15 பிப்ரவரி, 2013

சௌடாம்பிகை அம்மன் சக்தி நிலை நிறுத்துதல்

                                        

  சக்தி நிறுத்துதல் :- சக்தி நிறுத்துவது என்பது சௌடாம்பிகை அம்மன் கோவில்களில் எப்பொழுதாவது அம்மன் கனவில் வந்து சொல்வதை வைத்து செய்வது. இந்த சக்தி நிறுத்தும் விழா காலங்களில். மற்ற விழா காலத்தை விட அதிக நாள் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். குறைந்த பட்சம் 30 நாட்களாவது இருப்பார்கள். அந்த ஊரின் அனைத்து தேவாங்கர் மக்களும் கடுமையான கட்டுப்பாட்டுடன்  விரதம் இருப்பார்கள். ஒரு முறை ஒரு கோவிலில் சக்தி நிறுத்தினால் அடுத்து சக்தி நிறுத்த  20 வருடம் 25 வருடத்திற்கு மேல் ஆகும்.

 சக்தி நிறுத்தும் விதம் :-  புதிய மண் சட்டியில் நிரம்ப தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். பின் அந்த சட்டியின் மேல் விளிம்பில் அம்மனின் சக்தியான ஜம்முதாடு கத்தியை நிறுத்துவார்கள். மூன்றிலிருந்து ஐந்து கிலோ வரை எடை உள்ள அந்த கத்தி அப்படியே நிற்கும். எப்பொழுது அந்த கத்தி கீழே சாயும் என்பதை யாராவது ஒரு பெண் மணிக்கு சாமிவந்து  சொல்லுவார். சொல்லும். அந்த நேரத்தில் துணியை விரித்து பிடித்து கொண்டிருப்பார்கள் அது தானாக சாய்ந்து விழும்.  குறைந்த பட்சம் 20 மணி நேரம் நிற்கும்.


சக்தி நிறுத்தும் முறை :- ஜம்முதாடு கத்தியை பூனுலில் கட்டி பூனூலின் இரண்டு முனைகளை ஒருவர் பிடித்துக் கொண்டு கத்தியின் முனையை மண் சட்டியின் விளிம்பில் வைப்பார்கள். அது காந்த சக்தியின் ஈர்ப்பு சக்தியை போல் ஈர்த்து  நின்று கொல்லும்.கத்தி நிற்கும் வரை ஆள் மாற்றி ஆள் மாற்றி பிடிப்பார்கள். நின்ற உடன் பூனூலை விட்டு விடுவார்கள். 

              இன்னொரு முறை ஜம்முதாடு கத்தியை கையில் பிடித்துக் கொண்டு அதன் முனையை  மண் சட்டி விளிம்பில் வைப்பார்கள். அது தானாக நிற்கவில்லை என்றால் அடுத்த முக்கியஸ்தரிடம் கொடுப்பார். அது தானாக நிற்கும் வரை ஒருவர் மாற்றி ஒருவர் நிறுத்திக் கொண்டே இருப்பார்கள் 

               யாருக்கு அம்மன் அருள் அதிகம் இருக்கிறதோ அவர் முறை வரும் போது நிற்கும் . சக்தி நிறுத்தும் போது  30 நிமிடத்திற்குள்  நின்றாலும் நிற்கும் சில நேரம் 5 மணி, 6 மணி நேரத்திற்கு மேல் கூட ஆகும். சக்தி நிறுத்தும் போது அலகு வீரர்கள் கத்தி போடுவார்கள் .  நேரம் செல்ல, செல்ல கத்தி போடக் கூடியவர்களின் வேகம் மற்றும் ஆவேசம் அதிகமாகும். சக்தி நின்று விட்டால் குறைந்த பட்சம் 20 மணி நேரம் வரை நிற்கும்.

           இது வரை  சித்தையங்கோட்டையில்  2009 லும், அருப்புக்கோட்டை ஏரியாவில் உள்ள  கல்குறிச்சியில்  2009 லும், நீராவியில்   2010 லும், கட்டங்குடியில் 2011 லும் திருப்பூரில் 2012 லும் சக்தி நிறுத்தி இருக்கிறார்கள். பல ஊர்களிலும் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. 2013 ல் போடியிலும்,  சிவகாசியில் உள்ள தாயில் பட்டியிலும்,   நிறுத்தினார்கள்.

           நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  ஒஸக் கோட்டையில்  10 - 2 - 2013 ல் சக்தி நிறுத்தி இருக்கிறார்கள். அதன் புகைப்படம் 

         









படம் உபயம் :-   சேலம் திரு. P. முருகேசன் அவர்கள் 

                       
                                         **********************************

போடியில் உள்ள   ஸ்ரீஇராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவிலில்
சக்தி நிலை நிறுத்தியது







போடி நாயக்கனூர், ஜக்கப்ப நாயக்கம் பட்டி. அருள்மிகு ஸ்ரீ மது இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவிலில்

2009 ம் வருடம் முப்பெரும் விழா நடந்தது. அது சமயம் நடந்த அம்மன் சக்தி நிலை நிறுத்திய நிகழ்ச்சி.


                                                                       



                                                                             




திருப்பூரில் 2012  ம் வருடம்

சக்தி நிலை நிறுத்திய காட்சி








ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் சக்தி நிலை நிறுத்துதல் :
இதுவும் ஒரு அங்காளஅம்மன் ஆலயத்தில் சக்தியாக அம்மன் நிலை நின்ற காட்சி . சென்னை தேனாம்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வருடா வருடம் ஆடி மாதம் சக்தி நிலை நிறுத்துகிறார்கள்



சக்தி நிலை நிறுத்துதல் நமது சௌண்டம்மனுக்கு மட்டு மில்லாமல் சில இடங்களில் பெரியாண்டிச்சியாக விளங்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலிலும் சக்தி நிலை நிறுத்துதல் நடை பெறுகிறது ... thanx .photo cortesy - திரு. முரளி 


 S.V.ராஜ ரத்தினம், செங்குந்தபுரம், கரூர் -2, செல் எண் : 9443425240.