நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது
மெடிக்கல் இன்சூரன்ஸ் (மருத்துவ காப்பீடு) ப்ரீமியம் கட்டுவதை ஒரு வீண் செலவாகவே
கருதிக் கொண்டிருக்கிறோம்.
ஹெல்த்
இன்சூரன்ஸ் என்பது இன்றைய நிலையில்
எவ்வளவு முக்கியம்? இன்று மருத்துவமனைகள் அனைத்துமே நம் பயத்தை பயன்படுத்தி
பணம் பிடுங்கும் பகல் கொள்ளை காடுகளாக
மாறிவிட்ட போது, நாமும் அதற்கேற்ப
நம்மை உஷாராக வைத்துக்கொள்ள வேண்டாமா?
இன்றைய
வேகமான உலகில் பணம் ஈட்டும்
அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நாம் நம் ஆரோக்கியம்
பற்றி எந்த அளவு அக்கரை
கொண்டுள்ளோம் என்பது அவரவர்க்கு நன்கு
தெரியும். இது போதாதென்று வாகன
நெருக்கடி நெரிசலால் மாசுபட்ட காற்று, சுத்தமில்லாத குடிநீர்,
உணவுப் பொருட்களில் கலப்படம், உடல் உழைப்பற்ற வேலை,ஆரோக்யமற்ற பணி சூழல் அதனால்
விளையும் மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்),
துரித உணவுகள் எல்லாம் நம்
ஆரோக்யத்துடன் விளையாடி வருகின்றன.
தனிப்பட்ட
நபர்கள், நன்றாக தானே இருக்கிறோம் தங்களுக்கு எதற்கு காப்பீடு திட்டம். நமக்கு இது தேவையில்லை என்று நினைத்துக் கொள்வார்கள்.
எனினும், காப்பீடுக்கான தேவை உங்களுக்கு இருக்கிறது
என்பதற்கு பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உங்களுக்கு நல்ல வருமான ஆதாரம்
இருந்தாலும், வாழ்க்கையில் சில எதிர்பாராத இழப்புகள்
ஏற்படும். இந்த எதிர்ப்பார்க்காத நிகழ்வுகளுக்கு
எதிராக காப்பீடு நிறுவனங்கள் உங்களை தயார்படுத்தி இழப்புகளை ஈடு செய்ய முன் வருகின்றன.
ப்ரீமியம்
நிச்சயம் ஒரு அதிகப்படியான செலவுதான் என்றாலும் அது நம்மை பெரிய
இழப்புக்களிலிருந்து காக்கும். நமக்கு எப்போது பெரிய
நோய்கள், மருத்துவ செலவு நேரிடும் என்று
தெரியாத நிலையில், அப்படி வரும் பட்சத்தில் குறைந்தது 80 சதவீதம் வரை மருத்துவச்
செலவை கட்டிவிடும், காப்பீடு,
இதனால்
மருத்துவச் செலவால், உங்கள் சேமிப்பு கரைவதை
தவிர்ப்பது மட்டுமல்லாமல், நீங்கள் கடனாளி ஆவதையும்
தவிர்க்கலாம். உங்கள் மருத்துவச் செலவு
அனைத்தையும் நீங்களே ஏற்றுக் கொள்வதை
விட, இதற்கான ப்ரீமியம் தொகை
மிகக் குறைவானதுதான். ஒரு நாள் தேநீர் செலவை விட குறைவு தான்.
. வருடம்
ஒரு முறை பணம் கட்ட
வேண்டும்..கட்டிய பணம் திரும்ப
கிடைக்காது.
மருத்துவ காப்பீடு என்பது உங்களுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குமான உங்கள் மருத்துவ செலவை பார்த்து கொள்வதற்கான ஒரு ஒப்பந்தம்.
மருத்துவ காப்பீடு என்பது உங்களுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குமான உங்கள் மருத்துவ செலவை பார்த்து கொள்வதற்கான ஒரு ஒப்பந்தம்.
சில மேலை நாடுகளில் மருத்துவ
காப்பீடு கட்டாயம் என்கிற நிலை உள்ளது
இந்தியாவில் அவ்வாறு ஏதுமில்லை. காப்பீடு
இல்லாமல் இருபது , முப்பதாயிரம் பெருமானமுள்ள இரு சக்கர வாகனங்களையோ சில லட்சங்கள் பெருமானமுள்ள
நான்கு சக்கர வாகனங்களையோ ஓட்ட
முடியாது ஆனால் விலைமதிப்பற்ற மனிதன்
உயிருக்கோ, மருத்துவத்திற்கோ காப்பீடு இல்லாமல் இருக்க முடியும் என்பது
வேதனை.
தமிழகத்தில்
அரசு காப்பீடு திட்டம் உள்ளது அது
குடும்ப வருவாய் மாதம் ரூ6000/- க்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே. வருட குடும்ப வருமானம்
ரூ72,000/- க்குள் இருப்பவர்கள். இதில்
சேர்ந்து முன் எச்சரிக்கையுடன் இருந்து
கொள்ளுங்கள்.
மற்றவர்கள்
மருத்துவ காப்பீடு திட்டம் உள்ள பல
பொது நிறுவனங்களும், பல தனியார் நிறுவனங்களும்
உள்ளன அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.
அதிலும் முக்கியமாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவசியம் உடனே சேர்ந்து
கொள்ளுங்கள். மருத்துவ காப்பீடு என்பது எல்லா வயதினரும்
சேர முடியும் [3 மாத குழந்தை முதல் 99 வயது வரை]
காப்பீடு கட்டணம் 3 லட்சத்திற்கு 40 வயதுள்ள கணவன், மனைவிக்கு மட்டும்
என்றால் ஒரு வருடத்திற்கு கட்டணம் ரூ 5000/- திலிருந்து ரூ7000/- வரை இருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கு [25 வயதுக்குள்] சேர்த்து என்றால் நான்கு பேருக்கும் சேர்த்து ரூ7000/- திலிருந்து ரூ 9000/- வரை இருக்கிறது.

அனைத்து
காப்பீட்டு நிறுவனங்களும் ஏறக்குறை சிற்சில மாற்றத்துடன் ஓரளவுக்கு ஒரே மாதிரியான சட்டதிட்டத்துடன் தான்
இருக்கின்றன. பிரீமியம் கட்டிய இரண்டு வருடங்களுக்குள்
வரும் சில நோய்களுக்கு மருத்துவ
செலவு தரமாட்டார்கள். நாம் முக்கியமாக பார்க்க
வேண்டியது.
1 சொந்த
ஊரில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கும் மற்றும் அனைத்து ஊரிலும் உள்ள முக்கிய பெரிய மருத்துவமனைகளுக்கும் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் உள்ளதா என்று பார்க்க வேண்டும் அப்படி இருந்தால்தான் பணம் எதுவும் கட்டாமல் [cashless] மருத்துவம் பார்க்க முடியும்.
2. மருத்துவ
செலவில் ரூம் வாடகை சேர்த்து
கிடைக்குமா என்பதையும். நாள் ஒன்றுக்கு ரூ 1000/- முதல் ரூ 5000/- வரை கிடைக்குமா என்பதையும் பார்த்து கொள்ள வேண்டும்.
3. சில நோய்களுக்கு செலவை உடனே தர மாட்டார்கள். அதற்கான காத்திருப்பு காலம் குறைவாக உள்ளதா என்பதை கவனிக்கவும்.
4. கூடுதலாக ஆம்புலன்ஸ் கட்டணம் தரப்படுகிறதா என்பதை கவனிக்கவும்.
5. மருத்துமனைகளில் சேர்வதற்கு முன்பும் பின்பும் ஏற்படும் செலவுகளை தருகிறதா என்பதையும் கவனிக்கவும்.
6. கிளைம் செய்யாத வருடத்திற்கு போனஸ் அல்லது ஹெல்த் செக்கப் கிடைகிறதா என்பதையும் பார்க்கவும்.
தெளிவு பெற சில வலைதளம்
1.http://kottakuppam.wordpress.com/2012/11/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/
2. http://www.myinsuranceclub.com/
3. http://www.easyinsuranceindia.com/
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்
http://starhealth.in/suggest_policy.php?PType=1&PProduct=2
http://starhealth.in/premium_calculator.php?categoryId=health&productId=6
நியூ இந்தியா இன்சூரன்ஸ்
http://www.niacl.com/per-medi.asp
தமிழக அரசின் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து கொள்வது எப்படி?
1. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/article5437832.ece
2. http://www.cmchistn.com/index.html
மேலும் ஆலோசனைக்கு - திரு. V. Lakshmanan M.Com. - 88 70 00 36 00
ஆக்கம்
S.V. ராஜ ரத்தினம்.
கரூர்.