நண்பர்களே! இறந்தவர்களுடன்
தொடர்பு கொண்டு நான் பேசிய என் அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உடன் வேலை செய்த
நண்பர் ஒருவர் இப்படி தொடர்பு கொண்டு பேசியதை
அறிந்து. அவர் மூலம் கற்று கொண்டேன்.
எனக்கு முதலில்
இதில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. அவர் பொய் சொல்கிறார் என்று நிருபிக்கவே நான் முதலில்
அவருடன் பேச உட்கார்ந்தேன். அவர் சொன்னது போலவே நகர்ந்தது. அப்படியும் அவர் தானே நகர்த்துகிறார்
என்று கூறி அவரிடம் நம்ப முடியாது என்று சொல்லி
விட்டேன்.