங்கத்தார்களையும் வரச் சொல்லி தகவல்கொடுத்திருக்கிறார்கள்

 போய் விசாரித்த போது அந்தப் பையன்  தான் எதுவும் செய்யவில்லை என்றும் இன்னொரு பையனின் பெயரை சொல்லி அவன் தான் இவ்வளவும் செய்தான் என்றும்அந்த பையன் இரண்டு மாதமாக கை ஒடிந்து கட்டு போட்டிருக்கிறான் .இரண்டு மாதமாக பள்ளிக்கும் செல்லவில்லை என்று சொன்னான்

 நம் இடத்தில் உள்ள பொருளை சேதம் செய்த அந்த பையனுக்கு நம் கரூர் சௌடம்மனே தண்டனை கொடுத்திருக்கிறார்

                                   மகிமைகள்  தொடரும்........................   S.V. ராஜ ரத்தினம் , செங்குந்தபுரம் ,கரூர் - 2. செல் -9443425240