13 மே, 2013

முக்கிய செய்திகள்


இந்த பக்கத்தில் உள்ள செய்திகள்:-

                                                                               

   1. திருடு போன  செல் போனை மீட்க                     

 2. ஆலயங்களில் செய்யத் தகாதவை..

 3. ரக்ஷாபந்தன்-பூணூல் 

 4. நமஸ்காரங்களும் செய்யும் முறையும்...

  5.  மகாளய அமாவாசை 

   


கிளைகளுடன் தென்னை மரம்

                                                       கிளைகளுடன் பனை மரம்


திருடு போன  செல் போனை மீட்க

 உங்களுடைய  செல்போன்  தொலைந்துவிட்டதா? அல்லதுதிருடிவிட்டார்களா?கவலையேவேண்டாம். மீண்டும் உங்கள்மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.
இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை(IMEI-International Mobile Equipment Identity) நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.


 உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள் உடனேஉங்களுடையமொபைல்போனின் IMEIஎண் திரையில் தோன்றும்.
 உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்குதகவல் கொடுக்க வேண்டும்.அதற்குcop@vsnl.net என்ற மின்னஞ்சல்முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள் :
•             பெயர்(NAME)
•             முகவரி(ADDRESS)
•             போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
•             அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
•             கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
•             உங்கள் மின்னஞ்சல் முகவரி(EMAIL ADDRESS)
•             எந்த தேதியில் தொலைந்து(LOST ON DATE)
•             போனின் அடையாள எண் (IMEI)
 ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால்கூடுதல்தகவல்களைச்சேர்க்கலாம்.
 Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNETஇணைந்தவலுவானதொருகட்டமைப்பின்(Strong Structure) மூலம்உங்கள் போனை யாராவதுபயன்படுத்தும் பட்சத்தில்அந்நபர்இருக்கும் இடம், மற்றும் பயன்படுத்தும் நபரைக்கண்டுபிடித்துநடவடிக்கைகளைமேற்கொள்ளுவார்கள்.உங்களுக்கும் இதுப் பற்றியதகவல்களைத்தெரியப்படுத்துவார்கள்.

 அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில்IMEI எண்ணை மறக்காமல்உங்கள்டயரி போன்ற ஏதாவதொன்றில்*#06# என்பதைக் கொடுத்துதோன்றும்எண்ணைக்குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள்விலையுயர்ந்தCostly Mobile Phoneதொலைந்துபோனால்காவல்துறை உதவியுடன் மீண்டும் பெறஅது வழிவகுக்கும்.
 உங்கள் செல்போன் தொலைந்து போனா லோ,திருட்டுப்போனாலோ உங்களுக்குசெல்போன்சேவையை அளி க்கும்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த IMEI எண்ணைக்கொடுங்கள். அவர்கள்உடனே குறிப்பிட்ட செல் போனை`பிளாக்செய்வார்கள். செல் போனையாராவது திருடிஅதன்`சிம்கார்டைமாற்றினாலும் அவர்களா ல் முற்றிலுமாகசெல்போ னைபயன்படுத்த முடியாமல் போகும்.


ஆன்ட்ராய்டு ஃபோன்கள் திருட்டு போனால்            கண்டுபிடிக்க
  AVG ஆண்டி வைரல் ஆப்ஸை ஆண்ட்ராய்டில் நிறுவினால்இலவசமாக போனின்இருப்பிடத்தைக்கண்டுபிடிக்க உதவுவதோடு,உரிமையாளர் நினைத்தால் சைரன் ஒலிஎழுப்பச்செய்துதிருடியவனைமாட்டச் செய்யலாம்.
 மேலும், அதிலுள்ள டேட்டாக்களையும் அழிக்க முடியும் என்பதோடுஇந்த போன் திருடப்படதுஎன்றுபுதிய சிம்மைப் போட்டபிறகுஅதிலுள்ள காண்டாக்ட்களுக்கு திருடன் பெயரிலேயேஅவன்அறியாமல்குறுஞ்செய்தியும் அனுப்பும். எல்லாமே இலவசம்.ஆனால் பேட்டரியை சாப்பிடும்என்பதால் பலர்இதைநிறுவுவதில்லை.
                    ------------------------------------------------------------------------          

ஆலயங்களில் செய்யத் தகாதவை..


1) பிறருடைய அண்னத்தைப் புசித்த தினத்தில், இறைவனை ஆலயத்தில் வந்து தரிசிப்பது,
2) பிறர் பொருளை கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது.
3) வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது.
4) ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக்கொள்வது.
5) தம்பதிகளின் உடலுறருக்குப்பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் ப்ரவேசிப்பது.
6) ஸ்த்ரீகள் ரஜஸ்வலையாகக்கூடிய நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில் கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம் செல்லுதல்.
7) மாதவிடாய்ப் பெண்டிருடன் பேசிக் கொண்டு இருந்தவாரோ, அருகில் சென்றவாரோ ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
 மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது.
9) பிணத்தைப் பார்த்தவர்கள், பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டிஉஅவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
10) மலஜலங்களை அடக்கி கொண்டு ஆலயம் செல்லுதல்.

11) மலஜலம் கழித்தபின் சுத்தி செய்துகொள்ளாமல் ஆலயம் புகுதல்.



ரக்ஷாபந்தன்-பூணூல் 


ரக்ஷாபந்தன்-பூணூல் இன்று ஷ்ரவண பூர்ணிமா எனப்படும் பௌர்ணமி. இதற்கு முந்தைய பௌர்ணமி குரு பூர்ணிமா. நமது ஆசான்களுக்கும் குருமார்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அதற்கு முன் வருவது புத்த பூர்ணிமா என்றும், அதற்கும் முந்தைய பௌர்ணமி சைத்ர பூர்ணிமா எனப்படும் சித்திரை பௌர்ணமியாகும். இந்த நான்காவது பௌர்ணமி தான் சரவண பௌர்ணமி எனப்படுகிறது. இந்த பௌர்ணமி சகோதர சகோதரி பந்தத்திற்கு அர்பணிக்கப் பட்டுள்ளதுரக்ஷாபந்தன். மேலும் இந்த நாளில்தான் பூணூல் மாற்றப்படுகிறது. பூணூல் மாற்றுவதன் குறிக்கோள் நம் தோள்மீது உள்ள மூன்று கடன்கள் அல்லது கடமைகளை நமக்கு நினைவூட்டுவதுதான்பெற்றோருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை, சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை மற்றும் ஞானத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை.
இவை மூன்றும் நமக்கு உள்ள கடமைகள் அல்லது கடன்கள். நாம் நம் பெற்றோர்க்கு கடன் பட்டுள்ளோம், நாம் சமூகத்திற்கு கடன்பட்டுள்ளோம், ஞானத்திற்குஅதாவது நம் குருவிற்கு நாம் கடன்பட்டுள்ளோம். எனவே நமக்கு இந்த மூன்று கடன்களும் இருக்கிறது. பூணூல் நமக்கு இந்த மூன்று கடன்களையும் நினைவு படுத்துகிறது.
கடன் என்று சொல்லும்போது, நாம் ஏதோ ஒரு குறிப்பட்ட அளவு கடன் வாங்கினார் போலவும் அதை நாம் திருப்பித் தரவேண்டிய தேவை இருக்கிறது என்றும் நினைக்கிறோம். ஆனால் இது ஒரு கடமை அல்லது பொறுப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடன் என்ற வார்த்தைக்கு இந்த இடத்தில் அர்த்தம் என்ன? பொறுப்பு! முந்தைய தலைமுறை, வருங்கால தலைமுறை மற்றும் இன்றைய தலைமுறை ஆகியவற்றின் மீது உள்ள உங்கள் பொறுப்பை மறுபார்வை பார்ப்பது. அதனால்தான் நாம் மூன்ற பிரிகள் கொண்டதாக உள்ள பூணூலை நம் தோளில் அணிவது.
இதுதான் அதன் முக்கியத்துவம்என் உடம்பை தூய்மையாகவும், என் மனதை தூய்மையாகவும் மற்றும் என் வாகை தூய்மையாகவும் நான் வைத்திருப்பேன்உடல், மனம் மற்றும் பேச்சு ஆகியவற்றில் தூய்மை. ஒரு நூல் நம்மைச் சுற்றி எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு நாளும் நமக்கு நினைவு வருகிறது, ‘ எனக்கு இந்த பொறுப்புகள் எல்லாம் இருக்கிறது’.
பண்டைக்காலத்தில், பெண்களும் பூணூலை அணிய வேண்டியிருந்தது. மேலும், பூணூல் அணிவது ஒரு குறிப்பிட்ட ஜாதிகளுக்கு மட்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. பிராமணர், க்ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று எல்லோரும் அணிய வேண்டிய வழக்கமிருந்தது; ஆனால் பின்னர் ஒரு சிலருக்கு மட்டும் என்று குறுகிவிட்டது.
பொறுப்பு என்பது எல்லோருக்கும் உண்டு. திருமணமானால் இப்போது ஆறு பிரிகள் கொண்ட பூணூல் அணிகிறார்கள். மூன்று தமக்காகவும், அடுத்த மூன்று தன் மனைவிக்காகவும். மனைவிக்காக இருந்ததை ஆண்கள் தாமே ஏற்றுக் கொண்டார்கள். இது ஒரு ஆணாதிக்க சமூகம்; அவர்கள் ஒரு பெருந்தவறு செய்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் பெண்களுக்கும் இந்த பொறுப்பை ஏற்கும் சடங்கு இருந்தது. ஆனால் இப்போது ஆண்களே இந்தப் பொறுப்பை திருமணத்திற்கு பிறகு ஏற்றுக் கொள்கிறார்கள். ரக்ஷாபந்தன் தினத்தன்று ராக்கி கட்டுகிறோம். இதை நாம் இப்போது நட்பு வளையம் என்கிறோம் (Friendship band). இந்த சொல்லாடல் இப்போது தற்காலத்தில் ஆங்கிலத்தில் ஏற்பட்டது, ஆனால் நம் நாட்டில் ரக்ஷாபந்தன் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இது ஒரு பாதுகாப்பு வளையமாக இருந்தது, அதாவது ஒரு சகோதரி தன் சகோதரனுக்கு அளிக்கும் பாதுகாப்பு. எனவே ரக்ஷாபந்தன் என்ற இந்த விழாவில் எல்லா சகோதரிகளும் தங்கள் சகோதரனுக்கு ராக்கி அணிவித்தனர். இதை தன்னுடைய உறவுமுறை சகோதரர்களுக்கு மட்டுமல்லாமல் உண்மையில் எல்லோரையும் தங்கள் சகோதரர்களாக கருதி எல்லோருக்கும் கட்டினர். ஷ்ரவண பூர்ணிமாவில் இது வெகு விமரிசையாய் கொண்டாடப்படுகிறது.
ஷ்ரவன பூர்ணிமாவிற்கு பிறகு வருவது பாதோ பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. பிறகு வருவது அனந்த பூர்ணிமா, அதாவது அளவிட முடியாததை (Infinity) குறிக்கும் பௌர்ணமி. அதன் பிறகு வருவது ஷரத் பூர்ணிமா. அது பெரிய மிக அழகான பௌர்ணமியை குறிக்கும். சிலரது முகம் பிரகாசமாய் ஒளி பொருந்தியதாய் இருந்தால், ‘நீங்கள் ஷரத் சந்திரனைப் போல இருக்கிறீர்கள்என்று சொல்வார்கள்.
முழு வருடத்தில் ஷரத் சந்திரன்தான் மிகப் பெரியதும், மிகத் தெளிவானதும் மிக சிறந்ததும் ஆனது. யாராவது தயை நிறைந்து ஆனந்தமாய் இருந்தால், ‘ஷரத் சந்திர நிபானனாஎன்று சொல்வார்கள். நம் தாய்; இறைவி (தேவி) யின் முகம் ஷரத் பூர்ணிமாவைப் போல இருக்கும் என்பார்கள். எனவே இது ஒரு புனிதமான பௌர்ணமி.
இதற்கு பிறகு வருவது நிறைய விளக்குகள் ஏற்றி நாம் கொண்டாடும் கார்த்திகைப் பௌர்ணமி. எனவே ஒவ்வொரு பூர்ணிமாவுக்கும் ஒரு முக்கியத்துவம் ஒரு கொண்டாட்டம் உண்டு.
ஒரு ஷரத் பூர்ணிமாவில் தான் கண்ணன் கோபியருடன் நடனம் ஆடினான். கோபியர் பலர், ஆனால் கண்ணன் ஒருவன்தான். இருந்தாலும் கண்ணன் பல வடிவம் கொண்டு தங்கள் ஒவ்வொருவருடனும் நடனமாடியதாக உணர்ந்தார்கள் கோபியர்கள். எனவே எல்லோரும் எல்லாம் தாண்டிய ஒரு உயர்ந்த நிலையில் இருந்தார்கள்! ஒவ்வொருவரும் கண்ணன் தங்களுடையவனாக தங்கள் ஒவ்வொருவருடனும் நடனமாடியதாக உணர்ந்தார்கள். ஷரத் பூர்ணிமா இதற்கு பிரசித்தமானது. மக்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். நிலவின் ஒளியில் பாலை வைத்துவிட்டு பின்னர் அருந்துவார்கள். ஷரத் பூர்ணிமா அன்று கொண்டாட்டம் உண்டு. தங்கள் வாழ்க்கையையே கொண்டாட்டமாக, தினம் தினம் கொண்டாடமுடியாதவர்கள், மாதத்தில் சில நாட்களாவது கொண்டாடவேண்டும். அதாவது, பௌர்ணமி அன்று கொண்டாடினாலே வருடத்திற்கு பனிரெண்டு கொண்டாட்டங்கள் கிடைக்கும்.
மனம் சந்திரனுடன் தொடர்புடையது. அதனால் தான் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் நம் மனம் உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ இருக்கிறது. மனம் சந்திரனோடு அவ்வளவு தொடர்புடையது. அதனால் தான் வேதத்தில், ‘சந்த்ரமா மனசோ ஜடாமனம் சந்திரனில் இருந்து பிறந்தது அல்ல, சந்திரன் மனதிலிருந்து பிறந்தது’, என்று கூறப் பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நாட்களெல்லாம் மிக முக்கியமானவை. வாழ்கையே மிக முக்கியமானது. இந்த வாழ்கை முழுதும் மிக முக்கியம் என்று ஞானவான்களுக்கு தெரியும் என்று சொல்வேன்.
எனவே இந்த தினத்தில் பூணூல் மாற்றிய பின்னர், ஒரு உறுதி (சங்கல்பம்) எடுத்துக் கொள்கிறார்கள்அதாவது – ‘நற்புகழும் நல்விளைவும் கொண்ட செயல்கள் செய்யத் தகுந்த திறன்கள் எனக்கு அருளப்படவேண்டும்என்ற உறுதி. செயல்பட அதற்குத் தகுந்த திறமை வேண்டும். உடல் தூய்மை, பேச்சுத் தூய்மை மற்றும் விழிப்பான உள்ளுணர்வு ஆகியவை இருக்கும்போதுதான் எடுத்த வேலை நிறைவடைகிறது. ஆன்மீகச் செயல்களோ உலகாயமான செயல்களோ, ஒருவர் செயல்பட அதற்கான திறன் வேண்டும். அந்த திறனைப் பெற நமக்கு அதற்கான பொறுப்பு இருக்க வேண்டும். பொறுப்பான ஆட்களே ஒரு வேலையை செய்யத் தகுந்தவர்கள். என்ன அழகான ஒரு செய்தி. பொறுப்பில்லாத ஒருவரிடம் கொடுக்கப்பட்ட வேலை இழப்பில் தான் முடியும். பொறுப்பில்லாத ஒருவரிடம் உங்கள் சமையலறை பொறுப்பை கொடுத்து விட்டு மறுநாள் காலையில் சென்றால், ‘காலை உணவு தயாரில்லைஎன்ற பதில்தான் கிடைக்கும். காலை உணவை மத்தியானம் பரிமாறினால் அவருக்கு பொறுப்பில்லை என்றுதான் அர்த்தம். ஆன்மீக வேலையோ அல்லது உலகாயமான வேலையோ,
பொறுப்பில்லாத ஒருவர் எந்த வேலையைச் செய்யவும் தகுதி இல்லாதவர். எனவே ஒருவர் முதன் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் தன் வாழ்வில் பொறுப்புகளை எப்படி நிறைவேற்றுவது என்பதுதான். பூணூல் அணியும் சடங்கு (யக்ஞோபவீத சடங்கு) பொறுப்பேற்றுக் கொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ளத்தான்.
சாதாரணமாக பூணூலை மாற்றக் கூடாது. வாழ்க்கையில் பொறுப்புகள் உண்டு. நான் என்ன செய்தாலும் பொறுப்போடுதான் செய்வேன்என்ற உறுதி விழிப்புணர்வு கொள்வதே பூணூல் மாற்றும் சடங்கு.


 நமஸ்காரங்களும் செய்யும் முறையும்...

                                                                        
நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும் அவை,
ஓரங்க நமஸ்காரம்,
மூன்று அங்க நமஸ்காரம்,
(பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம்,
சாஷ்டாங்க நமஸ்காரம்
அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

ஓரங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.

மூன்று அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்

பஞ்ச அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும்.

அஷ்டாங்க நமஸ்காரம்: ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.

சாஷ்டாங்க நமஸ்காரம்: வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

நமஸ்கார தத்துவம்:

என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை; எல்லாம் உன் செயல்; என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்

கோயிலின் உள்ளே நமஸ்காரம் செய்வதெப்படி?

கோயில் வளாகத்தில் எல்லா இடங்களிலும் நமஸ்கரிப்பது உசிதமல்ல. கோயில் கர்ப்பக்கிருகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால். கொடிமரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம் கர்ப்பக்கிருகம் தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம்.

அபிஷேகம் அல்லது நிவேதனம் செய்யும் நேரங்களில் நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்கவும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வது நியதி, நமஸ்காரம் செய்வதானால் 3,5, 7,9,12 முறைகள் நமஸ்காரம் செய்ய வேண்டும், 1 அல்லது 2 முறை நமஸ்கரித்தல் கூடாது. நமஸ்காரம் செய்பவர் தலை, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நமஸ்காரம் செய்யவேண்டும்.


                                    மகாளய அமாவாசை 


மாதா மாதம் அமாவாசை வருகிறதுஆனால் மகாளய அமாவாசை என்பது மிகவும் விசேடமானதுமகாளய அமாவாசைக்கு முன்னர் மகாளயபட்சம் என்ற ஒன்று ஆரம்பமாகும்எப்படி கிருஷ்ண பட்சம்சுக்கில பட்சம் என்ற இரண்டு உள்ளதுசுக்கில பட்சம் என்றால் வளர் பிறைகிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறைஅதுபோல் மகாளய பட்சம்இது எப்போது ஆரம்பம் ஆகுமென்றால்ஆவணி மாதத்தில் பெளர்ணமி முடிந்த மறுநாள் மகாளய பட்சம் ஆரம்பமாகும்இதில் தொடங்கிபுரட்டாசி மாதத்தில் அமாவாசை வருகிறது அல்லவாஅதுவரை - அதாவது பெளர்ணமியில் இருந்த அமாவாசை வரையிலான இரு வார காலம் இந்த மகளாய பட்சம் ஆகும்.

புரட்டாசி அமாவாசைதான் மகாளய அமாவாசையாகும்இந்த காலத்தில் சில வருணத்தார் திருமணம் போன்ற எந்த சுப காரியத்தையும் செய்ய மாட்டார்ஏனென்றால் இந்த காலப் பகுதி முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறதுசிரார்தம் என்று கூறுவார்கள் அல்லவாஅதுபோல் திதி கொடுப்பதுதானதர்மங்கள் செய்வதுபங்காளிகளுக்கு இடையிலான பிரச்சனைகளைத் தீர்ப்பதுஅதாவது சொத்து உள்ளிட்ட பிரச்சனைகளில் உள்ள வில்லங்கங்களைத் தீர்த்துக் கொள்கிற காலம்தான் இந்த மகாளய பட்சம் என்பதுஇதன் உச்சதான் மகாளய அமாவாசை ஆகும்.

மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதாலோ தவற விட்டவர்கள்இந்த மகாளய அமாவாசை தினத்தன்று திதி கொடுத்தால் அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும்மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்நாம் அவர்களுக்கு அளிக்கும் திதிஅவர்கள் செய்த பாவங்கில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கைஅன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவதுதான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.

 இது மட்டும் மல்லாதுதீராத நோய்களுக்கு மருத்துவம் செய்துக் கொள்ள தொடங்கவும் மகாளய அமாவாசை சரியான நாளாகும்.