தெய்வ மகிமைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெய்வ மகிமைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 அக்டோபர், 2013

அம்மன் நடத்தி காட்டிய அற்புதங்கள்




                                    அம்மன் கவசத்தில் தோன்றும் திருநீறு

நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளியில் உள்ள செளடம்மன் கோவிலில் அம்மன் அணிந்திருக்கும் வெள்ளி கவசத்தில் இருந்து.திருநீறு தோன்றுகிறது.

2013 செப்டம்பர் மாதம்  சீரப்பள்ளியில் உள்ள செளடம்மன் கோவிலில் உள்ள செளடம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவித்திருக்கிறார்கள். அன்று இரவு கோவில் பூட்டும் சமயத்தில் கவசம் முழுவதும் திருநீறு படிந்து இருக்கிறது.
அது ஏதோ  வெள்ளையாக ஏதோ ஒட்டியிருக்கிறதே என்று அதை துடைத்து விட்டு இருக்கிறார்கள். மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது மீண்டும் அதே போன்று அதிகமாக படிந்து இருக்கிறது. அதை சதாரணமாக எடுத்துக் கொண்டு மீண்டும் துடைத்து விட்டு இருக்கிறார்கள். மறுபடியும் 2 மணி நேரத்தில் அதேபோல் சிலை முழுவதும் படிந்திருக்கிறது. மறுபடியும், மறுபடியும் துடைத்து விட மீண்டும், மீண்டும் திரு நீறுபடிய அதன் பின்தான் மற்றவர்களுக்கு தெரியபடுத்தி இருக்கிறார்கள்.

சுற்றுபட்ட கிராமங்களில் இருந்து. இதை பார்க்க மக்கள் சாரி,சாரியாக வந்து பார்த்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

அதன் புகைப்படம்

மக்களின் கேள்விகளுக்கு அம்மன் அருளால் பதில்-வீடியோ பதிவு


கர்நாடகா மாநிலத்தின் தசாரிகாட்டா  [Dasarighatta] என்னும் சிறிய கிராமத்தில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் . பொது மக்களுக்கு தங்களின் குடும்பத்தை பற்றிய கேள்விகளுக்கு

அம்மன்அருளால் பதில்கள் அரிசி மாவு பரப்பப் பட்ட ஒரு பலகையில் எழுதி காண்பிக்க படுவதாகவும். எழுதக்கூடிய அம்மனின் சப்பரத்தை பிடித்து கொண்டிருக்கும் இருவருக்கும் எழுத படிக்க தெரியாது என்றும் 

 ஸ்டார் டிவியில் நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சியில் காண்பிக்கபட்டது.

அதன் வீடியோ பதிவு கீழே கொடுக்க பட்டுள்ளது. 

மேலும் நேரில் காணவேண்டும் என்ற ஆர்வத்தில் 16-2-2014 அன்று அங்கு சென்று பார்த்து வந்த செல்வன். பார்த்திபன் தீபு அவர்களின் அனுபவம்.

15 பிப்ரவரி, 2013

சௌடாம்பிகை அம்மன் சக்தி நிலை நிறுத்துதல்

                                        

  சக்தி நிறுத்துதல் :- சக்தி நிறுத்துவது என்பது சௌடாம்பிகை அம்மன் கோவில்களில் எப்பொழுதாவது அம்மன் கனவில் வந்து சொல்வதை வைத்து செய்வது. இந்த சக்தி நிறுத்தும் விழா காலங்களில். மற்ற விழா காலத்தை விட அதிக நாள் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். குறைந்த பட்சம் 30 நாட்களாவது இருப்பார்கள். அந்த ஊரின் அனைத்து தேவாங்கர் மக்களும் கடுமையான கட்டுப்பாட்டுடன்  விரதம் இருப்பார்கள். ஒரு முறை ஒரு கோவிலில் சக்தி நிறுத்தினால் அடுத்து சக்தி நிறுத்த  20 வருடம் 25 வருடத்திற்கு மேல் ஆகும்.

 சக்தி நிறுத்தும் விதம் :-  புதிய மண் சட்டியில் நிரம்ப தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். பின் அந்த சட்டியின் மேல் விளிம்பில் அம்மனின் சக்தியான ஜம்முதாடு கத்தியை நிறுத்துவார்கள். மூன்றிலிருந்து ஐந்து கிலோ வரை எடை உள்ள அந்த கத்தி அப்படியே நிற்கும். எப்பொழுது அந்த கத்தி கீழே சாயும் என்பதை யாராவது ஒரு பெண் மணிக்கு சாமிவந்து  சொல்லுவார். சொல்லும். அந்த நேரத்தில் துணியை விரித்து பிடித்து கொண்டிருப்பார்கள் அது தானாக சாய்ந்து விழும்.  குறைந்த பட்சம் 20 மணி நேரம் நிற்கும்.

1 ஜனவரி, 2013

கரூர் சௌடம்மனின் மகிமை


   கரூர்  சௌடம்மனின் மகிமைக்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்


முதன் முதலாக சங்கம் ஆரம்பிக்கும் போது, சங்க செயல் பாட்டின் முக்கிய திட்டமாக, கரூர் தேவாங்க மக்களை ஒன்று கூட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், வருடம் ஒரு முறை கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அதில் செளடம்மனை வழிபடலாம். என்று விண்ணப்ப படிவத்தில் போட்டிருந்தோம்.

அதன் படி தனியார் மண்டபத்தில் எப்படி கும்பிடுவது என்பதை பற்றி விசாரிக்க ஆரம்பித்தோம். பலரும் அப்படி எல்லாம் கும்பிட முடியாது. நீங்கள் கும்பிட வேண்டும் என்று நினைத்து விட்டால் யாரவது ஒருவர் கோவிலுக்கு என்று இலவசமாக இடம் கொடுப்பார்கள்.என்றே பலரும் சொன்னார்கள்.

கரூரில் இடத்தின் விலை அதிகம் அப்படி இலவசமாக இடம் கொடுக்க யார் இருக்கிறார்கள். இது நடக்காத விசயம். என்று சொல்லி கொண்டிருந்தோம்.

நடந்தது என்ன வென்றால்.