விழா நிகழ்ச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழா நிகழ்ச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4 பிப்ரவரி, 2014

செளடம்மன் விழா-முள்ளின் மீது நடக்கும் பக்தர்கள்



 நம் ஊர் தீமிதி விழாவை போல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் உள்ள தசாரிகட்டா செளடம்மா தேவி விழாவில் முள்ளின் மீது நடக்கும் பக்தர்கள்.

15 டிசம்பர், 2013

சீராப்பள்ளி மஹா உத்சவ விழா



நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி  [கன்னடத்தில் ஹாலுஹள்ளி என்று சொல்லப்படுகிற] ஊரில் கார்த்திகை 11 ம் நாள்  27 -11- 2013 அன்று எட்டாம் ஆண்டு மஹாத்சவ விழா ஸ்ரீசெளடேஸ்வரி அம்மன் கோவிலில் நடை பெற்றது. 

அதன் முக்கிய காட்சிகள்
                                                               

23 நவம்பர், 2013

தேவாங்கர் குல ஆன்மீக செம்மல் திரு.நித்திஷ் செந்தூர்.


                                                                   
 

திரு. நித்திஷ் செந்தூர். இவர் இருப்பிடம் சிங்கப்பூர். இவரை பற்றி தேவாங்கர் குலத்தில் உள்ள முக்கியஸ்தர்களுக்கும், இனைய தளத்தில் தேவாங்கர் குல பேஸ்புக்கில் தொடர்புடைய பலருக்கும் இவர் நன்கு பரிச்சயம்.

இவர் +2 முடித்து விட்டு சிங்கப்பூர் குடியுரிமை கொண்டதால் 2 வருடம் கட்டாய இராணுவ சேவைக்காக இப்பொழுது சிங்கப்பூர் இராணுவ சேவையில் இருக்கிறார்.

20 நவம்பர், 2013

திருப்பூர்- தேவாங்க எழுச்சி மாநாடு


திருப்பூரில் 2011ல்  நடைபெற்ற தேவாங்க எழுச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்கள் பேசிய உரைகளின் சுருக்கம்.
                                                                           

17 அக்டோபர், 2013

கோயம்புத்தூர் அலகு வீரர்களின் சேவை


கோயம்புத்தூர் ஸ்ரீஇராமலிங்க செளடேஸ்வரி அம்மனின் நவராத்திரி விழாவில்  அலகு வீரர்கள் கத்தி போட்ட வைபவம். [ 2013 ]


                                                                     


10 அக்டோபர், 2013

அருப்புக்கோட்டை மஹா நவமி உற்சவம்



அருப்புக்கோட்டை டவுன் தேவாங்கர் மூன்று மிராசுகள் உள்ளிட்ட உறவின் முறைக்குப் பாத்தியபட்ட அருள் மிகு ஸ்ரீ இராமலிங்க செளடாம்பிகை அம்மன் மஹா நவமி உற்சவத்தின்  102  ம் ஆண்டு மற்றும் 103 ம் ஆண்டு விழாக்களில்  நடைபெற்ற நிகழ்ச்சிகளின் சில பதிவுகள்.

இந்த கோவில் விழாவில் சிறப்பு புஷ்ப பல்லக்கு. இது நீளமானது. இதில் உபயோக படுத்தும்  மூங்கில் மரம் ஒரே மரமாக நீளமாக, வளைக்கப்பட்டு இதற்காகவே தயார் செய்யப்பட்டது. 25, 30 வருடங்களுக்கு முன்பு இந்த மரத்தை   வெளியூரில் உள்ள மற்ற செளடம்மன் கோவில்  காரர்கள் முக்கிய விஷேசங்களுக்கு  பல்லக்கு அமைக்க பெரும் பொருள் செலவில் கொண்டு செல்வார்கள்.  இப்பொழுது அந்த மரத்தை வெளியில் யாருக்கும் கொடுப்பதில்லை. இங்கு உள்ள படத்திலும் பல்லக்கு அலங்காரத்தை முழுமையாக எடுக்க பட வில்லை.




18 ஆகஸ்ட், 2013

அருப்புக்கோட்டை மஹா சக்தி சமஷ்டி – சண்டி யாகம்


    அருப்புக்கோட்டை தேவாங்கர் குல மக்கள்
                   நடத்திய
       மஹா சக்தி சமஷ்டி – சண்டி யாகம்

    அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் மேல் நிலைப் பள்ளியில் தேவாங்கர் குல அனைத்து மக்களின் மேன்மைக்காகவும் 13.07.2013, 14.07.2013 சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரண்டு தினங்கள் சிறப்பாக யாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் முக்கிய காட்சிகளின் படங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

ஆச்சரியகரமான சிறப்பு அம்சங்கள் : ஐம்பதூர் பட்டத்து எஜமானரும், முப்பதூர் பட்டத்து எஜமானரும் இருவரும் நேருக்கு, நேர் சந்தித்து கொள்ள மாட்டார்கள் இது பரம்பரை வழக்கம். இந்த நிகழ்ச்சியில் ஒருவர் மாற்றி, ஒருவர் முன்னிலை வகுத்து. பரம்பரை வழக்கத்தை கைவிடாமல் இருவரும் கலந்து கொண்டதும்.

15 பிப்ரவரி, 2013

சௌடாம்பிகை அம்மன் சக்தி நிலை நிறுத்துதல்

                                        

  சக்தி நிறுத்துதல் :- சக்தி நிறுத்துவது என்பது சௌடாம்பிகை அம்மன் கோவில்களில் எப்பொழுதாவது அம்மன் கனவில் வந்து சொல்வதை வைத்து செய்வது. இந்த சக்தி நிறுத்தும் விழா காலங்களில். மற்ற விழா காலத்தை விட அதிக நாள் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். குறைந்த பட்சம் 30 நாட்களாவது இருப்பார்கள். அந்த ஊரின் அனைத்து தேவாங்கர் மக்களும் கடுமையான கட்டுப்பாட்டுடன்  விரதம் இருப்பார்கள். ஒரு முறை ஒரு கோவிலில் சக்தி நிறுத்தினால் அடுத்து சக்தி நிறுத்த  20 வருடம் 25 வருடத்திற்கு மேல் ஆகும்.

 சக்தி நிறுத்தும் விதம் :-  புதிய மண் சட்டியில் நிரம்ப தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். பின் அந்த சட்டியின் மேல் விளிம்பில் அம்மனின் சக்தியான ஜம்முதாடு கத்தியை நிறுத்துவார்கள். மூன்றிலிருந்து ஐந்து கிலோ வரை எடை உள்ள அந்த கத்தி அப்படியே நிற்கும். எப்பொழுது அந்த கத்தி கீழே சாயும் என்பதை யாராவது ஒரு பெண் மணிக்கு சாமிவந்து  சொல்லுவார். சொல்லும். அந்த நேரத்தில் துணியை விரித்து பிடித்து கொண்டிருப்பார்கள் அது தானாக சாய்ந்து விழும்.  குறைந்த பட்சம் 20 மணி நேரம் நிற்கும்.