திரு. ஸ்ரீசிவன் ஸ்வாமிகள் எழுதிய ஏணிப்படிகளில் மாந்தர்கள் என்ற புத்தகத்தில் இருந்து
இந்த அகண்டம் முழுவதும்
நிரம்பியிருப்பதும், எந்த விதமான உருவத்தையும் கொள்ளாததும், உலகத்தினரால் உணர முடியாததும்,
எந்த விதத்திலும் திருப்திகரமாக விவரிக்க முடியாததும், தெய்வங்களை ச்ருஷ்டிக்கும் மகத்தான
சக்தியை கொண்டதுமான ஒர் பரம்பொருளை கடவுள் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. நமது உபநிதஷத்துகளைத்
தவிர, அன்னிய மத புத்தகங்கள் இந்த உண்மையை அறியா.
ஆனால் அன்னிய மதங்கள்
அத்தகைய ஒரே கடவுளை தவறாக கற்பித்து கொண்டு விட்டதுடன் நிற்காமல், நாம் பொய் தெய்வங்களில்
தடுமாறிக் கொண்டிருப்பதாகவும் நம்மை கேவலப்படுத்தி யிருக்கின்றன. மேலும், நமது மகான்கள்
தெய்வங்களை ஆராதித்து வந்தவர்களாதலால் அவர்களுடைய ஸமாதிகளை வணங்கக்கூடாது என்பதாக குரானிலும்
கட்டளை யிட்டிருக்கிறது. ஆரம்ப காலத்திய நபியின் கஷியினர்கள் இதை ஏற்றாலும்கூட,
Safa, Marwa [ஸாவா, மார்வா] என்ற இரு ப்ரக்யாதி பெற்ற தெய்வமத மகான்களின் ஸமாதிகளுக்கு
மட்டும் விதிவிலக்கேற்க நபியிடம் மன்றாடினர். அவர்களுடைய கோரிக்கைக்கு நபி மனமில்லாமல்
இசைந்தார். நமது வைதீகர்கள் பகவன் நாமாக்களை உச்சரித்து ஜெபமாலையை உருட்டுவதைப் போல,
முஸ்லீம் மெளல்விகளும் Safa, Marwa பெயர்களை உச்சரித்து அவர்களுக்குள்ள ஜெபமாலையை இன்றைக்கும்
உருட்டி வருகிறார்கள்.
ஆரம்ப காலங்களில்
ஒவ்வொரு நாடாக மதம் மாற்றி வந்த கிருஸ்தவமும் இஸ்லாமும் அந்தந்த நாடுகளிலிருந்த கோவில்களை
இடித்து அல்லது மேல்பாகத்தை மாற்றி தத்தமருடைய கோபுர பாணிகளில் அமைத்து வழிபாடு செய்ய
வகை வகுத்து தந்தனர். புதிதாக மதம் மாறிய தெய்வமதத்தினர்களோ அன்னிய கடவுள்களை அதே புனித
ஸ்தலங்களிலாவது வழிபடும் ஆறுதலை ஒரளவு ஏற்று வந்தனர்.
நமது தேசத்தில்
சில பழைய சிறிய மசூதிகளை கவனிக்க நேர்ந்தால் அவைகளில் நமது கலாசாரத்திய பாணிகளில் அமைந்திருக்கும்
உட்புற மண்டபங்களையும் தூண்களையும் நீங்கள் காணலாம். நமது தமிழ்நாட்டின் சில ஊர்களில்
தெருக்கள் கூடுமிடத்தில் காணப்படும் சிறிய மசூதிகளனைத்தும் நமது பழைய பிள்ளையார் கோவில்களாகும்.
தமிழ்நாட்டில் மசூதிகளாக மாற்றப்பட்ட சில கோவில்களுள், திருச்சி கோட்டை ஸ்டேஷனுக்கு
அருகே பெரிய இஸ்லாம் விமானத்துடன் [Dome] காணப்படும் நத்தர்ஷா என்ற மசூதி, ரத்னகிரீச்வரர்
என்ற சிவாலயத்தின் மீது எழுப்ப பட்டதாகும்.
நாகூர் தர்க்காவும் வேளாங்கன்னியும்
துறவிகளும், ஞானிகளும்
தெய்வமதத்தை சார்ந்தவர்களென்பதையோ, தெய்வ வணக்கத்தை கடந்தவர்களென்பதையோ அன்னிய மதங்கள்
அறியாதவைகளாகும். அற்புதங்களை புரியும் ஒருவர் கோவிலுக்கு போகாமல் தெய்வங்களையும் வணங்காமலிருந்தால்
அவரை ஒர் முஸ்லீம் மகானாகக் கருதிவிடுவது முஸ்லீம்களின் வழக்கமாக இருந்து வருகிறது.
இத்தகைய ஒர் சில துறவிகளின் ஸமாதிகள் இன்றைக்கும் முஸ்லீம்களின் ஆதிக்கத்தில் இருந்து
வருகின்றன.
சோழ நாட்டில் வாழ்ந்து
வந்த வீராஸாமி என்ற வேதியர் துறவியின் நிலையை எய்திவிட்டார். இந்த துறவியின் அற்புத
நிகழ்ச்சிகளை கண்ணுற்று வந்த அந்த ப்ரதேசத்தினர் அவரை ஒர் பெரிய மகான் என்று போற்றி
வந்தனர். முஸ்லீம்களும் அதே விதமாக போற்றி வந்தனர். முஸ்லீம்களும் நமது துறவியை ஆச்ரயித்து
வணங்குவதைக் கண்ட ஹிந்துக்கள் பெருமையேற்று வந்தனர். கடைசியாக, துறவி தன்னுடைய சட்டையை
நாகூர் முஸ்லீம் வட்டாரத்தில் அகற்றிக்கொள்ள நேரிடவே, அவர்கள் துறவியின் உடலை அடக்கம்
செய்து ஒர் ஸமாதியையும் எழுப்பி விட்டனர். நாகூர் தர்க்கா என்று அழைக்கப்பட்டு வரும்
ஸமாதி அந்த நாளிலிருந்து முஸ்லீம்களின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. சென்ற நூற்றாண்டு
வரையில் ஹிந்துக்களும் அந்த ஸமாதியை தரிசித்து ப்ரார்த்தனை செலுத்தி வரும் வழக்கத்தை
ஏற்று வந்தனர். இன்றைக்கும் ஒரு சிலர் தரிசித்து வராமலில்லை. முஸ்லீம் பூசாரிகளும்
தரிசிப்பவர்களுக்கு மயில் தோகையால் மீரா ஸாஹீப் [வீராஸாஹீப்] என்ற பெயரால் ஆசி கொடுத்து
வருகின்றனர்.
வேளாங்கன்னி
தற்போது சின்னஞ்சிறு
நகரமாக விளங்கும் வேளாங்கன்னி 17-18 ம் நூற்றாண்டுகளில் ஒர் பட்டிக்காடாக இருந்தது.
அவ்விடத்தில் முக்யத்வத்தை கொள்ளாத ஒர் மாரியம்மன் ஒர்குடிசையின் கீழ் குடிகொண்டிருந்தாள்.
அக்காலத்தில் செம்படவர்களுக்கு நல்ல வாய்பை அளித்து வந்த அந்த பகுதியில் ஒர் ஏழை
கிழவி பணியாரங்களை விற்று ஜீவித்து வந்தாள். அவள் மிக்க நேர்மையுடன் வாழ்ந்து வந்ததுடன்
தெய்வ பக்தியிலும் சிறந்து விளங்கினாள். அவள் அன்றாடம் மாரியம்மனுக்கு ஒர் பணியாரத்தை
படைக்காமல் விற்பனையை தொடங்குவதில்லை.
இவ்வாறு ஜீவனத்தை நடத்தி வந்த ஒரு ஸமயத்தில்
விற்பனை குறைய ஆரம்பிக்கவே அவள் சற்று கவளைப் படலானாள். அந்த ஸமயத்திலும் மாரியம்மனுக்கு
பணியாரம் படைத்து வந்ததை நிறுத்தி விடவில்லை. ஒரு நாள் அந்தி பொழுது வரையில் பணியாரம்
ஏதும் விற்காமல் போகவே, அவள் மேலும் மனம் கலங்கலானாள். அந்த ஸமயத்தில் ஒரு பெண் அந்த
கிழவியை அணுகி, தனக்கு வேண்டிய பணியாரத்தை வாங்கிக் கொண்டு ஒரு சில பொன் காசுகளை கிழவியிடம்
நீட்டினாள். அதைக் கண்டு திகைத்த கிழவி அதை ஏற்க மனம் வராமல் தயங்கி நின்றாள். ஆனால்
கிழவியின் கையில் பொன்காசுகளை திணித்த அந்த பெண் அதே இடத்தில் கிழவியின் கண்களிலிருந்து
மறைந்து விட்டாள். மறைந்த பிறகுதான், தன்னை மாரியம்மன் கடாட்சியத்தை புரிந்து கொண்டாள்
கிழவி.
ஜனப் பெருக்கமற்றிருந்த
அந்த ப்ராந்தியத்தில் இந்த தெய்வீக அதிசியம் நாளாவட்டத்தில் பரவவே, அக்கம் பக்கத்திலுள்ள
கிராமவாசிகள் அந்த மாரியம்மனை நாடி வேண்டிக் கொள்ளும் வழக்கத்தை ஏற்று வந்தனர். இந்த
ஒரு காலத்தில் தான் வியாபாரத்தை வியாஜமாகக் கொண்ட ஒரு சில ஐரோப்பிய நாட்டினர்கள் தத்தமருடைய ஆதிக்கத்தை இந்தியாவில் ஸ்தாபிக்க போட்டியிட்டு
வந்தனர்.
இவர்களுள் டேனிஷ்
கிருஸ்தவர்கள், மாரியம்மனின் அற்புத சம்பவத்தை அறியவே நமது மாரியம்மனை சுற்றியுள்ள
ஒர் பெரும் நிலப்பகுதியை ஆக்ரமித்து கொண்டனர். மாரியம்மனுக்கு ஒர் சின்னஞ்சிறு கட்டிடத்தை
எழுப்பி கொடுத்ததுடன் அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு ஆடைகளையும் பொருளுதவிகளையும்
அளித்து வந்தனர். காலக்ரமத்தில் பெரும்பாலான கிராமத்தினர்களை வசப்படுத்தி மதம் மாற்றலானார்கள்.
மாரியம்மனும், மேரியம்மனும் ஒரே தெய்வம்தான் என்பதாக அவர்களுக்கு புகட்டினார்கள். மாரியம்மன்
சிலை அகற்றப்பட்டது. ஆனாலும் கவர்ச்சிகரமான மேரியின் சிலையும் ஜீஸஸின் சிலையும் அம்பாளின்
ஸ்தானத்தை கைப்பற்றின. இந்த ஒரு காலத்திலும் பல ஹிந்துக்கள் மாரியம்மன் என்ற பெயரால்
வழிபட்டு வந்தனர். இந்த காலத்திற்கு அடுத்த நூற்றாண்டில் மேரியம்மன் கோவில் ஒர் கம்பீரமான
மாதா கோவிலாக நிர்மாணிக்கப் பட்டதுடன் கிருஸ்தவமத கோவிலாகவும் ப்ரகடனப் படுத்தப் பட்டது.
இந்த இரு ஸ்தலங்களையும்
ஆரம்பத்திலிருந்தே ஹிந்துக்கள் தரிசித்து வந்ததால் அவர்களுடைய பரம்பரையினர் அதை தொடர்ந்து
பின்பற்றி வருகின்றனர். நான் வெளியிட்டிருக்கும் வரலாற்றை அன்னியர்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்
முஸ்லீம்களும், கிருஸ்தவர்களும் அந்த இரு ஸ்தலங்களையும் வழிபாட்டு ஸ்தலங்களாக நிலவ
வைத்திருப்பதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி
திரு. ஸ்ரீ சிவன் ஸ்வாமிகள்
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
புத்தக வெளியீடு - நர்மதா பதிப்பகம், சென்னை
பதிவாக்கம் - S.V.ராஜ ரத்தினம். கரூர்.