27 டிசம்பர், 2012

ஆன்மீகம் விவேகானந்தர் சொற்ப்பொழிவு


                                        


சுவாமி விவேகானந்தர் :

                   பகவத்கீதையைப்  பற்றி 1897 ல் ஸ்ரீ ராமகிருஷ்ண சங்கத்தின் மடத்தில் உள்ள பிரம்மசாரிகளுக்கும் ,துறவிகளுக்கும்   நிகழ்த்திய வகுப்புச சொற்பொழிவும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ் கோவில் 1900 ஆம் ஆண்டு மே மாதம் 26, 28,29 தேதிகளில்  சுவாமி விவேகானந்தர் நடத்திய சொற்பொழிவுகளும் அடங்கிய " கீதை சொல்லும் பாதை " என்ற புதக்கத்தின் சுருக்கம் .

                பண்டையக்கால சமஸ்கிருதத்தின் ஆரம்பம் கி .மு .5000. உபநிடத்தங்களோ அதிலிருந்து குறைந்தது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை

                கீதை ,உபநிடதங்களின் கருத்துக்களையும் சில இடங்களில் சொற்களையும் அப்படியே எடுத்துக்கொள்கிறது உபநிடதங்கள் விளக்கும் முழுப்பொருளையும் அப்படியே சுருக்கமாக கொண்டு வர வேண்டும் என்பதே அதன் நோக்கம்



                இந்துக்களின் அடிப்படை நுல்கள் வேதங்கள் என்று அழைக்கப்படுகின்றன வேதங்கள் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன ஒன்று உபநிடதங்கள் அல்லது ஞான காண்டம் மற்றும் கர்மகாண்டம்
           
               கர்மக்காண்டம்  சடங்குகளும் ,பல தேவதைகளைக் குறித்து செய்த பல வகையான துதி பாடல்களுமே அதில் அடங்கியவை சடங்குகளுள் சில மிக விரிவானவை அவற்றை செய்ய பல புரோகிதர்கள் தேவை .சடங்குகளின் விரிவால் புரோகித தொழிலே தனியொரு சாஸ்திரமாயிற்று

              பழங்கால புரோகிதர்கள் வேதங்களின் பலத்தால் தெய்வங்களை அரியாசனத்திலுருந்து இறக்கிவிட்டு அந்த இடங்களில் தாங்களே அமர்ந்தனர் உங்களுக்கு சொற்களின் ஆற்றல் தெரியாது ;அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பது எங்களுக்கு தெரியும்

               நீங்கள் செல்வந்தராக,நீண்ட ஆயுள் உள்ளவராக ,நல்ல கணவரை அடைந்தவராக வேண்டுமா? என்றனர் அவர்கள் .அப்படியானால் புரோகிதர்களுக்குப் பணம்கொடுத்துவிட்டு சும்மாயிருக்க வேண்டியதுதான்

               உபநிடதங்கள் கூறும் முடிவுகள் எல்லாம் இதற்கு நேர் எதிரானவை முதலில் உபநிடதங்கள் உலகை படைப்பவரும் அடக்கி ஆள்பவருமான இறைவனை நம்புகின்றன  பல தெய்வங்களுக்கு பதிலாக ஒரே கடவுள் கருத்து எழுகிறது

               இரண்டாவதாக,நீங்கள் எல்லோரும் கர்ம விதியில் கட்டுபட்டவர்கள் என்பதை உபநிடதங்கள்  ஒப்புக்கொண்டாலும் ,அதிலிருந்து தப்பும் வழியையும் அவை காட்டுகின்றன மனிதனின் குறிக்கோள் ,விதியைக் கடந்து செல்வது . போகமே குறிக்கோளாக எப்போதும் இருக்க முடியாது . ஏனென்றால் ,போகம் இயற்கைக்கு உட்பட்டுத்தான் இயங்கும்

              முன்றாவதாக ,உபநிடதங்கள் யாகங்களைக் கண்டித்து அவற்றை வெறுக்கின்றன

               வேதங்களை எழுதியது யாரென நீங்கள் கேட்கலாம் .அவை எழுதப்படவில்லை . சொற்களே வேதங்கள்.

                வேதத்தொகுதி என்றென்றும் உள்ளது உலகம் எல்லாம் அந்த சொல் தொகுதியின் வெளிப்பாடே. வேதங்களில் அடங்காத ஒன்று இருக்குமானால் ,அது உங்கள் மதி மயக்கம் அப்படி எதுவும் இருக்க முடியாது .

                கிருஸ்துவர்கள் "எங்கள் மதம் சரித்திர  பூர்வமனது ,எனவே எங்கள் மதமே உண்மையானது ;உங்கள் மதம்  தவறானது " எனக் கூறினால் இந்து ,"உங்களது மதம் சரித்திர பூர்வமானது என்றால் ஒரு மனிதர் அதை 1900 ஆண்டுகளுக்கு முன் உண்டாக்கினர் என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் அனால் எது உண்மையானதோ அது எல்லையற்றதாகவும் என்றும் உள்ளதாகவும் இருக்க வேண்டும் அதுத்தான் உண்மைக்கு ஒரு சோதனை அது எப்போதும் அழியாமல் என்றும் ஒரே மாதிரியே  இருக்கும்  உங்களது சமயம் யாரோ ஒரு குறிப்பிட்ட மனிதரால் படைக்கப் பட்ட தென்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்  வேதங்கள் அப்படி ஒரு தீர்க்கதரிசி யாலோ வேறு வகையாலோ உண்டாக்க படவில்லை இயல்பாகவே எல்லையற்ற வார்த்தைகளில் இருந்தே உலகம் முழுவதும் வந்துவந்து போகின்றன " என்பான் .பொதுவாகப் பார்த்தால் இது சரியே

            இயற்க்கை தன் நியதிகளை ஒரு போதும் சிறுகச சிறுக உண்டாக்குவதில்லை இன்று ஓர் அங்குலம் நாளை மற்றோர் அங்குலம் என்று புவியீர்ப்பு விசை வெளிப்படவில்லை ஒவ்வொரு நியதியும் பூரணமானது நியதியில் வளர்ச்சி என்பதில்லை அது என்றென்றும் உள்ள ஒரு ஏற்ப்பாடு ."புதிய மதம் ,புதிய ஆதேசம் "என்பனவெல்லாம் பொருத்தமற்ற பேச்சு நூறாயிரம் நியதிகள் இருக்கலாம் மனிதன் அவற்றுள் சிலவற்றை அறியலாம் மறைத்திருந்த அவற்றை நாம் கண்டு பிடிக்கிறோம் அவ்வளவுத்தான்

              உபநிடதங்களில் உள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் எழுந்தவையே ,புரோகிதர்களிடமிருந்து பிறந்தவையல்ல

              ஒரு பிரிவினர் வேள்விகளையும் வேதத்தில் கூறப்பட்டுள்ள தெய்வங்களையும் இறுகப் பிடித்துக் கொண்டனர் .மறுப்பிரிவினர் இதை  எதிர்த்தனர் .புத்த மதத்தின் வித்து இதுத்தான் -அரசர்களுக்கும் ,புரோகிதர்களுக்கும் ஏற்ப்பட்ட சச்சரவு .இந்த சச்சரவால் மதம் சீர் குலைந்தது

              இந்தியா முழுவதும் இந்த இரு பிரிவினருக்கும் இடையே பிளவுபட்டு போகும் என்ற அச்சம் தோன்றிய போது ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றினார் கீதையில் அவர் புரோகிதர்களுக்கும் மக்களுக்கும் இடையில் கர்மதிற்கும்   ஞானதிற்கும் இடையில் சமாதானத்தை உண்டாக்க முயல்கிறார்

               கீதைக்கு சிறிது முன்னுரை தேவை .குருசேத்திரப் போர்க்களத்தில் காட்சி தொடங்குகிறது .ஒரு சகோதரன் ஒருப்பக்கம்  மற்றவன் மறுப்பக்கம் பாட்டன் ஒருப்பக்கம் ,பேரன் மறுப்பக்கம் நண்பர்களையும் உறவினர்களையும் எதிர் தரப்பில் கண்ட அர்ச்சுனன் ,அவர்களை கொல்ல வேண்டி வரும் என்பதை எண்ணிய போது அவனது இதயம் இளகி விடுகிறது .அவன் போர் புரிய மறுக்கிறான் இப்படி கீதை தொடங்குகிறது

               "நீயும் சாக முடியாது ;நானும் சாக முடியாது நாம் இல்லாமல் இருந்த காலம் எப்போதுமே இருக்கவில்லை ;இனி வரப்போவதும் இல்லை இந்த வாழ்க்கையில் ஒருவன் குழந்தை பருவத்தில் தொடங்கி ,இளமை முதுமை முதலியவற்றை கடந்து செல்வது போல ,மரணத்தையும் கடந்து இன்னோர் உடலில் புகுகிறான் .அறிவாளி ஏன் ?  வருத்தப்பட வேண்டும் ? (2.12,13)"என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்

               "உள்ளது ஒரு போதும் இல்லாமல் போகாது ;இல்லாதது ஒரு போதும் உள்ளதாகாது .இவ்வுலகமெல்லாம் பரவி நிற்கும் அது தொடக்கமும் முடிவும் இல்லாதது என்பதை அறி ! அது மாறுபடாதது .மாறுபாடில்லாத ஒன்றை மாற்றக்கூடியது இந்த உலகத்தில் எதுவும் இல்லை இந்த உடலிற்கு ஆரம்பமும் முடிவும் இருந்தாலும் உடலில் உறைபவன் எல்லையற்றவன் முடிவில்லாதவன் (2.16-18)"இதை அறிந்து எழுந்து நின்று போர் புரிக !

                " வேதங்கள் சத்வகுணம் ,ரஜோகுணம் ,தமோகுணம் என்ற மூன்று குணங்களுடைய பொருள்களைபற்றி பேசுகின்றன .(2-45)"

                வேதங்கள் இயற்க்கையில் உள்ள பொருள்களைப் பற்றி கூறுகின்றன உலகில் காணாத எதைபற்றியும் மக்களால் என்ன முடியாது மனிதர்களுடைய ஆசைகளெல்லாம் உடலைப் பற்றியவையே ;உணவு ,நீர் ,இன்பம் இவற்றிற்காக இந்த உடல் வாழ்க்கையை நீடிக்க விருப்பம் உண்டாகிறது .மனிதன் இந்த வாழ்வுக்கப்பால் எந்த ஒன்றையும் நினைக்க முடிவதில்லை நாம் நமது உடலை உடையவர்களாக இல்லாமல் உடலே ஆகிவிட்டோம்

               அர்ஜுனன் ,"புத்தி நிலை பெற்றவன் யார் ?"என்று கேட்கிறான் (2.54)

                 "எல்லா ஆசைகளையும் துறந்தவன் ,எதையும் வேண்டாதவன் ,இந்த வாழ்க்கையையோ முத்தியையோ ,தெய்வங்களையோ ,தொழிலையோ வேண்டாதவன் தன்னிடம் தானே பூரண திருப்தி அடைந்தவன் அவனது ஆசைகள் அற்று விட்டன .(2.55)"

                  ஒருவனுடைய மனம் துயரத்தில் கலங்காததாகவும் ,இன்பத்தைத் தொடததாகவும் பற்றுகள் அனைத்தும் நீங்கியதாகவும் அச்சமும் சீற்றமும் இல்லாததாகவும் நிலை பெறுமானால் அவனுடைய அறிவு நிலை பெற்றது (2.56)என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர் .

                  அர்ச்சுனன் ஸ்ரீ கிருஷ்ணனிடம் "இப்போதுத்தான் நீ செயல் புரியும்படிக் கூறினாய் .ஆனால் பிரம்மஞானமே வாழ்வின் உயர்ந்த குறிக்கோள் என்றும் கூறுகிறாய் கண்ணா செயலை விட ஞானமே சிறந்ததென்பது உன் கருத்தானால் ,என்னை ஏன் செயலில் ஏவுகிறாய் ?(3.1)" என்று கேட்டான்

                   ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார் "மிக பழைய காலத்திலிருந்து இந்த இரண்டு நெறிகளும் நமக்கு வந்திருக்கின்றன சாங்கியர்கள் ஞான நெறியை உயர்த்தி பேசுகிறார்கள் யோகிகள் கர்ம நெறியை உயர்த்தி பேசுகிறார்கள் ஆனால் யாரும் கர்மங்களை துறந்து விட்டதால் அமைதி எய்த முடியாது யாரும் இவ்வாழ்கையில் ஒரு நொடிக்கூடச செயலற்றிருக்க முடியாது .இயற்கையின் குணங்கள் அவனைச செயல் புரியத்தூண்டும் யார் செயல்களை நிறுத்திவிட்டு ,அதே சமயத்தில் அவற்றைப்பற்றி மேலும் நினைத்துக்கொண்டே இருப்பானோ ;அவன் எதையும் அடைய மாட்டான் ;அவன் பொய்யன் ஆனால் யார் தன் மன சக்தியால் படிப்படியாக தன் புலன் களை செயலில் பயன்படுத்தி தன் வசமாக்கி கொள்கிறானோ அவனே சிறந்தவன் எனவே ,நீங்கள் கர்மம் செய்யுங்கள் .(3.2-8)"

           "அர்சுனா ,எனக்கு எதுவும் தேவையில்லை .நான் அடைய விரும்புவதும் ஒன்றும் இல்லை .என்றாலும் நான் தொடர்ந்து செயல் புரிந்து கொண்டே இருக்கிறேன் நான் ஒரு நொடி செயல் புரியாவிட்டால் உலகம் முழுவதும் அழிந்து போகும் .(3.22-24)"

           " மற்ற தேவதைகளை வழிபடுபவர்களும் உண்மையில் என்னையே வழிபடுகிறார்கள் .(9.23)"என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் .உருவ கடவுளை மனிதன் வழிபடுகிறான் நீங்கள் கடவுளை தவறான பெயரால் வழங்கினால் ,அவர் கோபம் கொள்வாரா ? அப்படியானால் அவர் கடவுள் அல்ல ஒருவன் கல்லை தொழுதாலும் எந்த உருவத்தை தன் இதயத்தில் கொள்கிறானோ அது கடவுள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியாதா ?எப்படி வழி  பட்டாலென்ன சமயம் என்பது கொள்கை என்ற கருத்தை நாம் அகற்றி விட்டால் ,உண்மையை இன்னும் தெளிவாக காண முடியும்

            நீங்கள் தலை கீழாக நிற்பதலோ ,ஒற்றை காலால் நிற்பதலோ அல்லது மூன்று தலைகளுடன் கூடிய ஐயாயிரம் தெய்வங்களை வழிபடுவதலோ பிரம்மத்தை அடைய முடியுமானால் அப்படியே செய்யுங்கள் அதை பற்றி எதுவும் சொல்ல யாருக்கும் உருமை இல்லை உங்கள் வழி சிறந்ததாக ,உயர்ந்ததாக இருந்தாலும் மற்றவனுடையது கெட்டதென்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார் .

           " ஒவ்வொருவரும் அவரவருடைய இயல்பின் படியே செயல் புரிகிறார்கள்.அவர்கள் அதை மீற முடியாது .(3.33)"

           ஸ்ரீ கிருஷ்ணரின் கருத்துப்படி நாம் இப்போதுதான் பிறந்த புதியவர்கள் அல்ல நம் மனங்களும் புதியவை அல்ல .ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது மனித இனத்தின் கடந்த காலம் முழுவதையும் மட்டுமின்றி ,பழைய ,நிகழ்கின்ற அத்தியாயங்களும் எதிர்கால அத்தியாயங்களின் தொகுதியும் அந்த குழந்தைக்கு முன் இருகின்றன .

            ஒரே மாதிரியான உள்ளமும் ஒரே மாதிரியான உடலும் கொண்ட இருவர் இந்த உலகில் இல்லை .ஒரே மதமுடைய இருவரும் இல்லை

            நீங்கள் ஆன்மீக வாழ்க்கையை விரும்பினால் கட்டுக்கோப்பாக இருக்கும் எந்த மதங்களையும் பின்பற்ற வேண்டாம் அந்த மதங்கள் ஒவ்வொருவரின் தனி வளர்ச்சியை தடை படுத்துகின்றன

             "இன்னொருவரின் இயல்பிற்கு பொருந்திய சமயம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அதை பின்பற்றாமல் உங்கள் இயல்பிற்கேற்ற சமயத்தை பின்பற்றுவதிலேயே உயிர்துறப்பது நல்லது (3.35)"

             " யாருடைய ஒவ்வொரு முயற்சியும் பலனில் விருப்பமில்லாமல் ,சுய நலத்தில் நாட்டமில்லாமல் பற்று அற்றதாயிருகிறதோ ,அவனை அறிஞன் எனப் பெரியோர் கூறுகின்றனர் .( 4.19)"

              பலவீனம் தளைகள் அனைத்தும் கற்பனை .அவற்றை பார்த்து ஒரு வார்த்தை சொன்னால் ,அவை மறைந்து ஒழிய வேண்டும். பலவீனமடையாதீர்கள் ! தப்புவதற்கு வேறு வழி இல்லை வீரர்களாக எழுந்து நில்லுங்கள் !அச்சம் வேண்டாம் !மூட நம்பிக்கை வேண்டாம் !உண்மையை கண்டு அஞ்ச வேண்டாம் .மிக கொடிய துன்பமான மரணம் வந்தாலும் வரட்டும்! நாம் இன்பமாக உயிரை விட துணிந்துள்ளோம் .எனக்கு தெரிந்த மதெமெல்லாம் அவ்வளவுதான் நான் இன்னும் அதை அடைய வில்லை ஆனால் அதற்காக போராடி கொண்டிருக்கிறேன் நான் அடையாமல் போகலாம் ;ஆனால் நீங்கள் அடையலாம் முன்னேருங்கள் .

                                  *******************************************************

ஸ்ரீ மாதா அமிர்தானந்தமாயி தேவி :

             பெரும் பாரத்தைச  சுமந்து வருபவனுக்கு சுமை தாங்கி அருகில் இருக்கிறது என்று தெரிந்தால் ஆறுதல் கிடைக்கிறது .மாறாக சுமைதாங்கி தூரத்தில் இருக்கிறது என்று சிந்தித்தால் சுமை அதிகரிப்பதாகவே தோன்றும் அது போல 'இறைவன் நம் அருகில் இருக்கிறார் ' என்று சிந்திக்கும் போது நமது மன சுமை  குறையும் படகிலோ ,பஸ்ஸிலோ ஏறியப்பின் சுமையை நாம் ஏன் சுமக்க வேண்டும் ? அது போல இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட வேண்டும் அவன் நம்மை கபாற்றுவான் .

             ஒரு பெண்ணை ,உடன்பிறந்தவன் சகோதிரியாகவும் ,கட்டியவன் மனைவியாகவும் ,தந்தை மகளாகவும் ,காண்கின்றனர் யார் எந்த உறவு முறையில் கண்டாலும் அவள் ஒருத்தியே அது போல் கடவுள் ஒருவரே. ஒவ்வொருவரும் தங்கள் மன இயல்புக்கேற்ப வெவ்வேறு பாவனைகளில் காணலாம்  ஒவ்வொருவரும் அவரவரது பண்பாட்டிற்கு  ஏற்ப  கடவுளை புரிந்து கொள்கின்றனர் .அதற்கேற்ப வழிபாட்டு முறைகளையும் மேற்கொள்கின்றனர் .

     அவதாரங்கள் :         குழந்தையின் கையை பிடித்து நடத்தி செல்பவர் அதன் நடைக்கேற்ப மெதுவாக நடக்க வேண்டும் இல்லையெனில் குழந்தை தடுமாறி விழுந்து விடும் .அதுபோல சாதாரண மக்களை உயர்த்த அவதாரங்கள் அவர்களது நிலைக்கு இறங்கி வந்தவர்கள் 

     மந்திரம் :    மந்திரம் மனதை துய்மை படுத்த ஏற்பட்டதாகும் .இறைவனைத் திருப்திபடுத்துதற்காக  ஏற்பட்டதல்ல . மந்திரத்தால் இறைவனுக்கு ஆகவேண்டியது என்ன இருக்கிறது ?

     விரதங்கள் :   கடல் அலைகளை கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கக் கரை இருக்கிறது .ஆன்மிக வாழ்வில் விரதங்கள் எண்ண அலைகளைக் கட்டுபடுத்துகின்றன 

      பிறப்பு :    நாம் ஒரு குழிக்குள் விழுந்து விட்டால் சரியாக வழி காட்ட வில்லை என்று சொல்லி நம் கண்களை பறித்து விடுவோமா ? நம் கண்களின் குற்றத்தை நாம் பொருத்து கொள்வது போல பிறந்த குறைகளையும் பொருத்து கொண்டு அவர்களிடம் கருணை காட்ட வேண்டும் .

               சாதனை புரியாது சாஸ்திரம் படிப்பதிலேயே காலத்தைக் கழிப்பவன் வீடு கட்டுவதற்க்கான வரைபடத்தில்  குடியிருக்க முயலும் முட்டாளுக்கு சமம் .

                                 *****************************************************************

ஸ்ரீ சக்தி அம்மா  [ஸ்ரீ நாராயணி பீடம் :-

             கடவுள் அனைத்தையும் நமக்கு அளிப்பவர் .கடவுளுக்கு நம்மிடமிருந்து எதுவும் தேவையில்லை அவ்வாறு இருக்க நாம் ஏன் உணவு ,பால் போன்ற பொருட்களைக் கடவுளுக்குச சமர்ப்பிக்கிறோம் ? ஏன் பூஜைகள் செய்கிறோம் ? இவையாவும் ஆத்மாவுக்காக .ஆத்மாவுக்கு சந்தோஷம் ஏற்படவே பூஜைகள் .

              குழந்தைக்கு உடைகள் அணிவிப்பதால் குழந்தை சந்தோசப்படுகிறதா? குழந்தை இதை பற்றி கவலை படுகிறதா? இல்லை .விதவிதமான கலர்களில் தமக்கு பிடித்தமான ஆடைகளை அணிவித்து தாய் மகிழ்ச்சி கொள்கிறாள் .அது போலவே பக்தர்கள் கடவுள்களை அலங்கரித்து அதனால் மகிழ்ச்சி அடைகிறார்கள் .

            கோ பூஜை  :    ஒரு பசு ஒரு நாளுக்கு பத்து லிட்டர் பால் கொடுக்கிறது என்றால் அதைவிடப் பெரிய விலங்கான யானை 100 லிட்டரும் ,குதிரை 20 லிட்டரும் ,கொடுக்க வேண்டும் . இது நடக்கிறதா? இல்லை . மற்ற விலங்குகள் தங்களுடைய குழந்தைகளுக்குத் தேவையான பாலை மட்டுமே கொடுக்க முடிகிறது .தன்னுடைய கன்றுக்கு தேவையானதற்கு மேலாக பாலை தரும் ஒரே ஜீவராசி பசுவாகும் . இதை வைத்தே பசுவின் உள்ளே இருக்கும் தெய்வீகத்தை புரிந்து கொள்ள முடியும் .

                              ************************************************************

               S.V. ராஜ ரத்தினம்,  செங்குந்தபுரம், கரூர்- 2. செல் எண் - 9443425240