ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை
ஜெய் தேவாங்கா……..
ஜெய் ஜெய் தேவாங்கா.
தேவாங்கர் குல
மக்களுக்கு வணக்கம்.
நம் தேவாங்கர்
குல அன்னை ஸ்ரீசௌடேஸ்வரி அம்மனை சில ஏரியா மக்கள் வீட்டில் வைத்து கும்பிடுகிறார்கள்,
பல ஏரியா மக்கள் வீட்டில் வைத்து கும்மிடுவதற்கு அனுமதிப்பது இல்லை. நாங்கள் செளடேஸ்வரி அம்மனை அனைவரும்
வீட்டில் வைத்து கும்பிடுவதற்கு முயற்சி எடுக்கலாம் என்று நினைத்து அதை பற்றி பேஸ்
புக் மூலம் சர்வே எடுத்தோம். பலரும் பல விதமான கருத்துக்களை கூறியிருந்தீர்கள். அதை
பற்றி நம் குல முக்கியஸ்தர்களிடம் கேட்கலாம் என்று முகவரி கேட்டிருந்தோம். அனைவரும்
அளித்தீர்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று பெரியோர்களிடம் விசாரித்தோம். அதில் கிடைத்த
தகவலை தங்களுக்கு தருகிறோம்.
ஒவ்வொரு ஏரியாக்களிலும்
வெவ்வேறான நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் இருக்கின்றன.
உதாரணமாக-
A
|
B
|
||
1
|
ஶ்ரீசெளடம்மன் வழிபாடு [அம்மனை
ஏதோ ஒரு ரூபத்தில்]
|
வீட்டில் வைத்து கும்பிடுகிறார்கள்
|
வீட்டில் வைத்து கும்பிடுவது
இல்லை
|
2
|
கோவிலில் பிரசாதமாக அணிய
கொடுப்பது
|
பண்டாரம் என்கிற மஞ்சள்
கலவை
|
திருநீறு, குங்குமம், சந்தனம்
|
3
|
ஜனிமாரா என்ற பூணூல்
|
வருடம் ஒரு முறை ஆவணி மாதத்தில்
நோன்பு வைத்து போடுகிறார்கள்
|
பூணூல் போடுகிறார்கள் நோன்பு
வைத்து போடும் பழக்கம் இல்லை
|
4
|
கோவில் அப்ப என்று சொல்லக்கூடிய
வருட திருவிழா [சில இடங்களில் நவராத்ரி விழா]
|
சக்தி அழைப்பு, சாமுண்டி
அழைப்பு, ஜோதி கொண்டு வருதல், மஞ்சள் மெரமனை, வீரமுட்டி வேஷம்
|
அப்ப என்ற வார்த்தையே தெரியாது.
விழா என்பார்கள். கரகம் கொண்டு வருதல், முளைப்பாரி, ரதி சேர்த்தல் [அரிசிமாவு+ வெல்லம்
சேர்த்தல்], அம்மன் வீதி உலா
|
5
|
கத்தி போடுதல்
|
சிரிய கத்தி போட்டு கொண்டு
சலங்கை கட்டிக் கொண்டு வித,விதமாக நாட்டியம் போல் செய்கிறார்கள்
|
பெரிய கத்தி போடுகிறார்கள்.
இரத்தம் வழிய ஆக்ரோஷமாக போடுகிறார்கள். பத்தேவு என்கிற- வாளை வீசிக் கொண்டே அம்மன்
கதை+ மக்களுக்கான வேண்டுதல்கள் சொல்கிறார்கள்
|
6
|
சக்தி நிலை நிறுத்துதல்
[மண் சட்டியின் மேல் விழிம்பில் ஜம்முதாடு கத்தியை நிறுத்துவது]
|
இந்த வழக்கம் இல்லை
|
10 திலிருந்து 20 வருடத்திற்கு
ஒரு முறை நிறுத்துகிறார்கள்
|
7
|
கத்தேவு பெட்டி [திரு நீறுபை,
ஜம்முதாடு கத்தி என்ற சக்தியை வைத்திருப்பது]
|
இந்த முறை இல்லை
|
இதை முக்கியமாக கருதுகிறார்கள்
|
8
|
திருமணம்-- தாலி கட்டுவது
|
மணமகனின் வலது பக்கம் மணமகளை
உட்கார வைத்து தாலி கட்டுகிறார்கள்
|
மணமகனின் இடது பக்கம் மணமகளை
உட்கார வைத்து தாலி கட்டுகிறார்கள்
|
9
|
இறந்தவர்களுக்கு செய்யும்
திவசம்
|
மூன்று படையல் வைத்து அரிசியை
வைத்து முறை செய்கிறார்கள்
|
ஒரு படையல் மட்டும் வைத்து
கும்பிடுகிறார்கள்
|
இன்னும் மற்ற பல
சடங்கு முறைகளிலும், பழக்க வழக்கங்களிலும், கன்னடம் பேச்சு வழக்கும் அந்த, அந்த ஏரியா
மக்களின் பழக்க வழகங்களோடு கலந்து இருப்பதால், இவற்றை யெல்லாம் மாற்றி ஒருமுக படுத்துவது
சிரமம். ஆகவே அவரவர்கள் பிறந்ததிலிருந்தே இரத்திலேயே ஊறி போன பழக்க வழக்கங்களை மாற்ற
முடியாது. தேவாங்க மக்கள் அந்த,அந்த ஏரியா வழக்கப்படி நடந்து கொள்ளட்டும்.
யாரும், யாருடையதையும் குறைத்து மதிப்பிடாமல் அனைவருடையதையும் மதித்து நடந்து கொள்வோம். இதை செய்தாலே போதும். நம் குலம் ஒற்றுமையுடன் இருக்கும். ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
யாரும், யாருடையதையும் குறைத்து மதிப்பிடாமல் அனைவருடையதையும் மதித்து நடந்து கொள்வோம். இதை செய்தாலே போதும். நம் குலம் ஒற்றுமையுடன் இருக்கும். ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
ஜெய் தேவாங்கா……..
ஜெய் ஜெய் தேவாங்கா
அன்புடன்
S.V.
ராஜ ரத்தினம்.------ ர. பார்த்திபன் தீபு