அனைத்துப் பாடல்களையும் பாடியவர்கள்:-
செல்வி. R. பவித்ரா. கரூர்.
செல்வி. S. கீர்த்தனா. கரூர்.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
கணபதிராயன் அவனுடை
காலை பிடித்திடுவோம்
குணம் உயர்ந்திடவே விடுதலை
கூடி மகிழ்ந்திடுவோம்
சொல்லுக்கடங்காவே…….செளடேஸ்வரி
சூரத்தனங்கலெல்லாம்
வல்லமை தந்திடுவாள் செளடேஸ்வரி
வாழியே என்று துதிப்போம்
வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ…….பகையே
துள்ளி வருகுது வேல்.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
கன்னட பாடல்
தந்தன தானானே தானே தந்தன தானானே
தந்தன தானானே தானே தந்தன தானானே
1.சவுண்டம்ம பத்தாளே நம்மு சவுண்டம்ம பத்தாளே
சிங்க வாகனலே ஏறி நம்மு சவுண்டம்ம பத்தாளே.
2.நெட்டு நெட்டாங்கே அந்தர ஆக்கி இத்ததெம்மா.
பீதி, பீதாங்கே தோரண கட்டி இத்ததெம்மா
3.அந்தர காலுலி பாலமர கட்டி இத்ததெம்மா.
எழனி எலுமிச்சைங்கா கட்டி தொங்கபுட்டுந்தம்மா.
4.பிளே குதிரலி ஜமுதாடு முந்துக்க ஓகுத்தம்மா
கரக எத்தக்க பூஜாரி இந்துக்க பத்தாரம்மா
5.நம்ம செளடம்மனு குடியே கூட்ட கூட்டாங்கே
ஜெனகுளு ஓயி அல்லி கரக சிங்காரிசி
6.அலகு சேர்வமாடி கரகன பூஜாரி கொம்பத்தாரே
கையெத்தி மொக்கண்டம்மா எல்லோருனு கையெத்தி மொக்கண்டம்மா
7.ஏழி மொக்கிண்டு நாவு நெடிசி கொல்லந்தரே
சிம்மிய புண்ணாருளு நம்மம்மன கையெத்தி மொக்கண்டம்மா
8.நெனிசித காரியன நம்மம்ம நெடிசி கொடாளு
பித்து மொக்கண்டம்மா நம்மம்மன கையெத்தி மொக்கண்டம்மா
9.எட்டு தினங்கே நாவு ஒந்தொத்து இத்துண்டு
நின்னன மொக்குத்தரம்மா நவிய சொக கொடுபேக்கம்மா
10.நின்னு சன்னதிலி எல்லாருனு ஒந்து கூடிபந்து
ஏளிமொக்குத்தாரே எல்லாருனு சென்னிங்கே இருபேக்கம்மா
11.அம்ம இல்லாங்கே ஊருலி எதுனு நெடதெம்மா
கையெத்தி மொக்கண்டம்மா எல்லாருனு கையெத்தி மொக்கண்டம்மா.
12.நின்னு முந்துக நாவெல்லாரு சன்னு மக்குளம்மா
தப்பு இத்துரே நீனு மன்னிச்சு காப்பாத்தம்மா
13.பச்செ பச்சாங்கே அம்மா பெளுது இத்தாளே
கையெத்தி மொக்கண்டம்மா எல்லாருனு கையெத்தி மொக்கண்டம்மா
14.அம்மன கொண்டுண்டு நாவுசுத்தி பத்தரம்மா
அம்மன மொக்கண்டம்மா எல்லாருனு கையெத்தி மொக்கண்டம்மா.
15.அவுளு சந்தோஷலி நாவு சென்னிங்கே இருபேக்கு
மனசுமடியி எல்லாருனு கையெத்தி மொக்கண்டம்மா
16.நம்மன மீறித ஒந்து சக்தி இத்தாளே
கையெத்தி மொக்கண்டம்மா எல்லாருனு சென்னிங்கே இரானு
17.தாயி உட்டித ஊருலி நாவு உட்டிதுக்க
பெரும படானு எல்லாருனு சந்தோஷப்படானு
18.வருஷா வருஷ நின்னன கையெத்தி பத்தெரம்மா
மக்களு மரிகுளு மனென சொகக்கொடுபேக்கம்மா
19.சவுண்டம்ம பத்தாளே நம்மு சவுண்டம்ம பத்தாளே
சிங்க வாகனலே ஏறி நம்மு சவுண்டம்ம பத்தாளே
தந்தன தானானே தானே தந்தன தானானே
தந்தன தானானே தானே தந்தன தானானே
சாமி அலங்காரப்பாட்டு
தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே
தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே
தாழை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
தாழம்பூ பூத்ததை பாருங்கம்மா
தாழம்பூ பூத்ததை பாருங்கம்மா
தாழம்பூ போலவே நம்ம சவுண்டம்மா
தலை அலங்காரம் பாருங்கம்மா
நெல்லிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
நெல்லிப் பூ பூத்ததை பாருங்கம்மா
நெல்லிப் பூ பூத்ததை பாருங்கம்மா
நெல்லிப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
நெத்தி வரிசையை பாருங்கம்மா
பாத்சரம் மம்மா பாதசரம் – தாயே
பத்து விரலுக்கும் பாதசரம்
பத்து விரலுக்கும் பாதசரம்
இருட்டு நாட்டிலே போட்டு நடந்திட்டா
எங்கும் ஜொலித்திடும் பாதசரம்.
கோவை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
கோவைப்பு பூத்ததை பாருங்கம்மா
கோவைப்பு பூத்ததை பாருங்கம்மா
கோவைப்பூ போலவே தாயி சவுண்டம்மா
கொண்டை அலங்காரம் பாருங்கம்மா
குறிஞ்சிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
குறிஞ்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
குறிஞ்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
குறிஞ்சிப்பூ போலவே நம்மு சவுண்டம்மா
பல்லின் வரிசையைப் பாருங்கம்மா.
மான் கூவும் நல்ல மயில் கூவும் – தாயே
வன்னி மரத்துக் குயில் கூவும்
வன்னி மரத்துக் குயில் கூவும்
கொண்டை பெருத்தவ நம்ம சவுண்டம்மா
கொண்டை மேலே ரெண்டு கிளி கூவும்.
பாகை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
பாகைப்பூ பூத்ததை பாருங்கம்மா
பாகைப்பூ பூத்ததை பாருங்கம்மா
பாகைப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
பாத சிலம்பணி பாருங்கம்மா
முல்லை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
முல்லைப்பூ பூத்ததை பாருங்கம்மா
முல்லைப்பூ பூத்ததை பாருங்கம்மா
முல்லைப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
முக அலங்காரம் பாருங்கம்மா.
பிச்சிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
பிச்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
பிச்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
பிச்சிப்பூப் போலவே நம்ம சவுண்டம்மா
பின்னல் வரிசையைப் பாருங்கம்மா
தாமரை கொடியை பாருங்கம்மா – தாயே
தாமரைப் பூத்ததை பாருங்கம்மா
தாமரைப் பூத்ததை பாருங்கம்மா
தாமரைப் போலவே நம்ம சவுண்டம்மா
தன்னெழில் தோற்றமும் பாருங்கம்மா.
தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே
தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே
தன்னனன்னே நானனன்னே
நானனன்னே நானே- தன
நானனன்னே நானே
தானன்னே நானனன்னெ
நானனன்னே நானே
1.ஏடறியேன் எழுத்தறியேன் ஈஸ்வரியே தாயே – அம்மா
ஏடறியாப் பெண்களுக்கு இடதுபுறம் வா வா.
2.பாடறியேன் பகுத்தறியேன் பார்வதியே தாயே – அம்மா
பாடறியாப் பெண்களுக்கு பக்கத்திலே வா வா
3. பாலுப் பொங்கல் பத்துநூறு பாங்குடனே வைப்போம் – அம்மா
சக்தியுள்ள செளடேஸ்வரிக்கு சர்க்கரைப் பொங்கல் வைப்போம்.
4. தஞ்சாவூரு வேப்பமரம் சரஞ்சரமாய் பூக்கும் – அம்மா
பிடிபிடியாய்க் காய்க்கும்
நேர்த்திக்கடன் அக்னிசட்டியை நினைவாகவே செலுத்தி
5. பத்துப்படிதினை எடுத்து பாங்குடனே குத்தி
அதை பக்குவமாய் சலித்து
மாவிளக்கு நேர்த்திக்கடன் செளடேஸ்வரிக்கு செலுத்தி
6. செளடேஸ்வரி கோவிலிலே மாவிளக்கு நூறு
அங்கே வந்த ஜனம் கோடி
வந்த ஜனம் கோடிக்கெல்லாம் வரம் கொடுப்பாள் தேவி
7. செளடேஸ்வரி கோவிலிலே மாவிளக்கு நூறு
அதில் மஞ்சப்பிள்ளைகள் நூறு
கோட்டைக்குள்ளே கும்மியடிக்கும் குழந்தை பிள்ளைகள் நூறு
8. முத்தாளம்மன் கோவிலிலே மூன்று வகைத்தோப்பு
அதில் நவ்வா மரம் காப்பு
விளையாடப் பெண்பிறந்தாள் வெள்ளி ரதம் போலே
தன்னனன்னே நானனன்னே
நானனன்னே நானே- தன
நானனன்னே நானே
தானன்னே நானனன்னெ
நானனன்னே நானே
S.V. ராஜ ரத்தினம்
கரூர்