17 ஜனவரி, 2013

தேவாங்கர் அம்மன் பாடல்கள்

                                                                                          

                      ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன்  துணை

ஓம்சக்தி என்றாலே ஓடோடி வருபவளே ஓயாத நெசவை தாருமம்மா !!

அறம்வளர் தேவியே சௌடாம்பிகா 
அடியவர் துயர் துடைக்கவே - பூக்குழியில்
அடியெடுத்து ஆர்பரிக்கும் அங்காளி நீயே !

ஆயிரம் ஆயரம் காலமாக நெய்வாளார் 
ஆராட்டி மகிழும் அற்புதமே !
ஆலால கண்டனின் துணை நீயே !

இஷ்டப்பட்டு கட்டினோம் கோட்டை வெல்லத்திலே -
இன்பமாய் நெசவாளர் வாழ்வு செழிக்கவே!!
இராமலிங்கரோடு கலியுகத்தில் எங்களை காப்பவள் நீயே

ஈரேழு லோகம் காக்கும் ஜகன்மாதா
ஈசனிடத்தில் சரிபாதி பெற்ற திலகமே !
ஈச்சனாரி வாசனின் தாயான கற்பகம் நீயே !!

உன்னை நினைக்கவே கஷ்டத்தையும் கொடுத்து 
உன் மக்களுக்கு துணை நின்று வெற்றியும் கொடுப்பாய்
உன்னை நம்பியோரை கைவிடாத உமையவள் நீயே !!

ஊரூராக திரிய வைத்தாய் ஆதியிலே 
ஊக்கமும் அளித்து வேர் ஊன்ற செய்தாய் - அதனாலே 
ஊரெல்லாம் பரவுதடி உன் மகிமை !!

எங்கள் தேவாங்க குல நாயகியே 
எங்க ரத்தம் கொடுத்து உன்னை அழைத்தோம் 
எல்லா பிணியிலிருந்தும் காப்பவள் நீயே !!

ஏதுமறியா வீரக்குமாரனை அரவணைத்தாய் 
ஏன் என்ற கேள்வியை கேட்க்க வைத்து !
ஏழு உலகுக்கும் மானம் காக்க வைத்தவள் நீயே !!

ஐங்கரனின் தாயான பரமேஸ்வரி - எங்கள் 
ஐயமெல்லாம் நீங்கிடுமே "சௌடேஸ்வரி" - உந்தன்
ஐந்தெழுத்து பெயரை நினைத்தாலே !!

ஒன்பது நாள் ராஜகொலுவிருக்கும் அம்பிகையே 
ஒருநாளும் உன்னை மறவாத கூட்டமம்மா - எங்களுள் 
ஒற்றுமையை நிலைநாட்ட வரம் தாருமம்மா !!

ஓம்சக்தி என்றாலே ஓடோடி வருபவளே
ஓங்கார வேலனின் சக்தியே ! எங்களுக்கு - ஒருநாளும் 
ஓயாத நெசவை தாருமம்மா !!

ஜோதிமணி மகுடதரிணி .. பவள வாய் சிரிப்போடு !
பளபளக்கும் பட்டுடுத்தி ... முத்து மூக்குத்தியும் 
வைடூரிய அட்டிகையும் ... வைர வங்கியும் 
தங்க ஒட்டியாணமும் .. காசு மாலையும்
கலகலக்கும் கெஜ்ஜையும் கட்டி !
தத்தி தத்தி அன்ன நடை போட்டு !!
சப்பரத்தில் தங்க முக்காலியில் அமர்ந்து - நீ ஆடும் 
ஆனந்த நடனம் காணக் கண்கோடி வேண்டுமன்றோ 

ஸ்ரீ வீர சௌடேஸ்வரி !!!!

ர.பார்த்திபன் 
பொள்ளாச்சி
13-10-14

தேவாங்கர் வம்ச பாடல்

                                                             - ராஜ ரத்தினம்.


இராஜ வம்ச மம்மா நம்மு தேவாங்கர் வம்ச,
தொட்டு ராஜ்ஜியன கட்டி ஆண்ட தம்மா நம்மு வம்ச

பரமசிவன் நெத்தி கண்ணுலித்து, பந்த தம்மா நம்மு வம்ச
பாற்கடல் திருமாளுத்தற, சக்கர ஆயுதன தெய்தது நம்மு வம்சத் தம்மா
பரமசிவன்தர வெற்றின கொடா, நந்தி கொடின தெய்தது நம்மு வம்ச
பார்வதி, சௌடாம்பிகங்கே பந்து காட்சி கொட்டுது நம்மு வம்சகத் தம்மா

இராஜ வம்ச மம்மா நம்மு தேவாங்கர் வம்ச
தொட்டு ராஜ்ஜியன கட்டி ஆண்ட  தம்மா நம்மு வம்ச

தேவுரியனு, மனுஷ மக்குளியனு மானன காப்பாத்தா, அங்கி கொட்டுது நம்மு வம்ச
தேவுர்களியே அங்கி கொட்டுதுனாலே, தேவ அங்கம்ந்து  எசுரு  தெய்தது  நம்மு வம்சத் தம்மா
சூரிய தேவனோட தங்கின மதிவே மாடிது நம்மு வம்ச
அத்து சாவரே குலங்கே பெரிகிது நம்மு வம்சத் தம்மாஇராஜ வம்ச மம்மா நம்மு தேவாங்கர் வம்ச
தொட்டு ராஜ்ஜியன கட்டி ஆண்ட தம்மா நம்மு வம்ச

ஆபத்துந்து கூங்கிறே ஓடோடி பத்தெனந்து, சவுண்டம்ம வாக்கு கொட்டுது  நம்மு வம்சகத் தம்மா
அமாவாசை தினதிலி, சௌடம்மன மொக்கி கொண்டாடாது நம்மு வம்சத் தம்மா
அம்முனு சலங்கெ சத்துதிலி, ஏம்மாந்தது நம்மு வம்ச
அதுனாலே, சலங்கே கட்டிண்டு, கத்தி ஆக்கி அம்மன மொக்காது  நம்மு வம்சத் தம்மா

இராஜ வம்ச மம்மா நம்மு தேவாங்கர் வம்ச                                                                         தொட்டு ராஜ்ஜியன கட்டி ஆண்ட தம்மா நம்மு வம்ச

சாவித்திரி தேவின காயத்திரி தேவிங்கே, உருவாசி கொட்டுது நம்மு வம்ச
காரிய சித்தி ஆகக்க, பூணூல் உருவாசி கொட்டுது நம்மு வம்சத் தம்மா
காயத்திரி தேவியே, மூறாவது காலு கொட்டுது  நம்மு வம்ச
மந்திரலே மகா மந்திர, காயத்ரி மந்திரன கொட்டுது நம்மு வம்சத் தம்மா

இராஜ வம்ச மம்மா நம்மு தேவாங்கர் வம்ச
தொட்டு ராஜ்ஜியன கட்டி ஆண்ட தம்மா நம்மு வம்ச

சௌடம்மவே பந்து,  கங்கன கட்டிபுட்டுது நம்மு வம்சகத் தம்மா
சௌடம்முனியே கரக எத்தி மொக்காது நம்மு வம்சத் தம்மா - அம்மா!
சௌடம்மா!  கையெத்தி மொக்குத் தெரம்மா, நம்மு வம்சன காப்பாத்து பேக்கம்மா.
சௌடம்மா தாயே, சவுடாம்பிகை  அம்மா.

 - நான் எழுதிய முதல் பாடல்                                    

 -S.V. ராஜ ரத்தினம்,  
  கரூர்.  

                                              *****************************
ஆஷாட நாயகி சௌடேஸ்வரி

                                                                        - பார்த்திபன்

நீல வண்ண பட்டுடித்தி
நித்திலமாய் நீலகண்டன் இடப்பாகம் கொலுவிருக்கும்
எங்கள் குல தேவியம்மா !!

மக்களோட துன்பம் தீர - உன்
மல்லிகை அடிஎடுத்து குண்டத்தில் நடந்துவந்தாய் !!

தன் குழந்தை குரல் கேட்டு மனம்
தாளாது ஓடோடி வந்து குலம் காத்தாய் !!

வெள்ளியிலே விண்ணுயர கோவில்கட்டி
தங்கத்திலே கோபுரம் வைத்தாலும்
தித்திக்கும் வெல்லத்து கோட்டையிலே தான் நீ அமர்வாய்...!!!
மாணிக்க பந்தலிட்டு மனமுருகி நின்றாலும்
தேன்கரும்பு பந்தலில்தான் நீ கொலுவிருப்பாய் !!

ஆஷாட அமாவாசை இரவிலே
கோடி சூரியபிரகாசமாய் தோன்றிய சந்திரமதி நீ !
உன்னை வணங்க உன் மக்கள் எல்லாம் - நீ
நிலைகொள்ளும் தரிக்குழியை தான் விடுத்து
தலையிலே தீர்த்தம் ஏந்தி உன் வாசல் வருகிறோம் !!
சொன்ன சொல் தவறாமல் எங்களை காப்பாயே
எங்கள் குல தெய்வமே !!!

தேவலரை எங்களுக்கு காப்பாற்றி கொடுத்து எல்லோர்
மானம் காக்கும் கடமையை செய்யவைத்து கெச்சாள நாயகியானாய்!!

அமாவாசை நாயகியே!!! ஐந்திரண்டு ஏழு பேருடன்
விளையாடிய படியே ஈரேழுலோகமதில் புகழுடன்
எங்கள் குலம் வாழ அருள்புரிவாயே
ஆஷாடநாயகி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரியே !!!

-.பார்த்திபன்

பொள்ளாச்சி
                  ***************************************

அமாவாசை அன்னை

                        - நித்தீஷ் செந்தூர்

ஆடி அமாவாசையன்று அவதரித்த அன்னையே
அகிலமெல்லாம் வாழும் மக்களுக்கு ஆடை நெய்ய சொன்னியே
சகல சௌபாக்கியங்களை நல்கும் சௌடேஸ்வரியே
தேவாங்க மக்களின் குலத்தெய்வம் நீயே

கத்தியிட்டு நாங்கள் அழைத்தோம்
கருணையோடு பேச வருவாய்
கரும்பு பந்தலில் கொலுவிருந்து
கண்கொள்ளா காட்சி அளித்தாய்

வீரத்துடன் வீரகுமாரர்கள் தண்டகங்கள் முழங்க
வீரமுட்டியும் காவலுக்குத் துணை நிற்க
வீதி வீதி எல்லாம் நீ பவனி வர
விரதங்கள் நிறைவேறுமே நீ அருள் புரிய

- நான் எழுதிய முதல் பாடல்

- நித்தீஷ் செந்தூர்
 சிங்கப்பூர்.

                                 **************************************
ஐக்கியமாக காத்திருக்கிறோம்..வாருமம்மா.

                                                                                   - Jaya Kumar R

அடி எடுத்து வைத்து ஆடி ஆடி வருவாய் தாயே....
ஆடியிலே எங்களுடன் ஓடி ஆடி விளையாட..
உனக்காகவே வாசலில் காத்து இருக்கிறோம் தோரணம் கட்டி..
உன் பூ பாதத்தை எடுத்து வைத்து வாருமம்மா..
மஞ்சள் அரைத்து வைத்துள்ளோம்...
மங்களமே நீ வருக...
குங்குமத்தை குவித்துள்ளோம்....
எங்கள் குல தாயே வருக...
ஐந்து நாட்களுக்கு அழைக்கவில்லை...
உன்னுடன் ஐக்கியமாக காத்திருக்கிறோம்..
உன் பொற்பாதத்தில் சரணடைந்தோம்..
எங்களை நீ காக்க வேண்டும் தாயே...

           எங்கள் குல தெய்வமே-செளடம்மா

                                                                                                  -  பவித்ரா
                                                     


அமாவாசை இருளில் எங்களுக்கு ஒளி தரவே
முழுமதியாய் பிறந்தாயடி
எங்கள் குல தெய்வமே-செளடம்மா


ஜென்மங்கள் கோடி கடந்தாலும்
சொந்தங்கள் மாறாமல்
இன்பமாய் பூத்திருப்போம்
எங்கள் குல தெய்வமே-செளடம்மா

எத்திசை சென்றாலும் ஒன்றானோமடி
நாம் பேசும் மொழியாலே
பல வண்ணங்களாய் மாறிய போதும்
ஒர் வானவில்லாய் சேர்ந்திருப்போம்
எங்கள் குல தெய்வமே-செளடம்மா

சலங்கை ஒலியை தந்தோமடி உன் சந்நிதியிலே
சங்கடங்கள்  நீக்கி சந்தோசம் தந்தாயே
கண்கள் கண்ட கனவுகள் யாவும்
நிஜமாய் ஆனதடி
எங்கள் குல தெய்வமே-செளடம்மா

நீ ஆட்சி செய்யும் காலம் வரை
எங்களுக்கு வீழ்ச்சி என்பது இல்லையே
ஏதோ ஒரு தனித்துவம் உன்னிடம் தானே இருக்குதடி
எங்கள் குல தெய்வமே-செளடம்மா


-R. பவித்ரா. 

கரூர். 
                                               
                   ********************************

தேவாங்க குலமகள் சந்திரமதி
                                 பார்த்திபன்


அறம் வளர் நாயகியே !
அகிலம் போற்றும் அன்னையே !!
அத்திவரதனின் அற்புதத்தங்கையே !
பரந்தாமனில் பாதியே!!
தேவாங்ககுலத்தை தோற்றுவித்த தாய்
சௌடாம்பிகை நீயே !!

சுடரொளியாய் மின்னும் மணிமகுடம் தரித்து
சூடாம்பிகை ஆனாய் !
சிலிர்த்திடும் சிங்கத்தின்மீது அமர்ந்து
சிம்ஹவாகினி ஆனாய் !!
தேவலனை அசுரரிடமிருந்து ஆட்கொண்டாய்
தேவாங்க குலமகளே !!

மாசி  சிவன்ராத்திரியில்  பள்ளயத்துபூஜை
காணும் செங்கமலநாயகியே !
அலகுசேவை  கண்டு  மனம்நெகிழ்ந்து -
பத்தாயிரம் குலங்களை வாழவைக்கும்
சந்திரமதியே !!!

அச்சுவெல்ல கோட்டைகட்டி !
அழகுகரும்பு பந்தலிட்டு !!
வண்ணவண்ண பூமாலைசூட்டி !
வீரகுமாரர்கள் கத்தியிட்டு !!
தெண்டகங்கள் சொல்லகேட்டு !
மகாசக்தியாய் - ஸ்ரீசாமுண்டியாய்
மகாஜோதியாய்பூக்குண்டமாய் அருளி!!
பச்சிளம் குழந்தையாய் அடம்பிடித்து !!
இரத்தின ராஜசிம்ஹாசனம் தரித்து -
பெரியநோன்பில் கொலுவிருக்கும்
வீரசௌடேஸ்வரி தாயே !!

நெய்வாளர்கள் நாங்கள் அல்லும்பகலும்
பாடுபட்டு - ஒற்றுமையாய்
நெசவுதொழில் புரிந்து இப்பாரினில்
வாழ அருள்புரிவாயே !!
எங்கள் குலதெய்வமே !!!
ஸ்ரீஇராமலிங்கசௌடாம்பிகையே !!!

- .பார்த்திபன்
பொள்ளாச்சி

                 ******************************************

      வழி நடத்தி காத்திடவேண்டுகின்றோம்!  தாயே!
                                                                                                      - கிரி

மஞ்சள் நிற பட்டு உடுத்தி மங்களமாய்
கொலுவிருக்கும் அம்பிகையே!
எங்கள் குல நாயகியே சௌடேஸ்வரி தாயே!
மங்களங்கள் எங்கள் வாழ்வில் பெருகிடவே
அருள்புரிவாய்

சிகப்பு நிற பட்டு உடுத்தி சிங்காரமாய்
வீற்றிருக்கும் சிம்ஹவாகினியே!
சிம்மம் அதில் ஏறிவந்து எங்கள்
சிக்கல்களை தீர்த்திடுவாய் !
ஆடி அமாவாசையிலே அவதரித்த தேவி நீ !
ஆஷாடநாயகியானாய்!
தேவாங்க குலத்தினை தோற்றுவித்த
தாய் நீயே !
தேவாங்க குலத்திற்கே அன்னையாக
ஆனாய் !

சக்தியாக உன்னை அழைக்க
சாந்தத்துடன் நீ வருவாய்
சாமுண்டியாய் உன்னை அழைக்க
சங்கடங்களை தீர்த்திடுவாய்
ஜோதியாக உன்னை அழைக்க
நம் மக்கள் வாழ்விநிற்கே ஒளிகொடுப்பாய்!
குண்ட சக்தியாய் உன்னை அழைக்க
கஷ்டங்களை தீர்த்திடுவாய் !
மஞ்சள் நீர் மெரவணையில் ஆனந்தமாய்
நீ இருந்து மக்கள் வாழ்வினிலே
ஆனந்தம் அளித்திடுவாய்
நீ தோற்றுவித்த உன்மக்கள் உன்தாழ் பணிகின்றோம் !
எப்பொழுதும் எங்களுடன் நீ இருந்து
வழி நடத்தி காத்திடவேண்டுகின்றோம்!
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரியே!!


-- கிரி , செம்மணஹள்ளி
                               ***************************
நீனு அலங்காரமாடி கொலு குத்திருவாக- தாயே!
                                              Partha Sarathi

வீர செளடதாம்பா:
ஆதி செளண்டம்ம நீனே
தாயே செளண்டம்மா நீனே
சரணகொடு பேக்கம்மா நீனே
நீனு கொலுவிருவ
சிங்காரன நோட பேக்கம்மா
காலிலி கெஜ்ஜே கட்டி
காலிலி மிஞ்சு மிஞ்சுகிண்டு ஜெக ஜோதியாகி
கொலுசுகளு தும்ப ஆக்கிண்டு
நெடுவிலி ஒட்டியாண
கொரளிலி பதக்க கண்ட சரவு
கைனல்லி கல கலந்த பளைகளு
அத்து பெரளிகெ உங்கர
தலையிலி சந்ரபிறை, சூரிய பிறை
நெத்தி சுட்டி அலங்கார
மூங்கிலி வைர மூங்குத்தி
கிமேலி தாடங்க பள பளந்து
கொரளு தும்ப காசினுமாலெ
நீனு அலங்காரமாடி கொலு குத்திருவாக
தளிகை பூஜையல்லி வீரகுமாரரு
ஜல, ஜல, கத்தி, சல, சல தண்டக சத்தகளு
நின்ன பூஜை நெடெதேரி

அருள் கொட்டு காப்பாடு பேக்கம்மா

இருமனேர் குலமகள் ஸ்ரீவீரமல்லம்மாள்

                                            பார்த்திபன்

சக்தி அழைத்தோம் அம்மா வீரமல்லம்மா ...
சித்திரையில் நோன்பிருந்து
வளர்பிறை புதனில்
அழகிய திருவளர் திம்மராயம் பதியிலே ....
பவானி ஆற்றின் கரையிலே ...
ஒய்யாரமாய் உனக்கு பந்தலிட்டோம் கரும்பிலே .....
வெல்லத்தில் கோட்டைகட்டி !
வெற்றிலையில் தோரணம் அமைத்து !!
பலவித கரகம் ஜோடித்து .....
பேழையிலே உன்னை கொலுஅமர்த்தி ...
அலகுவீரர்கள் தெண்டகங்கள் சொல்ல ....
பெண்மக்கள் எல்லாம் உன்னைவேண்டி தொழ ......

வீரர்கள் உன்னை சக்தியாய் பேழையிலேஏந்தி ...
குழந்தையாக நீ அடம்பிடிக்க !
உதிரம்சொட்ட கத்தி இட்டு
ஊரெல்லாம் உன்னைசுற்றி ...
கோவில் அடைந்து ....மகாபூசனைகள் செய்து
இருமனேர்குலம் தழைக்க...
எண்ணுமக்கள்  எல்லாம்வளம்  பெற .....
மகாஜோதியை  ராகுதீபமாய்  எடுத்து
உனக்கு  சீராகபடைத்து  உன்னைவேண்ட!!!
சகலகுலங்களையும்  வாழவைக்கும்  சௌடேஸ்வரி நீ !
பெரியவீட்டுகாரர்  பட்டம்பெற்ற ...
இருமனேர் குலமகள் ஸ்ரீவீரமல்லம்மாள்ஆக அருள்புரிவாயே !!!

- .பார்த்திபன்
பொள்ளாச்சி
                  *********************************

தேவாதி தேவர்களுக்கு மூத்தவள்

                                  - நித்தீஷ் செந்தூர்

சூரிய கோடி பிரகாசமாய் ஜொலிப்பவளே
சூலம் ஏந்தி காட்சி தருபவளே
சிங்கத்தின் மீது அமர்ந்தவளே
நமது குலத்தாயே
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரியே

தேவல முனிவரைக் காத்தவளே
தேவாதி தேவர்களுக்கு மூத்தவளே
தேடி வந்து அருள்பவளே
தேவாங்கர் இல்லங்களில் கொலுவிருப்பவளே
நமது குலத்தாயே
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரியே

போற்றி போற்றி

நித்தீஷ் செந்தூர்
- சிங்கப்பூர்.