கரூர் தேவாங்கர்களுக்காக சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் 25 வருடங்களுக்கு முன்பாக ஏற்ப்பட்டு. கரூர் முக்கியஸ்தர்களால் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டது. பின் ஆறு மாதங்களில் நடத்தமுடியாமல் அது நின்று போய் விட்டது. அடுத்து ஐந்து வருடங்களில் கரூர் மேட்டுத் தெருவில் தேவாங்கர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, சில சட்டதிட்டங்களுடன் நடந்து கொண்டிருக்கிறது.
கரூரில் உள்ள அனைத்து தேவாங்கர்களையும் ஒன்று சேர்த்து சங்கம் ஆரம்பித்து. நம் தேவாங்கர்களுக்கு முன்னேற்றத்திற்கான திட்டங்களையும், உதவிகளை செய்யவும், மேலும் சௌடம்மனுக்கு கோவில் கட்டி சௌண்டம்மனுக்கு வழிபாடு நடத்த வேண்டும் என்றும் எண்ணம் 30 -11-2008 ல் ஏற்பட்டது.
தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி சமூக நல சங்கம்
இதற்கு முன் ஏற்படுத்தப்பட்டு நின்றுப் போன சங்கத்தின் சாதக,பாதகமான அம்சங்களை கருத்தில் கொண்டும், கரூர் மேட்டுத் தெருவில் நடந்து கொண்டிருக்கும் தேவாங்கர் சங்கத்தின் தலைவரின் ஆலோசனைகளை கேட்டும். சங்கம் தொடர்ந்து சிறப்பாக செயல் படுவதற்க்கான அடிப்படை திட்டங்கள் தயார் செய்யப்பட்டது. அதன்படி முதலில் அருப்புக்கோட்டை தேவாங்கர்களின் 79 குடும்பங்களை தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி சமூக நல சங்கம் என்ற பெயரில் உறுப்பினர்களாக சேர்த்து சங்கம் தொடங்கப்பட்டது.
கரூர் மாவட்ட தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம்
அதன் முதல் மகாசபைக் கூட்டம் 4-1-2009 ல் நடை பெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாட்டு திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. மேலும் சங்கத்தின் பெயரை கரூர் மாவட்ட தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம் என்று பெயர் மாற்றி வைக்கப்பட்டது.

திட்டப்படி 26 -7 -2009 ல் இரண்டாவது மகாசபை கூட்டம் கூட்டப்பட்டது. அதில் மற்ற ஊர் தேவாங்கர்களின் குடும்பத்தினர்கள் சேர்க்கப்பட்டனர்.அன்று முதல் கரூரில் உள்ள பெரும்பாலான தேவங்கர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
தேவாங்கர் மகளிர் குழு
தேவாங்கர் மகளிர் குழு
2009 ம் வருடம் தேவாங்கர் மகளிர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
கரூர் மாவட்ட தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நல சங்கம்

சங்கம் செயல்படும் விதம்
சங்கத்தின் நிர்வாகிகளின் கூட்டம் மாதம் ஒருமுறை கரூரில் உள்ள வெவ்வேரு ஏரியாக்களில் அந்தந்த வட்டார நிர்வாகிகளின் வீட்டில் நடத்தப்படுகிறது.
சங்கத்தின் மூலம் செட்டியார் நியமிக்கபட்டு உறுப்பினர் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்சசிகளில் அவர் முன்னின்று நடத்திக் கொடுக்கிறார்.
இறப்பு நிகழ்ந்தால் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் அந்த வட்டார உறுப்பினர்களும் கலந்துகொண்டு சங்கத்தின் சார்பாக ஊர் மாலை மரியாதை செய்யப்படுகிறது.
மகாசபைகூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது .அந்த கூட்டத்தில் வரவு செலவுகள் மற்றும் சங்க செயல்பாட்டு விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது.
சங்க செயல்பாட்டின் சிறப்பு அம்சங்கள்
அன்னை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மனின் அருள் ஆசியுடன்
.
.
1. 23 -12 -2009 ல் உறுபினர்களிடம் பணம் வாங்கி புன்னம்சத்திரத்தில் 6.95 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அந்த இடத்திற்கு ஸ்ரீ சௌடாம்பிகா நகர் என்று பெயர் வைக்கப்பட்டது. இடம் வாங்க பணம் கொடுத்த 111 உறுப்பினர்களுக்கு 111 மனைகளாக பிரித்து கொடுக்கப்பட்டது.
2. இதை மனையாக பிரிக்கும் சமயம் கோவில் கட்டுவதற்காகவும், சங்கத்திற்காகவும் 18,000 சதுர அடி கொண்ட இடமும், 880 சதுரஅடி கொண்ட மனை ஒன்றும் மீத படுத்தப் பட்டது. அதை சங்கத்தின் பெயருக்கு 15 -7 - 2010 ல் பத்திரபதிவு செய்யப்பட்டது.
3. மனை வாங்கியவர்களிடம் அவரவர்கள் வாங்கிய சதுர அடிக்கு ரூபாய் இரண்டு வீதம் வசூல் செய்தும், மேலும் மனை பிரித்ததில் மீதமான தொகையையும் சேர்த்து சங்கத்திற்காக மகாஜன சபைக் கட்டிடம் ரூபாய் 4,50,000/- செலவில் கட்டப்பட்டது. அதன் கிரகப்பிரவேசம் 18-4-2010 ல் சிறப்பாக நடை பெற்றது.

4. சங்கத்தின் சார்பாக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சங்கத்தின் உறுப்பினர்களை 2010 ல் திருமூர்த்தி மலையில் உள்ள காயத்ரி பீடத்திற்கு மூன்று பஸ்களில் அழைத்து சென்று வந்தார்கள்.அந்த சுற்றுலா சிறப்பாக அமைந்தது..
திருமூர்த்திமலை ஸ்ரீ காயத்ரி பீடம்
5. 2012 ல் சிறு குழு குற்றாலம் டூர் சென்று வந்தனர் .
6. ஒவ்வொரு ஆண்டும் புன்னம்சத்திரத்தில் உள்ள ஸ்ரீ சௌடாம்பிகா நகரில் உள்ள கோவில் இடத்தில் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது.
சௌடாம்பிகாநகரில் உள்ள சங்கதிற்க்கான இடத்தில் 50 *100 என்ற அளவுகளில் கோவில் கட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டது. அதில்
முதல் வழிபாடு
27 -4- 2010 செவ்வாய் கிழம்மையன்று முதன்முறையாக கரூரில் முளைப்பாரியுடன் கரகம் சிங்காரித்து கட்டங்குடி முப்பதூர் பட்டத்து எஜமானர் முன்னிலையில் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு வழிபாடு அன்னதானத்துடன் சிறப்பாக நடத்தப்பட்டது
இரண்டாவது வழிபாடு
திருமூர்த்திமலை ஸ்ரீ காயத்ரி பீடம்
5. 2012 ல் சிறு குழு குற்றாலம் டூர் சென்று வந்தனர் .
6. ஒவ்வொரு ஆண்டும் புன்னம்சத்திரத்தில் உள்ள ஸ்ரீ சௌடாம்பிகா நகரில் உள்ள கோவில் இடத்தில் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது.
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி வழிபாடு
முதல் வழிபாடு
27 -4- 2010 செவ்வாய் கிழம்மையன்று முதன்முறையாக கரூரில் முளைப்பாரியுடன் கரகம் சிங்காரித்து கட்டங்குடி முப்பதூர் பட்டத்து எஜமானர் முன்னிலையில் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு வழிபாடு அன்னதானத்துடன் சிறப்பாக நடத்தப்பட்டது
இரண்டாவது வழிபாடு
12 -4- 2011 செவ்வாய் கிழம்மையன்று இரண்டாவது முறையாக சிறப்பானமுறையில் அம்மன் வழிபாடு நடத்தப்பட்டது
பீடம் அமைத்தது
கோயிலுக்கான இடத்தில் மண்பீடம் இருந்ததை செங்கல் ,சிமின்ட் கொண்டு ஸ்ரீ சக்கரம் வைத்து புதிய பீடம் கட்டி பாதுகாப்புக்காக தகரத்தில் கொட்டகை போடப்பட்டது
மூன்றாவது வழிபாடு
1 -5- 2012 ல் முளைப்பாரி எடுத்து ,கன்னி தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. சௌடாம்பிகா நகர் கிணற்றுக்கு அருகில் சௌண்டம்மன் கரகம் சிங்காரித்து அங்கிருந்து பூசாரியாரால் கரகம் தலையில் வைக்கப்பட்டு கை பிடிக்காமல், கையில் ஜம்முதாடு கத்தியை பிடித்துக் கொண்டு கரகம் எடுத்து வரப்பட்டது. அது சமயம் கட்டங்குடி அலகு வீரர்கள், மற்றும் கரூர் அலகு வீரர்களும் நம் தேவாங்கர் வழக்கப்படி கத்தி போட்டு வர சிறப்பாக கொண்டு வந்து சேர்க்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
அதுசமயம் அன்று காலை ,மதியம் ,இரவு அன்னதானம் நடைபெற்றது .அன்னதானத்திற்கான பொருள்களை நம் சமுதாய மக்கள் ஆர்வத்துடன் கொடுத்து உதவினார்கள் .அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது.
வழிபாடு நிகழ்ச்சி முடிந்த 10,15 நிமிடத்தில் பெய்த மழை தொடர்ந்து மூன்று மணி நேரம் யாவரும் மறக்க முடியாத அளவிற்கு, பெரிய மழையாக பெய்தது. இது போல் மழை பெய்து 25 வருடம் இருக்கும் என்று சொன்னார்கள்.
அம்மன் வழிபாடு நடக்கும் நாட்கள்

அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேகங்களும் வார நாட்கள் செவ்வாய் ,வெள்ளி கிழமைகளில் தீபாராதனைகளும் செய்து அம்மன் வழிபாடு நடைபெறுகிறது .
ஆடி அமாவாசை, தீபாவளி திரு நாள், தை பொங்கல் ஆகிய முக்கிய நாட்களில் பொங்கல் வைத்து சிறப்பு அபிசேகங்களும், அன்ன தானமும் நடைபெறுகிறது.
அனைத்து அம்மன் சம்மந்தப்பட்ட செயல் பாடுகளும், வருட வழிபாட்டு நிகழ்ச்சிகளும். குற்றம் குறை ஏற்ப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், முறைப்படி செய்ய வேண்டும் என்பதற்காகவும், மதிபிற்குரிய கட்டங்குடி முப்பதூர் பட்டத்து எஜமானர் அவர்களின் ஆலோசனை படியும், முன்னிலையிலும் நடத்தப் படுகிறது.ஆடி அமாவாசை, தீபாவளி திரு நாள், தை பொங்கல் ஆகிய முக்கிய நாட்களில் பொங்கல் வைத்து சிறப்பு அபிசேகங்களும், அன்ன தானமும் நடைபெறுகிறது.
*****************************************************
S.V. ராஜ ரத்தினம், செங்குந்தபுரம், கரூர்- 2. செல் எண் - 9443425240