திரு. நித்திஷ் செந்தூர்.
இவர் இருப்பிடம் சிங்கப்பூர். இவரை பற்றி தேவாங்கர் குலத்தில் உள்ள முக்கியஸ்தர்களுக்கும்,
இனைய தளத்தில் தேவாங்கர் குல பேஸ்புக்கில் தொடர்புடைய பலருக்கும் இவர் நன்கு பரிச்சயம்.
இவர் +2 முடித்து
விட்டு சிங்கப்பூர் குடியுரிமை கொண்டதால் 2 வருடம் கட்டாய இராணுவ சேவைக்காக இப்பொழுது
சிங்கப்பூர் இராணுவ சேவையில் இருக்கிறார்.
இவரின் சிறப்பு
:- தமிழ் நாட்டில் உள்ள தேவாங்கர்களை பற்றியும், ஸ்ரீசெளடேஸ்வரி அம்மன் கோவில்களை பற்றியும்,
அதன் விழாக்களை பற்றியும் பல அரிய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறார்.
இவர் எழுதிய புத்தகமே
இவர் படிக்கும் சிங்கப்பூர் பள்ளியில் இவருக்கு பாடமாக வைக்கப் பட்டது. உலகத்தில் எந்த
மனிதனுக்கும் இந்த பெருமை கிடைத்திருக்காது. இதற்கு இந்தியர்களும், தமிழர்களும், அதிலும்
தேவாங்க குலத்தவர்கள் பெருமைபட வேண்டிய விஷயமாகும்.
எனக்கு பின் தேவாங்கர்களை
பற்றிய ஆராய்ச்சிகளை தொடர்வதற்கு யாரும் இல்லையே என்று வருத்தத்தில் இருந்தேன். போன வருடம்
2 பேர் கிடைத்தார்கள். இப்பொழுது விடிவெள்ளியாக இவர் கிடைத்திருக்கிறார். மிகவும் மகிழ்ச்சி
அடைகிறேன் என்று சொல்லி இருக்கிறார். பல வருட ஆராய்ச்சியில் தேவாங்க புராணம் எழுதி அருளிய
சேலம் வைணவ கடல் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
ஆடிடும் சூலம்
என்ற பெயரில் இசை தட்டு 18-11-2012 ல் வெளியிட்டு இருக்கிறார். இப்பொழுது ஒரு வருடம்
முடிந்து விட்டது.
ஸ்ரீஇராமலிங்க
செளடாம்பிகை அம்மனுக்கு- 3
பெரிய வதம்ப சேரியில் அவரின் [ஏந்தேலார்] குல தெய்வமான ஸ்ரீசெளடேஸ்வரியின் மறு பெயரான சூடாம்பிகை
அம்மனுக்கு- 3
அவரின் குல தெய்வ
கோவிலுக்கு அருகே சின்ன வதம்ப சேரியில் அமைந்துள்ள கப்பேலார் குலதெய்வம் நெல்லிகுப்பம்மாள் அம்மனுக்கு- 3
அவரின் தாத்தா
எழுதிய பத்தேவு பாட்டு – 1
என மொத்தம் 10
பாடல்கள்.
இந்த பாடல்களை
பற்றி திரு வைணவ கடல் அவர்கள் கூறிய கருத்து:- பாட்டும் நன்றாக இருந்து இசையும் நன்றாக
இருந்தால் அது சர்க்கரையுடன் கலந்த தேன் மாதிரி. எனக்கு இந்த பாடல்கள் அனைத்தும் சர்க்கரையுடன்
கலந்த தேன் மாதிரி தான் இருந்தது. மேலும்
ஆடிடும் சூலம்
என்ற பெயர் வைத்திருப்பதே என்னை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது
விஷ்ணுவின் சக்கரத்தாலும்,
சிவனின் மழுவாலும் வீழ்த்த முடியாத அசுரர்களை சூலம்தான் வீழ்த்தியது. ஆகவே ஆடிடும்
சூலம் என்ற பெயரே தேவாங்கர்களின் வரலாற்றை ஞாபக படுத்துகிறது. என்று கூறியிருக்கிறார்.
ஆடிடும் சூலம்
இசைதட்டு வெளியீட்டு விழா கத்தி போடும் நிகழ்ச்சியுடன் அம்மனுக்கு எடுக்கும் விழா போல்
மிக சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் பெரும் பொருட்செலவில் செய்திருந்தார்.
இந்த இசை தட்டு
எதற்காக வெளியிட்டார் என்பதை அவரும். இதை வெளியிட எவ்வளவு சிரமம் எற்பட்டது என்பதை
இசை அமைப்பாளர் திரு இனியவன் அவர்களும் பேசிய பேச்சின் சுருக்கம்.
திரு நித்திஷ் செந்தூர்:- தேவாங்கர் குலத்தை பற்றிய செய்திகள் புத்தக வடிவில் தான் இருக்கிறது. இப்பொழுதுள்ள
காலசூழ்நிலைக்கு ஏற்ப நம் குல செய்திகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இசை வடிவம் சிறந்ததாக
கருதினேன். இசை வடிவில் இருந்தால் இன்டர்நெட், மற்றும் கோவில் விஷேச காலங்களில் கோவில்களிலும்
மேலும் அவரவர்கள் தனியாகவும் அடிக்கடி கேட்கும் வாய்புகள் ஏற்படும். இதனால் அம்மன்
புகழ் பரவும். இது என் நீண்ட கால கனவு என்று கூறியிருக்கிறார்.
அம்மன் புகழ் பரப்பவே இந்த இசை தட்டை வெளி கொண்டு வர ஆசை பட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
அம்மன் புகழ் பரப்பவே இந்த இசை தட்டை வெளி கொண்டு வர ஆசை பட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
இசை அமைப்பாளர்
திரு இனியவன்:- உங்களுடைய அம்மன்களை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அம்மன்களை
பற்றி கேட்டு அவர்களின் வரலாறுகளை பற்றி கேட்டு மைண்ட் செட்டாகி அதன் பின்தான் எழுதவும்,
பாடவும் கம்போஸிங் செய்யவும் ஆரம்பித்தோம். இந்த தகவல்களை எங்களுக்கு புரிய வைக்கவே
நித்தீஸ் ரெம்ப சிரமபட்டு போய் விட்டார்.
பொதுவாக 10 நிமிடத்தில்
10 டியூன் போடுவோம். ஆனால் இந்த பாட்டை ரெடி செய்து கொண்டு வருவதற்கு எங்களுக்கு 6
மாதம் ஆகி விட்டது.
டியூன் போட போட
ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. CD யில் பதிவு செய்வதற்கு மட்டுமே ஒரு மாதம் ஆகி
விட்டது.
இதற்காக நிறைய
செலவு செய்து விட்டார். குடும்பமே என்னிடம் பேசுவார்கள். பணம் எப்பொழுது வேண்டுமானாலும்
சம்பாதிக்கலாம்.
ஆனால்
கோவிலுக்காக இவ்வளவு
மெனகெடுவதும் பணம் செலவு செய்வதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
என்றார்.
என்றார்.
இதிலிருந்து திரு.
நித்திஷ் செந்தூரை பற்றியும் அவரின் குடும்பத்தினரின் நல் எண்ணங்களை பற்றியும் தெரிந்து
கொள்ளலாம். வெளி நாட்டில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய விஷயத்தை செய்வது தான் ஆச்சரியமான விஷயம். தேவங்கர்
குலத்தின் மீது பக்தியும் மிகுந்த அக்கறையும் கொண்ட இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
1873 ம் வருடம்
தேவாங்கர் குல குருவாக விழங்கிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசிவகுருசாமிகள் அவர்களின் ஐந்தாவது தலைமுறையில் வந்தவர் திரு நித்திஷ் செந்தூர். அதனால்தான் இவருக்கு இவ்வளவு ஆழ்ந்த பக்தி என்று
சொல்கிறார்கள்.
செந்தூர் என்று
செல்லமாக அழைக்கபடும் திரு. நித்திஷ் செந்தூரின்
அப்பா பெயர்:- திரு. மணிகண்டன்
அம்மா பெயர்:- திருமதி. கானீஷ்வரி
தங்கை பெயர்:- செல்வி. நித்யஸ்ரீ இசை தட்டு வெளியீட்டு விழா சில காட்சிகள்
ஆக்கம்:- S.V. ராஜ ரத்தினம். கரூர்.
Face book - KDC Group- 24-11-2013
என்னை தேவாங்கர் குல ஆன்மீக செம்மல் என கூறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால் நான் அந்த பாராட்டுக்கு உரியவன என எனக்குத் தெரிவில்லை ஐயா.-- Nithish Senthur
ஆன்மீக செம்மல் என்று உங்களை சிறு வயதிலிருந்து கவனித்து வரும் பல பெரியோர்கள் தான் உங்கள் இசை வெளியீட்டு விழாவில் சொல்லியிருக்கிறார்கள். பலரும் மேடையில் கூறியதை தான் நான் போட்டிருக்கிறேன்.--Raja Rathnam