அம்மன் கவசத்தில் தோன்றும் திருநீறு
நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளியில் உள்ள செளடம்மன் கோவிலில் அம்மன் அணிந்திருக்கும் வெள்ளி கவசத்தில் இருந்து.திருநீறு தோன்றுகிறது.
2013 செப்டம்பர் மாதம் சீரப்பள்ளியில் உள்ள செளடம்மன் கோவிலில் உள்ள செளடம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவித்திருக்கிறார்கள். அன்று இரவு கோவில் பூட்டும் சமயத்தில் கவசம் முழுவதும் திருநீறு படிந்து இருக்கிறது.
அது ஏதோ வெள்ளையாக ஏதோ ஒட்டியிருக்கிறதே என்று அதை துடைத்து விட்டு இருக்கிறார்கள். மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது மீண்டும் அதே போன்று அதிகமாக படிந்து இருக்கிறது. அதை சதாரணமாக எடுத்துக் கொண்டு மீண்டும் துடைத்து விட்டு இருக்கிறார்கள். மறுபடியும் 2 மணி நேரத்தில் அதேபோல் சிலை முழுவதும் படிந்திருக்கிறது. மறுபடியும், மறுபடியும் துடைத்து விட மீண்டும், மீண்டும் திரு நீறுபடிய அதன் பின்தான் மற்றவர்களுக்கு தெரியபடுத்தி இருக்கிறார்கள்.
சுற்றுபட்ட கிராமங்களில் இருந்து. இதை பார்க்க மக்கள் சாரி,சாரியாக வந்து பார்த்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
அதன் புகைப்படம்
யாககுண்டத்தில் எழுந்தருளிய செளடம்மன்
மதுரை வில்லாபுரத்தில் உள்ள செளடம்மன் கோவில் கும்பாபிஷேகம் 2013ம் வருடம் நடை பெற்றது.
அப்போது நடைபெற்ற யாகத்தின் போது யாககுண்டத்தில் எழுந்தருளிய செளடம்மன் தோற்றத்தின் புகைபடம். வட்டமிட்டு காட்ட பட்டிருக்கிறது
கண் திறந்து காட்டிய செளடம்மன்
சிவகாசியில்
உள்ள தாயில் பட்டியில் இராமலிங்கபுரம்
எரியாவில் இருக்கும் செளடம்மன் கோவிலில் விழா நடைபெற்றது. 31.5.2013 வெள்ளிக்கிழமை அன்று
சக்தி நிலை நிறுத்தும் விழா.
முதல் நாள் 30.5.2013 வியாழக்கிழமை அன்று அபிஷேகம் நடைபெற்றது
பால் அபிஷேகம் நடந்த போது செளடம்மன்
கண் திறந்திருக்கிறார். அங்கிருந்த அனைவரும் பார்த்திருக்கிறார்கள். பூசாரி மிரண்டு போய்
கோவிலை விட்டு வெளியே வந்து
விட்டதாக சொல்கிறார்கள். மீண்டும் அம்மனை அலங்கரித்திருக்கிறார்கள். அப்பொழுது அம்மன்
1.30 நிமிட நேரம் வரை கண்
திறந்திருந்த தாகவும், அந்த ஊரை சுற்றி
உள்ள மக்கள் திரண்டு வந்து
பார்ததாகவும், போட்டோவும் எடுத்து கொண்டதாக பலர்
சொல்கிறார்கள். அந்த செளடம்மனின் புகை
படம்.
தெய்வ மகிமைகள்