திரு. M.K.Soundappan [அணுகுண்டு தாத்தா]
திருமதி. S.Valliyammal
சின்னவதம்பசேரி
Address : Anugundu Thatha,
(Atombombgrandpa)
3, Thirumurugan Nagar,
Maruthamalai Main Road,
Vadavalli, Coimbatore –
641 041
Tamilnadu, India
Phone : 0422-2424012, Cell : 93677 34813.
பாகம்
- 1
இந்த நல்ல நாளிலே
உங்கள் மத்தியில் தேசபக்தி-தெய்வபக்தி என்னும் தலைப்பில் உரையாற்றுகிறேன்.
தேசபக்தி என்னும் தலைப்பில் தேசப்பிதா
மகாத்மா காந்தி அவர்களைப்பற்றியும், தேசிய
கவி பாரதியாரும், பாரதியார் அவர்களின் கவிதையும் பொருளும பெற்ற சுதந்திரம்
சுதந்திரம் பெற நமது தேசத்
தலைவர்கள் பட்ட கஷ்டம் ஆகியவை
பற்றியும் பிறகு தெய்வ பக்தியில்
இனி மேல் பெறவேண்டிய உலக
சுதந்திரம் பற்றியும், ‘அணுகுண்டின் நன்மை’ என்பது பற்றியும்
எளிமையாக விளக்கிக் கூறுகிறேன்.
மாணவர்களே! முதலாவதாக நம் தமிழ் மொழியைப்
பற்றி மகாகவி பாரதியார் பாடியுள்ள
பாடலை நான் பாடுகிறேன். கேளுங்கள்.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வானமளந்த
தனைத்து மளந்திடும்
வண்மொழி வாழியவே
ஏழ் கடல் வைப்பினும் தன்
மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள்
தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி
நீங்கத் தமிழ் மொழி ஒங்கித்
துலங்குக வையகமே
தொல்லை
வினைதரு தொல்லையகன்று
சுடருக தமிழ் நாடே
சுடருக தமிழ் நாடே.
நானும்
பாடிவிட்டேன். நீங்களும் கேட்டுக் கொண்டீர்கள். ஆனால் பாடலின் கருத்துகள்
உள்ளத்தில் பதியவேண்டுமானால் பாடலுக்குப் பொருள் (அர்த்தம்) தெரிந்து
கொள்ள வேண்டும்.
ஆகவே பொருள் கூறுகிறேன். பாரதியார்
பிறப்பு 1881. இயற்கை எய்தியது1921. தற்போது
2004-ம் ஆண்டு பாரதியாரின் பிறந்தநாள்
123 வது பிறந்த நாளாகிறது. அதாவது
பாரதியார் பாடல் இயற்றத் துவங்கி
சுமார் 110 ஆண்டுகளாகிறது. அவர் பிறந்த ஊர்
எட்டயபுரம். உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு காசிக்குப்போய்
அத்தைவீட்டில் தங்கி, காசியில் சமஸ்கிருதம்
படித்து ஆங்கிலமும் படித்து எட்டயபுரம் வந்தார்.
மதுரையில்
ஒரு பள்ளியில் சில மாதங்கள் ஆசிரியராகப்
பணியாற்றிவிட்டு நீங்கிக் கொண்டார். பிறகு சென்னையிலும் புதுவையிலும்
பத்திரிக்கை ஆசிரியராகப் பணிமேற் கொண்டு வாழ்ந்தார்.
பாரதியாருக்கு 14 வயதிலேயே திருமணம் செய்யப்பட்டது. ஏழ்மை வாழ்க்கையே வாழ்ந்தார்.
ஆனால் மொழிப்பற்று அவருடைய பாடல் மூலம
அறிவது நன்று. அதாவது தமிழ்மொழியை
‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய
வாழியவே’, என்று முதலில் வாழ்த்துறார்.
1930 ல் தமிழ்நாட்டில் (83 வயதாகிய அணுகுண்டு தாத்தாவாகிய
நான் 1,2,3 -ம் வகுப்பு படிக்கும்
காலங்களில் எனது சொந்த ஊர்
சின்னவதம்பச் சேரியில் பள்ளிக்கூடம் இல்லை. 15 ஊர்களுக்கு ஒரே ஊரில் ஒரு
பள்ளிக்கூடம் மட்டும் இருந்தது. 30 ஆண்
குழந்தைகள் மட்டுமே அதில் படித்தார்கள்.
அதன்படி சிந்தித்தால் நம் தமிழ்நாட்டில் தேவையான
பள்ளிக் கூடங்கள் அப்போது இல்லை. அதிலும்
படித்த பெற்றோர்கள் இல்லை. தங்கள் குழந்தைகள்
கல்வி கற்பது தேவையில்லை. ஏதாவது
தொழில் செய்து வாழ்ந்து கொள்வார்கள்
என்று எண்ணிக் கொள்வார்கள். ஆகவே
சுமார் 1895ம் ஆண்டு காலங்களில்
நம் தமிழ் நாட்டில் 1000 க்கு
2 பேர் படித்தவர்கள் இருந்திருக்கலாம்.
1895-க்கும்
முன்னதாக சுமார் 150 ஆண்டுகளாக வெள்ளையர் (ஆங்கிலேயர்) நம்மை நமது இந்திய
நாட்டை ஆண்டு வருகிறார்கள். பல
நாடுகளாக (பல மன்னர்களால்) சிதறியிருந்ததை
ஆங்கிலேயர்கள்தான் ஒரே இந்தியாவாக ஆக்கினார்கள்.
ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் காகிதங்கள், பென்சில்கள் பெற்று எழுதப்படிக்க நேரிட்டது.
ஆங்கிலேயருக்கு முந்தைய காலத்தில் நம
மூதாதையர்கள் பனை ஓலையில் எழுதுவார்கள்.
அதுவும் லட்சத்தில் ஒருவர்தான் எழுத முற்படுவார்கள். முன்காலத்தில்
மன்னர்களுக்கு அரண்மனை. மற்ற குடிமக்களுக்கு மண்சுவர்
இருந்தும் இல்லாமலும் குடிசைகள்தான் வீடு. அந்தக்காலத்தில் சிமிண்ட்,
காரை, செங்கல் கிடையாது. கொடுக்கல்
வாங்கலுக்கு வியாபார வசதிக்கு கூலி
கொடுப்பதற்கு, பணம் காசு கிடையாது.
எல்லாம் பண்டமாற்றுதல் மட்டுமே. சொத்து சேர்க்க வேண்டும்
என்று நினைப்பதற்கே அதிகபட்ச மக்களுக்கு தேவையில்லாத வாழ்க்கை அமைந்துவிட்டது. இதையெல்லாம் சிந்திக்கும் பொழுது ஆங்கிலேயர் ஆட்சியில்
பாரதி கல்வி கற்றுள்ளார். அவர்
காலத்தில் 100க்கு 4 பேர் கற்றவர்கள்
இல்லை.
அப்படியிருந்தும்
பாரதியார் தமிழ்மொழியை “வாழ்க நிரந்தரம்” என்று
வாழ்த்துகிறார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள
வேண்டியது என்னவென்றால் எந்தக் காலமும் எல்லாக்
காலமும் தமிழ் சிறந்து விளங்கவேண்டும்
என்றால் தமிழ்நாட்டில் வாழும் நாம் அனைவரும்
தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக் கொண்டால்தான் தமிழ்
மொழி உலகில் நிரந்தரமாக சிறப்போடு
வளரும்.
மேலும்,
வானமளந்த தனைத்தும ளந்திடும்
வண் மொழி வாழியவே
யென
வானத்தின்
நடுவில் உள்ள உலகில்
அழகிய தமிழ்மொழி வாழ்க
ஏழ்கடல்
வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
என்கிறார்.
அதாவது ஏழ் கடலைத் தாங்கியுள்ள
உலகில் தமிழ்மொழி இசை கொண்டு வாழ
வாழ்த்துகிறார் பாரதியார் பேராசையுடன்.
பிறகு இன்றைய காலம்வரை
தமிழர்களாக நாம் வாழ்ந்தாலும் தமிழ்
மொழியை சொந்தம் பாராட்டி ‘எங்கள்
தமிழ்மொழி’ என்று சொல்லும் எண்ணம்
உதிப்பதில்லை. ஆகவேதான் இனிமேலாவது நாம் தமிழர்கள் என
உணர்ந்து எங்கள் தமிழ் என
உணர வேண்டும் என்பதற்காக இரண்டு முறை ‘எங்கள்
தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி’ என
அனைவர்க்கும் கடுமையாகச் சொல்லி, என்றென்றைக்கும் வாழியவே
என வாழத்துகிறார். இது நம் எல்லோர்
உள்ளத்திலும் பதிய வேண்டும்.
பிறகு,
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி
ஓங்கித்
துலங்குக வையகமே
என்கிறார்.
அதாவது தமிழ்மொழி சிறந்து பரவுவதன் மூலம
உலக மக்களைச் சூழும் துன்பங்கள் நீங்கி,
உலகில் மக்கள் சிறப்புடன் வாழ
வாழத்துகிறார்.
தொல்லை வினை தரும்
தொல்லையகன்று
சுடருக தமிழ் நாடே
என்கிறார்.
அதாவது தமிழ்மொழி பரவுவதன்
மூலம் தமிழ் பண்பு வளர்வதால்,
தொல்லையை விளைவிக்கும் துன்பங்கள் மக்களை நெருங்காமல் அகன்று
விடும் எனும் கருத்தை எங்களுக்குச்
சொல்லி, ‘தமிழ்நாடே, நீ உலகில் தமிழப்
பண்பு வளர, பரவ சுடர்
விளக்காக ஒளி வீசுவாயாக’ எனப்
பாரதியார் தமிழ் மொழியை வாழ்த்துகிறhர்.
ஆகவே மாணவர்களே. நம்
தாய் மொழியை, தமிழ்க் கல்வியை
தவறில்லாமல் கற்க வேண்டும் தமிழ்
பற்றுடன். ஆம்;; தமிழ்ப்பற்று வேண்டும்.
தமிழ் வெறி வேண்டியதில்லை.
சிலர், பள்ளிகளில் தமிழ்மட்டும்
கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழ்
வளர வேண்டுமானால் வேற்று மொழிப் பாடம்
பள்ளிகளில் கற்றுத் தரக் கூடாது
என சமயம் போல் வாதாடுவார்கள்.
இது நம் தமிழ்நாட்டு மக்களுக்குத்
தற்காலத்தில் உலகத்தோடு ஒட்டிவாழ இயலாது போய்விடும்.
எனவே நாம் நம்
மொழி தமிழைச் சிறப்பாகக் கற்பதுடன்
வேற்று மொழியான உலக மொழி
ஆங்கிலத்தையும் கற்கவேண்டும். ஒருவர் சில மொழிகளை
எழுதப்படிக்கத் தெரிந்து கொள்வது மிக்க நலம்.
அதற்காக தனது தாய்மொழியை மறக்க
வேண்டும் என்பதல்ல.
ஆகவே இரண்டாவது மொழியாக
ஆங்கிலத்தையும் முக்கியமாக இந்தி மொழியையும கற்றுக்
கொள்ள வேண்டும். ஆங்கிலம் உலகில் பரவியுள்ளதுடன் தமிழ்
நாட்டில் நாமும் ஆங்கிலச் சொற்களை
அதிக அளவில் இயல்பாக உபயோகப்படுத்துகிறோம்.
எப்படியெனில், மாணவர்களே, உங்கள் வீட்டிலுள்ள சுமார்
80 வயது பாட்டன், பாட்டிகள் பேசுவதை கவனிக்கவும். அவர்கள்
பள்ளிக்கூடத்துக்குச் செல்லவும் இல்லை. படிக்கவும் இல்லை.
ஆனால் அவர்கள் பேசும் பேச்சில்,
டேபிள், சேர், பிளேட், டிக்கட்,
போலீஸ் ஸ்டேஷன், ஏரோப்பிளேன், ரேடியோ, கூ.ஏ.இ போன்ற இன்னும்
அநேக சொற்களை ஆங்கிலத்தில்தான் சொல்வார்கள்.
அதாவது ஆங்கிலம் வழக்கில் கலந்து விட்டது. ஆகவே
மாணவர்களே, நீங்கள் ஆங்கிலம் கற்பது
எளிது. நீங்கள் எதைச்சொன்னாலும் பெயர்ச்
சொற்கள் ஆங்கிலமாகவேயிருக்கும். எனவே ஆங்கிலத்தில் வினைச்
சொற்களைக் கற்று வாக்கியங்கள் அமைத்துக்
கொள்வது சுலபம். ஆகையினால் தமிழை
வலது கண்ணாகவும் ஆங்கிலத்தை இடது கண்ணாகவும் ஹிந்தியை
நெற்றிக் கண்ணாகவும் நினைத்து மூன்று மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.
கற்றுக் கொண்டால்தான் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கை உன்னதமாக
அமையும்.
அதனால் தான் திருவள்ளுவர்,
கண்ணிரண்டுடையோர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையோர்
கல்லாதார்’ என்று சொல்லுகிறார்.
மகாகவி பாரதி, ‘யாமறிந்த
மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணேன்’ என்று பாராட்டி,
‘தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும்
வகை செய்தல் வேண்டும்’ என்று
தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விட்டு விட்டார். மாணவர்கள்
இதைக் கருத்தில் பதிய வைத்து தமிழைப்
போற்றி, கற்று, தமிழ்த்தாய் உலகில்
வலம் வரச் செய்ய வேண்டும்.
தவிர, நமக்குத் தாய்மொழி
தமிழ் எப்படியோ அதேபோல ஆங்கிலேயருக்கு ஆங்கிலம
தாய்மொழி. பிரெஞ்சுக்காரருக்கு பிரெஞ்சு தாய்மொழி. ஜெர்மெனிகாரருக்கு ஜெர்மன் மொழி தாய்மொழி.
ரஷ்யர்களுக்கு ரஷ்யாவில் பல சிறு சிறு
மாநிலங்களில் பல மொழி பேசப்படுகிறது.
அவரவர்களுக்கு அவரவர்கள் மொழி தாய்மொழி. இதிலிருந்து
நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் எல்லா
மொழிகளும் தாய்கள். அதாவது சகோதரிகள். ஆகையினால்
உலகில் அனைவருக்கும் மொழிகள், அம்மா, பெரியம்மா, சின்னம்மா
ஆவதால் எந்தத் தாயையும் வெறுக்கக்
கூடாது. தூஷிக்கக் கூடாது. மொழிச் சண்டையை
உண்டாக்கிக் கொள்ளக் கூடாது. மற்ற
மொழி பேசும் மக்களிடம் பெரிய
தாயார் மக்கள், சிறிய தாயார்
மக்கள் என உறவு கொள்ள
வேண்டும். நமக்குத் தேவையான மொழியை நல்ல
முறையில் கற்று வாழ்க்கையில் சிறப்படைய
வேண்டும்.
‘இனிய உளவாக இன்னாத
கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’
என்று வள்ளுவர் கூறுவதைக் கருத்தில் கொண்டு கற்க கருத்துடன்
என்று உங்களையெல்லாம் அணுகுண்டு தாத்தாவாகிய நான் ஆசீர்வதிக்கிறேன் மாணவர்களே,
பாரதி அவர்கள் தமிழ் மொழி
பற்றி கூறியிருப்பதை எடுத்துக் காட்டினேன்.
தமிழ்நாடு
இனி தமிழ்நாட்டைப் பற்றி
மகாகவி பாரதி என்ன சொல்லுகிறhர் என்பதை அவர்
பாடல் மூலமாக அறிவோம். பாரதியார்
தமிழ்நாடு பற்றி இயற்றியுள்ள பாடல்
நீங்கள் எல்லோரும் அறிந்ததே.
இந்தப் பாடலும் பாரதியார்
இயற்றி 100 ஆண்டுகளாகிறது. அதாவது ‘செந்தமிழ் நாடனெனும்
போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’
என்கிறார். அதாவது தேனைச் சாப்பிட்டால்
நா இனிக்கிறது. அது தூய தமிழ்
நாடு என்று சொல்லும் பொழுது
காதுகள் இனிக்கின்றன என்று சொல்லி பாரதி
ரசிக்கிறார்.
எங்கள், தந்தையர் நாடென்னும்
பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது
மூச்சினிலே’ என்கிறார். அதாவது வாடகை வீட்டிலே
இருப்பதைவிட சொந்த வீட்டிலே இருக்கிறோம்
என்று சொன்னால் மதிப்பும் மரியாதையும் அதிகம். அது மாதிரி
எங்கள் மூதாதையர் நாடு என்று சொல்லும்
பொழுது நம் மூச்சுக் காற்றுக்கு
வலு ஏற்படுகிறது என்கிறார் பாரதியார்.
பிறகு,
‘வேதம்
நிறைந்த தமிழ்நாடு – உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு’
என்கிறார்.
பாரதி, அதாவது நீதி, நேர்மை,
சத்தியத்தைப் புகட்டும் வேத நூல்கள் நிறைந்துள்ள
தமிழ்நாடு என்று சொல்லி, நல்ல
பண்பு நிறைய பெற்று வீரத்துடன்
வாழும் மக்களைக் கொண்ட தமிழ்நாடு என்கிறார்.
அதாவது தம் தம்
; குடும்பத்தினருக்குப் பணிபுரிவதில் ஆர்வமும் ஆசையும் (காதல்) கொண்ட மங்கையர்கள்
உள்ள தமிழ்நாடு என்கிறார் பாரதியார்.
‘காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருணை நதி’
காவிரி ஆறும் தென்
பெண்ணை ஆறும் பாலாறும் என்று
சொல்லி, தமிழை மறக்காமல் தமிழ்
கண்டதோர் வையை என்கிறார். மூன்று
காலங்களில் தோன்றிய மூன்று தமிழ்
சங்கங்கள் மதுரையிலே தோன்றிய காரணத்தால் அந்த
மதுரையின் மத்தியிலே செல்லும் வைகை ஆற்றைக் கூறும்
பொழுது தமிழையும் மறக்காமல் ‘தமிழ்கண்டதோர் வைகை நதி’ என்ற
குறிப்பிட்டு பின் ‘பொருணை நதி
என மேவிய ஆறு பலவோடத்
திருமேனி செழித்த தமிழ்நாடு என்கிறார்.
பொருணை நதி முதிலிய
பல ஆறுகள் ஓடுகின்ற காரணத்தால்
வளம் கொழிக்கும் தமிழ்நாடு என்கிறார் பாரதியார்.
ஆகவே, நாம் அனைவரும்
நம் தமிழ் நாட்டில் வளமாக
வாழ்கிறோம். மேலும்,
‘கல்வி சிறந்த தமிழ்நாடு
– புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
– நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு’.
என்கிறார்.
அதாவது சமஸ்கிருத்தில் படைக்கப்பட்டிருந்த
இராமாயணத்தைத் தமிழில் கம்பர் மிகச்
சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். தமிழ்
கம்பராமாயணம் மனதை ஈர்க்கவல்லதாக கவி
கம்பர் அமைத்திருப்பதால் அதன் கருத்துகளையும் தமிழ்
மொழியையும் உலகெங்கும் பரப்பியுள்ள கம்பரைப் பெற்ற தமிழ்நாடு என
பாரதியார் சொல்லுகிறார். தவிர,
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட
தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்
– மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு’
என்கிறார்.
அதாவது
எந்த சாஸ்திர நூல்களும் ஒரு
சிலருக்கு சார்புடையதாக இருக்கும். மற்றவர்கள் அதை எதிர்ப்பதாக இருக்கும். ஆனால்
இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம், புத்தம் இன்னும் பல
மதத்தாருக்கும் ஆன்மீக-நாத்திக வாதிகளும்
ஒத்துக்கொள்ளக் கூடிய நீதி, நேர்மை,
சத்தியம், அஹிம்சை, அரசு நீதி, மக்கள்
ஒற்றுமை-இன்னும் பல நல்ல
மார்க்கங்களை அமைத்துத் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் உலகுக்கே
சொந்தம் என்பதாக மகாகவி பாரதியார்
கூறுகிறார். - இளங்கோ அடிகள் இயற்றிய
‘சிலப்பதிகாரம்’ என்னும் அரிய நூல்
மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறதென்றும் நமது
தமிழ் தாய் எத்தனை புகழ்
மலர் மாலைகள் அணிந்திருந்தாலும் மதிப்பற்ற
நவ மணிகளால் தொடுத்த நவமணி ஆரத்தை
தமிழ் தாய்க்கு அணிவித்த தமிழ்நாடு எனப்போற்றிப் பாரதியார் பாடுகிறார்.
மாணவர்களே,
தமிழ்மொழி பற்றியும் தமிழ்நாடு என்பது பற்றியும் மகாகவி
பாரதி இயற்றிய பாடல்கள் மூலம்
பல சிறப்புகளை அறிந்தோம்.
பாகம்-
2
பாரதநாடு
இனி, இந்தியா என்னும்
நமது பாரத தேசம் பற்றிய
40 பாடப் பிரிவுகளை 8 அடிகளில் கூறியிருக்கிறார். அதனை நாம் தெரிந்து
கொண்டு, அவற்றில் நாம் சிந்திக்க வேண்டியதைச்
சிந்தித்து, போற்ற வேண்டியதைப் போற்றி,
காக்க வேண்டியதைக் காத்து, நாட்டு மக்களின்
வாழ்க்கையில் நலம் காண நாம்
ஒன்றுபட வேண்டும் என்று சொல்லி பாரதியாரின்
பாடலுக்கு வருகிறேன்.
‘பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரதநாடு’
என்கிறார்
பாரதியார். அதாவது உலகிலுள்ள எல்லா
நாடுகளைவிட எங்கள் பாரதநாடு (இந்தியா)
எத்தன்மையிலும் உயர்ந்த நாடு என்கிறார்.
பிறகு,
1. ‘ஞானத்திலே
பரமோனத்திலே-உயர்
மானத்திலே அன்னதானத்திலே
கானத்திலே அமுதாக நிறையும்
கவிதையிலே உயர்நாடு’ - இந்தப் பாருக்குள்ளே
அதாவது, ஞானத்திலே பரமோனத்திலே
என்பது ஆன்மீக மார்க்கங்களில் ஒருமனதோடு
நிலைத்து, ஆண்டவன் திருவடியைப் பற்றிக்கொள்ளும்
ஞானத்திலேயும் பரமோனத்திலேயும், மானம் கெட்ட வாழ்க்கையைவிட
செத்துமடிவதே உயர்வு என்பதை உயர்மானத்திலே
என்றும் மற்றவர்களுக்கு தானம், தர்மம், உதவிகள்
செய்ய வேண்டிய நிலையிலே நாம்
வாழ வேண்டும் என்பதை அன்னதானத்திலேயென்றும், அமுதம் என்பது
தேவாமிர்தம் என்றும் சொல்லலாம். அதைச்
சாப்பிட்டால் சாவு என்னும் இறப்பு
கிடையாது. மருத்துவ முறையிலே அமுதத்தை மருந்து எனவும் கொள்ளலாம்.
அதாவது அமுதம் நோய் நொடிகளைப்
போக்கக் கூடியது. அதுபோல நம் பாரத
நாட்டு இன்னிசையை செவியுற்றால் உடலிலுள்ள வியாதிகளும் மன வியாதிகளும் அகலும்,
இப்படி அகலக்கூடிய அமுதகானம் நிறைந்த பாடல்களிலே, கவிதைகளிலே
உயர்வு பெற்று விளங்குவது நம்
பாரதநாடு என்கிறார் பாரதியார். இதிலே ஐந்து பாடம்
முடிந்தது. அடுத்தது,
2. ‘தீரத்திலே
படை வீரத்திலே – நெஞ்சில்
ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
தருவதிலே உயர் நாடு’ - இந்தப்
பாருக்குள்ளே
அதாவது, தீரத்திலே படைவீரத்திலே
நாட்டைப் பாதுகாக்கும் படைகள் நம் நாட்டுப்
பாது காவலர்கள். ஏதிரிகளைத்தாக்கும் வீரத்திலேயும் நெஞ்சுறுதி கொண்ட உடல் பல
தீரத்தலேயும் அவர்கள் கருணை இதயம்
படைத்த ஈர நெஞ்சுள்ளவர்கள் என்பதிலேயும்
அறிஞர்கள். நல்ல நல்ல நீதி
நூல்களைப் படைத்து உலகோர்க்குத் தருவதிலேயும்
உயர்ந்த நாடு இந்த (எங்கள்)
பாரத நாடுதான் என்று அடித்துக் கூறுகிறார்
பாரதியார்.
3. ‘நன்மையிலே
உடல் வன்மையிலே – செல்வப்
பன்மையிலே மறத் தன்மையிலே
பொன் மயிலொத்திடும் மாதர்தம்
கற்பின்
புகழினிலே உயர் நாடு” - இந்தப்
பாருக்குள்ளே
அதாவது, நன்மையிலே உலகில்
மக்களுக்குச் செய்யப்படும் நல்ல காரியங்களிலேயும் நம்
பாரத மக்கள் உடல் வலிமையிலேயும்
அழகிலேயும் அவரவர் செல்வத்தை அவரவர்
பாதுகாக்கும் பண்பிலேயும் நன்மையான காரியங்களில் உறுதி படைத்த மனம்
(குணம்) கொண்டிருப்பதிலேயும் சிறந்தவர்கள். பறவைகளில் சிறந்தது மயில். கற்பிற் சிறந்த
மங்கையரை வெறும் மயிலென கூறுவதைவிட
பொன்மயிலான (பொன்னை மயிலோடு இணைத்து)
மங்கையர்களை உயர்வாக விமர்சித்து, மாதர்
தம் கற்பின் நெறியினிலே உயர்நாடு
என்கிறார். அதாவது உலகில் உள்ள
மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் பாரத நாட்டில்தான்
ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருத்தன் என திருமணம் மூலம
கற்பைக் காத்துக் கொள்வது என்னும் பண்பு
நெறியை பெரும்பாலான மக்களாகிய நாம் கடைப்பிடித்து வாழ்கிறோம்.
இந்தப் பண்பின் நன்மை என்னவென்றால்
ஆண்களுடன் ஆண்களும், பெண்களுடன் பெண்களும், ஆண்களும் பெண்களும் போட்டி, பொறாமையோ, சண்டை,
சச்சரவோ குத்து, வெட்டு கொலைகளோ
ஏற்படாமல் இருப்பதுதான் நன்மை. இந்தக் காலத்தில்
வெறும் வாய்ப்பேச்சுக்கும் சிறு தகராறுக்கும் கொலை
விழும் காலமாக இருக்கிறது. ஆணோ,
பெண்ணோ கற்பு நெறியைக் கடைப்பிடிப்பதன்
மூலம் அனாவசிய தகராறு ஏற்பட
இடமில்லை. ஆகவே நாம், ஆணும்
பெண்ணும் இரு பாலரும் கற்பு
நெறியை உறுதியாய்க் கடைப்பிடித்து வாழ்வோம் என இக்கணமே உறுதி
கொள்வோம். மேலும்,
4. ‘ஆக்கத்திலே
தொழில் ஊக்கத்திலே – புய
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
காக்கத்திறல் கொண்ட மல்லர்தம் சேனைக்
கடமையில் உயர்நாடு’ - இந்த – பா – ந-
நாடு)
அதாவது, ஆக்கத்திலே தொழில்
ஊக்கத்திலே மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியத்
தேவையான உணவு, உடை, இருப்பிடம்
முதலிவற்றை உற்பத்தி செய்து நிறைவு செய்வதில்
ஆக்கமும் தொழிலில் ஊக்கம் கொண்டோரிலும் அதைத்
தொழில் புரிவதில் தேகதிடமும் தோள் -புய பலத்திலேயும்
இவற்றைப் பரந்த மனத்தோடு செய்ய
உயர்வான நோக்கத்திலேயும் நம் பாரத நாட்டு
எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் போர்ப்படைகள், போர் வீரர்கள் நம்
நாட்டைக் காக்கும் உணர்வு, பொறுப்பு, கடமை
தவறாமை ஆகியவற்றில் உயர்வு கொண்ட நாடு
நம் பாரத நாடு என
பாரதி சொல்கிறhர். இதுவரை
இருபது பாடம் முடிந்தது.
5. ‘வண்மையிலே உளத் திண்மையிலே – மனத்
திண்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர் (ஆசிரியர்)
உணர்வினிலே உயர் நாடு’
அதாவது, அழகு பொருந்திய
வாழ்க்கை வாழ்வதிலே, மன உறுதியிலே, எல்லோரும்
சமம் என விட்டுக்கொடுக்கும் பரந்த
மனத்திலேயும் நல்லதொரு காhpயத்தை அழமாக
சிந்திக்கும் ; நுண் கருத்தினிலேயும் மாணவர்களுக்கு
உண்மைகளை மட்டுமே கற்பிக்கும் ஆசிரியப்
பெருமக்களின் உயர்வு பெற்ற உணர்ச்சி
நிறைந்த உயர்நாடு என்கிறார்.
6. ‘யாகத்திலே தவ வேகத்திலே - தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார் – தம்
அருளினிலே உயர் நாடு’
உலகிலே
அனைவரும் நலமுடன் வாழவேண்டுமென்று இறைவனைப்
பிரார்த்திப்பதில் மக்கள் எளிதாகப் புரிந்து
கொள்ளும் மார்க்கம் யாகம் வளர்த்தல் அதாவது
பல மக்கள் ஒன்றுதிரண்டு சில
அர்ச்சகரை நியமித்து, அக்னி வளர்த்து, பல
திரவியங்களை அக்னியில் இட்டு, ஆண்டவனிடம் நலத்தை
அனைவரும் வேண்டிக் கொள்ளுதல்தான் யாகம்.
ஒரு நாள் யாகம் அல்லது
சில நாட்கள் யாகத்தை நீடிப்பது
மனம் ஒன்றுபட்டு இயங்குதலும் தனியொருவர் உலக நலனுக்கு ஆண்டவனை
வேண்டிக் கொள்ளுதல்.
இயற்கையில்
கிடைக்கக் கூடிய பல வளங்களை
மக்கள் உபயோகித்துக் கொள்ளுதலிலும், ஆன்மீகத்தில் இறைவன் மேல் பக்தி
கொண்ட தவப்பெரியோர்களின் அருளாசி நிறைந்த உயர்வான
நாடு என்கிறார்.
7. ‘ஆற்றினிலே சுனை ஊற்றினிலே – தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி
இனத்தினிலே உயர் நாடு’
அதாவது,
அணுகுண்டு தாத்தாவாகிய நான் 1922-ல் பிறந்தவன்.எனக்கு
விவரம் தெரிந்து 20 வயதுவரை ஆண்டுதோறும் மழைக்
காலங்களில் தவறாது பெரும் மழை
பெய்து 20 அடி ஆழத் தோட்டக்
கிணற்றில் மழை நீரும் மழையால்
நிலத்தடி நீரும் நிறைந்து சாளை,
தோட்டத்துப் பயிருக்கு நீர் இறைக்கும் உருளை,
தொலை முதலியவை கிணற்றுத் தண்ணீருக்குள் விழுந்து விடும். இப்படி விழாமலிருக்க
கிணற்றிலிருந்து தண்ணீர் வழிந்து வெளியே
போக கடவு வெட்டி, தண்ணீரை
வெளியே வழிந்தோடச் செய்வார்கள். இந்தக் கடவின் மூலம்
ஆறு மாதங்களுக்கத் தண்ணீர் வெளியேறும். மற்ற
ஆறு மாதங்களுக்குத் தண்ணீர் வெளியேறாவிட்டாலும் விவசாயத்துக்குத்
தேவையான தண்ணீர் கிணற்றில் நிலத்தடி
நீர் (நீர்-ஊற்று) பெருகிக்
கொண்டேயிருக்கும் - அதாவது வருடத்தில் 12 மாதங்களிலும்
தண்ணீர் பஞ்சமே கிடையாது.
எனக்கு
இருபது வயதுக்குப் பிறகு ஆண்டுக்காண்டு மழை
குறைந்து மாசி, பங்குனி, சித்திரை
வெயில் காலங்களில் தண்ணீர்ப் பற்றhக்குறை வளர்ந்து
வளர்ந்து இன்று 2004 – ல் கடும் தண்ணீர்ப்
பஞ்சம் தாண்டவமாடுகிறது. இன்றைக்கு நான் வசிப்பது திருப்பூரில்.
திருப்பூர்
நகரில் வாரம்தோறும் குடிநீர் சப்ளை கிடைக்கிறது. நகரில்
சில இடங்களில் குடம் தண்ணீரை ஒரு
ரூபாய் விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
நான் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் பில்டிங்கில் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 175 ரூபாயக்கு
லாரித்தண்ணீர் வாங்குகிறோம். இதை நம்புவதற்கு கஷ்டமாகயிருக்கும்.
வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். இது தண்ணீரைப்பற்றி மகாகவி
பாரதியார் எழுதியிருக்கிறார். ‘ஆற்றினிலே’ என்கிறார். இன்றைய காலகட்டத்தில் திருப்பூர்
நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும்
சலவைப்பட்டரை, சாயப்பட்டரை, நகர கழிவு, டிச்சு,
சாக்கடை நீர் யாவும் நிறைந்து
நிற்கும். சில சமயம் ஓடிக்கொண்டிருக்கும்.
இம்மாதிரி ஆற்றுத்தண்ணீரைக் கெடுக்காமல் இருக்க, ஆற்றின் உற்பத்தியிடத்திலிருந்து
முடியும்வரை பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். அதே சமயம் சுனைக்குப்
பதிலாக நாம் ஏற்படுத்தியுள்ள போர்
(100 – 1000 அடி ஆழம்) தண்ணீர் ஊற்று
கெடாமலிருக்கவும், ஒரு நிமிடம் காற்று
நின்றாலே உயிருள்ள ஜீவன்கள் மடிந்துவிடும். இது அனைவரும் அறிந்ததே.
அப்பேர்ப்பட்ட காற்றைக் கெடுக்காமலிருக்க வேண்டும். ஆனால் நகரத்தில் எந்தச்
சாலையில் சென்றாலும் டிச்சு நாற்றம் பொறுக்க
முடிவதில்லை. இது நோய்களுக்கு மூல
காரணம். இப்படி உயிர்க் காற்றைக்
கெடுக்கலாமா?
மலை வளம் என்று சொல்லக்
கூடிய, மலைகளில் பெரிய பெரிய மரங்கள்
நிறைய பல ஆண்டுகளாக வளர்ந்து
கொண்டிருக்கும், மரங்கள் அடர்ந்து இருப்பதால்தான்
மழை பெய்கிறது.
மழை பெய்யக் காரணமாயிருந்த மரங்கள்
எல்லாம் எப்படி இல்லாமல் போயிற்று?
அதாவது 1925 ஆம் ஆண்டுகளில் எனக்குத்
தெரிந்தவை. நாட்டில் கிராமங்கள் நிறைய இருக்கின்றன. கிராமத்தில்
உள்ள பெண்கள் அரிவாளும் கயிறும்
எடுத்துக்கொண்டு விடியற்காலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு,
கிராமத்துக்கு வெளியே வண்டிப்பாதை, நடைபாதை
நெடுகிலும் இரு புறமும் வளர்ந்துள்ள
மரமட்டைகளை வெட்டி, சுமைகட்டி, சுமையை
தூக்கி தலையில் சுமந்து வீட்டுக்குக்
கொண்டு வந்து (வாரம் இருமுறை
போர் அடுக்கி வைத்து ஈரம்காய்ந்த
பிறகு அடுப்பில் வைத்துத் தீமூட்டி, சமையல் செய்ய) விறகாக
உபயோகிப்பார்கள். இப்படி கிராமங்களைச் சுற்றி
மரங்கள் சுத்தமாக அழிந்தது ஒரு காரணம்.
பிறகு,
ஒரு நாள் விட்டு மறுநாள்
மர வியாபாரிகள் மாட்டுவண்டியில் வெட்டிய மரங்களை கிராமத்துக்குக்
கொண்டு வருவார்கள். அதை, வீட்டுப் பெண்கள்,
விறகு பொறுக்கப் போகமுடியாத சில குடும்பத்தார், வண்டியில்
வரும் வெட்டிய மரங்களை விலைக்கு
வாங்கி, கூலி ஆள்வைத்து விறகாகப்
பிளந்து அடுப்பில் வைத்து எhpப்பார்கள்.
இம்மாதிரி மரத்தை வியாபாரிகள் வெட்டி
விற்பதால் கிராமங்களைச் சுற்றியுள்ள மரங்கள் குறைந்து இல்லாது
போய்விட்டது இரண்டாவது காரணம்.
பிறகு
1940 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஊர்களைச் சுற்றியிருக்கும்
மரங்கள் அனைத்தும் அழிந்த பிறகு காடுகாடாக
மரங்கள் வளர்ந்துள்ளவற்றை காட்டுக்குச் சொந்தக்காரர் விற்க மர வியாபாரிகள்
வாங்கி, மரங்களை வெட்டி லாரிகள்
மூலம் லோடு லோடாக கிராமங்களுக்கும்
வளர்ந்த நகரங்களுக்கும் சாயப்பட்டரைகளுக்கும் சலவைப்பட்டரைகளுக்கும் வீடுகளுக்கும் விற்ற காரணங்களால் காடுகளில்
உள்ள மரங்கள் முற்றிலும் அழிந்தது
மூன்றாவது காரணம்.
1980 ஆம்
ஆண்டிலிருந்து சமையலுக்கு விறகுகளுக்கு பதிலாக சமையல் கேஸ்
உபயோகித்து வருவதால் விறகையே மறந்து விட்டோம்.
விறகு அடுப்பும் இல்லை. இப்படி மழை
வருவதற்கான மரங்களை வெட்டி காடுகளை
அழித்ததால் சமையல் செய்ய அடுப்புக்கு
விறகு வேண்டுமென்றால் ஒரு முழ விறகு
கிடையாது. எதிர்கால மங்கையர்களுக்கு விறகு என்றால் என்ன,
அது எதற்கு உபயோகப்படும் என்றே
தெரியாது போய்விடும்.
மழைக்கு
மரங்கள் அவசியம் என்பதை உணர்ந்து
மரம் நடும் விழா வைத்து,
செடிகளை நடுவது சுமார் 10 ஆண்டுகாலமாக
செயல்படுத்தப்படுகிறது. ஆனால் 10 வயது ஆன மரங்களைக்
காணோம். ஆகவே காடு காடாகவும்
மரம் நடும் விழா ஏற்படுத்தி
கண்ணும் கருத்துமாய் நீர் பாய்ச்சி லட்சக்கணக்கான
மரங்களை வளர்க்க ஏற்பாடு செய்து
மரம் வளர்த்து மழை பெற வழி
வகுக்கவேண்டும்.
இப்படி
மரங்களினால் மலை வளத்தையும் மரக்காடு
வளத்தையும் பெருக்க வேண்டுமென்று மரஞ்
செடிகொடி அடர்ந்து வளர்ந்திருந்த அந்தக் காலத்திலேயே மகாகவி
பாரதியார் எடுத்துக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு
மேலும், முன்பெல்லாம் வீடுகள் என்றால் தாவர
வகைகளைக் கொண்ட குடிசைகள் இருந்தன.
இக்காலத்திற்குப் பிறகு ஓட்டு வீடுகளுக்கு
ஓடு வேய, விட்டங்கள், சட்டங்கள்
தேவைக்கும் பலகைகள் தேவைக்கும் மரங்களை
வெட்டி வனங்கள் அழிந்தன.
பாரதியார்
காலத்தில் மரங்களும் மரங்கள் உள்ள வனங்களும்
நிறைந்த நம் பாரத நாடு
என்ற பாடல் மூலம் உணர்த்தியுள்ளார்.
8. தோட்டத்திலே
மரக்கூட்டத்திலே – கனி
ஈட்டத்திலே பயிர் ஊட்டத்திலே
தேட்டத்திலே அடங்காத நிதியின்
சிறப்பினிலே உயர் நாடு’.
அரசி, சோளம், கேழ்வரகு,
ராகி, கம்பு, பருப்பு, எள்ளு,
கொள்ளு முதலிய தானியங்கள் விளையும
தோட்டங்களின் எண்ணிக்கையிலே, 7-வது அடியில் குறிப்பிட்டபடி
மரக்கூட்டத்திலே, கனிகளும் காய்களும் விளையும் உற்பத்திமூலம் பெறுதலிலும் மற்றும் நாம் பயிர்
செய்யும் பல தானியங்கள் சத்து
நிறைந்த ஊட்டத்திலே, இதுபோல் உணவு தானியங்கள்,
காய் கனிகள் தேவைக்கு நாம்
மனதில் எண்ணும் அளவுகளைக் காட்டிலும்
அதிகமாக விளைந்து விளைவினைக் கொடுக்கும். செல்வத்திலே, அதாவது செல்வம் என்றால்
சாப்பிட முடியாத பணம், காசு
செல்வமல்ல, உண்ணக் கூடியவைதான் செல்வம்.
இந்தச் செல்வச் செழிப்பினிலே உயர்ந்தது
நம் நாடு - இந்தப் பாருக்குள்ளே
நல்ல நாடு எங்கள் பாரத
நாடு என பாரதியார் நூறு
ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளதை
நாம் இன்றும், நாளையும், எல்லாக் காலங்களிலும் சிந்திப்பதைச்
சிந்தித்து, போற்ற வேண்டியதைப் போற்றி,
காப்பதைக் காப்பாற்றி, வளர்ப்பதை வளர்த்து, எல்லா நலன்களும் பெற்று
வாழ்வோமாக.
பாகம்
- 3
மாணவர்களே* இதுவரை சுதந்திரம் தமிழ்மொழி
பற்றியும் மகாகவி பாரதியார் பற்றியும்
அவரது பாடல், தமிழ்நாடு, பாரதநாடு
பற்றியும் கூறினேன். இனி தேசப்பிதா மகாத்மா
காந்தி பற்றியும்
கஷ்டப்பட்டு பெற்ற சுதந்திரம் பற்றியும்
கூறுகிறேன்.
காந்தி
1869-ஆம்
ஆண்டு அக்டோபர் திங்கள் 2ஆம் தேதியன்று காந்திஜி
பிறந்தார். அவரது பெயர் மோகன்தாஸ்
கரம்சந்த் காந்தி, சொந்த ஊர்
குஜராத்தில் உள்ள போர்பந்தரில் 11வயது
வரை தொடக்கப் பள்ளியில் படித்தார். 12ஆவது வயதில் உயர்தரப்
பள்ளியில் சேர்ந்து படித்தார்.
கூச்ச சுபாவத்தால் மற்ற
மாணவர்களுடன் சேர்வதில்லை. பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்கு ஓட்டமாகவே ஓடிவந்து விடுவார். மாணவர்கள் கேலி, கிண்டல் செய்வார்கள்
என்ற கூச்சம்.
1882 ஆம் ஆண்டு 13 வயதில்
காந்திஜி க்கும் 10 வயதான கஸ்தூரி பாய்க்கும்
திருமணம் நடைபெற்றது.
காந்திக்கு இளம் வயதில் பேய்,
பிசாசு பயம் உண்டு. ராம
நாமத்தை திரும்பத் திரும்ப சொன்னால் பேய்,
பிசாசு வராது என்று வேலைக்காரி
ரம்பா சொன்னது அவருக்கு மனதில்
தெளிவு ஏற்பட்டு பயம் நீங்கிற்று. அடிக்கடி
ராம நாமத்தைச் சொல்லிக் கொள்வார்.
காந்திஜி அவர்களின் பெரியப்பாவின் மகனான ராம பக்தரும்,
காந்திஜியும் ‘ராம ரட்சை’ என்னும்
பக்தி நூலை மனப்பாடம் செய்து
கொண்டார்கள், தினமும் காலையில் குளித்த
பிறகு ராமரட்சை பாராயணம் செய்வது வழக்கம்.
நோயுற்ற காந்திஜி யின்
தந்தை எதிரில் இராமாயணம் வழக்கமாக
பலநாள் படிக்கப்பட்ட காரணத்தால், ராம பக்தி காந்திஜியின்
உள்ளத்தில் ஆழப்படிந்தது. படிப்பில் மந்தம்தான். கண்டித்தாலோ, திட்டினாலோ அழுவார்.
இவர் வைணவக் குடும்பம். ஆகவே
விஷ்ணு (பெருமாள்) கோயிலுக்குப் போவார். சத்திய நெறியில்
ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்த மனித
வாழ்க்கையென்பதை 17 வயதான வாலிப பருவத்தில்
காந்திஜி புரிந்து
கொண்டார்.
1887-ல்
மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேர்வு பெற்றார்.
பவ நகரில் உள்ள கல்லூரியில்
(செலவு குறைவு என்று) சேர்ந்து
படித்தார். கல்லூரிப் படிப்புக்கு பக்குவமடையாத காரணத்தால் படிக்க முடியாமல் ஆறு
மாதத்தில் கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டார்.
காந்திஜியின்
தகப்பனாரின் நண்பரான ஒருவர் இங்கே
மூன்று வருடம் கல்லூரியில் படித்து
பட்டம் பெறுவதைவிட லண்டனுக்குச் சென்று, 3 ஆண்டுகள் படித்து பாரிஸ்டர் பட்டம்
பெறுவது எளிது. செலவும் அதிகமாகி
விடாது என்று சொன்ன யோசனை
நம்பகமாயிற்று.
1888-ல்
காந்திஜி லண்டனுக்குச் சென்று படிப்பதில் நம்பிக்கை
வந்தது. ஆனால் தாயார், ‘காந்தி
நீ லண்டனுக்கு தூரதேசத்துக்குச் சென்றால் அந்த நாட்டுப் பழக்கத்தில்
மது, மாது, சூது, மாமிசம்
ஆகிய கெட்ட பழக்கம் உன்னைக்
கெடுத்துவிடும். நீ லண்டனுக்குப் போவது
சரியல்ல’ என்று தடைசெய்தவரிடம், ‘நான்’
எந்தகெட்ட பழக்கத்திலும் ஈடுபடமாட்டேன் என்று சத்தியம் செய்து
தாயாரிடம் அனுமதி பெற்றார்.
ராஜ்கோட்
உயர்நிலைப் பள்ளியில் படித்த சகமாணவர்கள், இங்கிலாந்துக்குப்
போகும் காந்திஜிக்கு பிரிவு உபசாரம் நடத்திய
பொழுது, எழுதி வைத்திருந்த நன்றி
தெரிவிக்கும் வாசகத்தைப் படிக்க முயலும் பொழுது
தலை சுற்றி உடம்பெல்லாம் நடுங்கியும்
நன்றி தெரிவித்தார். இப்படிப்பட்ட காந்திதான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
(அதற்காக நீங்களும் பயந்து நடுங்க வேண்டும்
என்று நான் சொல்லமாட்டேன்).
தனது சாதிக்காரர்கள் காந்திஜி அயல்நாடு போகக்கூடாதென்று சொன்ன தடையை மீறி,
லண்டனுக்குப் புறப்பட்டார். சாதிக் கட்டுப்பாட்டை மீறினார்.
1888-ல்
காந்திஜி பம்பாயிலிருந்து
கப்பல் மூலம் லண்டனுக்குப் புறப்பட்டார்.
லண்டனுக்குச் சென்று மூன்று ஆண்டுகள்
படித்து 1891-ல் பாரிஸ்டர் பட்டம்
பெற்றார்.
பிறகு இந்தியாவுக்கு கப்பல் மூலம் புறப்பட்டு
பம்பாய் வந்து சேர்ந்தார்.
சொந்த ஊர் போர்பந்தருக்குச் சென்று
குடும்பத்தில் அனைவரையும் கண்டுகொண்டு, பிறகு வக்கீல் தொழில்
செய்ய பம்பாய்க்கு வந்தார். தொழிலை தன்னால் நடத்த
முடியாது என்ற பயம் அவரைத்
தொற்றிக் கொண்டது.
ஒரு சிறிய வழக்கை எடுத்துக்கொண்டு
ரூபாய் 30 பீஸ் பேசி, கோர்ட்டுக்குச்
சென்றார்.
கோர்ட்டுக்குச்
சென்று, சாட்சிகளை விசாரிக்கும் நேரத்தில் பேசவே முடியவில்லை. சாட்சியிடம
கேள்வி கேட்க இயலவில்லை. தைரியம்
இல்லாததால் தலை சுற்றல் ஏற்பட்டு
நிற்கவும் முடியாமல் உட்கார்ந்து விட்டார்.
பிறகு பக்கத்திலிருந்த ஒரு வக்கீலிடம் கேஸ்
கட்டைக் கொடுத்து விட்டார். அவர் விளையாட்டாக சர்வ
சாதாரணமாக கேஸ் நடத்தினார்.
தைரியம்
வரும்வரை எந்த வழக்கையும் எடுப்பதில்லை
என்று காந்திஜி எண்ணிக்கொண்டார்.
பம்பாயிலிருந்த
ராஜ்கோட்டுக்கு வந்து, மனுக்களும் விண்ணப்பங்களும
தயாரித்துக் கொடுப்பதில் காந்திஜிக்கு சிறிய வருமானம் கிடைத்தது.
1893-ல் (காந்திஜிக்கு வயது 24) போர்பந்தரைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவர்,
தென்னாப்பிரிக்காவில் பெரிய வியாபாரம் செய்து
கொண்டிருப்பவர். காந்திஜி லண்டன் சென்று படித்து,
பாரிஸ்டர் பட்டம் பெற்று வந்திருப்பதை
அறிந்து, காந்திஜியின் சகோதரரின் அனுமதி பெற்று காந்திஜி
அவர்களை தென் ஆப்பிரிக்காவுக்கு அழைத்துக்
கொண்டார். காந்திஜியும், அம்முஸ்லீமின் வியாபாரம் சம்பந்தமாக ஒரு வழக்கு நடப்பதாகவும்
அந்த வழக்கு பற்றி வக்கீல்களுக்கு
யோசனை சொல்ல, செலவு போக
மாதம் 105 பவுன் சம்பளம் பேசி
தென்னாப்பிரிக்காவிலுள்ள நேட்டால் நகருக்கு வந்து சேர்ந்தார்.
பிறகு,
நேட்டாலில் முஸ்லீம் வியாபாரியின் வியாபார கம்பெனி கட்டடத்தில்
உள்ள அறையில் காந்திஜி தங்கினார்.
மூன்று
நாட்களுக்குப் பிறகு காந்திஜி அவர்களுடன்
டர்பன் நீதி மன்றத்துக்குச் சென்றார்.
அங்கு காந்திஜியின் தலைப்பாகையை எடுக்கும்படி நீதிபதி சொன்னார். காந்திஜி
மறுத்துவிட்டார்.
ஒருசமயம்
ரயில் பிரயாணத்தில் முதல் வகுப்பு டிக்கட்
வாங்கி ரயிலில் முதல் வகுப்பில்
உட்கார்ந்து இருந்த காந்திஜி அவர்களை
ஒரு வெள்ளையன், ஒரு போலீஸ்காரனைக் கூப்பிட்டு
காந்திஜியை வெளியேற்றும்படி சொல்ல, காந்திஜி பல
தடவை மறுத்தும் வெளியே தள்ளப்பட்டார். இங்கு
குடியேறியிருக்கும இந்தியர்களாகிய நமக்கு பல கஷ்டங்கள்
இருக்கின்றன. அக்கஷ்டங்களைத் தீர்ப்பதற்கு நாம் ஒரு சங்கத்தை
அமைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு பலன் அடையலாம் என்று
பல இந்திய சமூகத்தாரிடம் சொல்ல
அனைவரும் ஒப்புக்கொள்ள காந்திஜி, வேகமாகச் செயல்பட்டார். வெள்ளையர்களுக்கு இந்தியன் காங்கிரஸ் என்றால் கசப்பு என்று
தெரிந்தும் 22-5-1894 -ல் ‘நேட்டால் இந்தியர்
காங்கிரஸ்’ என்னும் பெயரில் சங்கத்தை
நிறுவி, சங்கத்தின் மூலம் தென்னாப்பிரிக்க அரசாங்கத்திடம்
போராடி, இந்தியர்கள் ரயிலில் முதல் வகுப்பில்
பிரயாணம், மோசமான உணவுப் பொருள்கள்
வழங்குவதைத் தடை செய்தும், நல்ல
பொருட்களும் உணவுப் பதார்த்தங்களும் கிடைக்கப்
பெற்றார்கள், நகரத்தின் நடுவில் இடம், வீடு
வாங்க இருந்த தடைகளை நீக்கி,
தென்னாப்பிரிக்க நகரங்களில் எல்லா இடங்களிலும் காலி
இடங்கள், மனைகள், வீடுகள் வாங்கி
இந்தியர்கள் வசிக்கலாம் எனவும் நீதிமன்றம் மூலமாகவும்
அரசாங்கத்தின் மூலமும் அனுமதி பெற்றுத்தடைகளை
நீக்கினார் காந்திஜி.
இதனால்
தென்னாப்பிரிக்காவில் நம் இந்தியர்கள், இந்தியாவிலிருந்து
பல காய்கறி விதைகள் கொண்டுவந்து
விவசாயம் செய்து நல்ல பயன்
பெற்று வாழ்ந்தார்கள். வியாபாரத்திலும் வெள்ளையர்கள் எண்ணியதைவிட சிறப்பாக முன்னேற்றம் அடைந்தார்கள் இந்தியர்கள்.
இந்திய
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நேட்டால் அரசாங்கம் 25 பவுன் வரி விதித்தது.
இதை இந்தியாவிலுள்ள ஆங்கில அரசாங்க வைசிராய்
25 பவுன் வரிக்கு பதிலாக 3 பவுன்
வரி விதிக்கும்படி தென்னாப்பிரிக்க நேட்டால் அரசாங்கத்துக்குத் தெரிவித்தார். அதன்படி ஆண்டு ஒன்றுக்கு
3 பவுன் வரி விதிக்கப்பட்டது.
இந்த 3
பவுன் வரி யையும் தொழிலாளத்
தோழர்களை ஒன்ற கூட்டி சங்கத்தின்
மூலம் பெரிய போராட்டத்தை காந்திஜி
நடத்தினார். அப்போது துப்பாக்கிச் சூட்டில்
சிலர் உயிர்களை இழந்தனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிறை தண்டனை பெற்று
தொடர்ச்சியாகப் போராடியதால் நேட்டால் அரசாங்கம் 3 பவுன் வரியையும் காலங்கடந்து
ரத்து செய்தது. சத்தியம் வென்றது ; காந்திஜி மகிழ்ந்தார்.
மீண்டும்
1896-ல் இந்தியாவுக்கு காந்திஜி வந்தார்.
பம்பாயில்
பொதுக்கூட்டம். ஆகவே காந்திஜி பம்பாய்
சென்றார். அங்கு மறுநாள் நடக்கும்
பொதுக்கூட்டத்தில் பேசுவதைவிட எழுதித்தான் படிக்க வேண்டும் என்று
ஒரு தலைவர் சொன்னார்.
காந்திஜி
அவர்கள் பேச வேண்டிய விஷயங்கள்
பற்றி சிந்திக்க நேரமும் இல்லை. இரவும்
பகலும் விழிந்திருந்ததால் அவருக்குக் களைப்பும் அதிகமாக இருந்தது. தொண்டையும்
கம்மிப்போய் விட்டது. கடவுளிடம் நம்பிக்கை வைத்து பம்பாய் வந்து
சேர்ந்தார். பிரசங்கத்தை எழுதிப்படிக்க வேண்டுமென்று காந்திஜி எண்ணவில்லை.
எழுதிக்கொண்டு
வந்ததும் ஒரு நன்மையே என்று
காந்திஜி நினைத்தார்.
கூட்டத்தில் மக்கள் அதிகமாகக் கூடியிருந்தார்கள்.
இதுவரை இவ்வளவு பெரிய கூட்டத்தை
காந்திஜி கண்டதில்லை. (பேசுவதற்கு மைக், பாக்ஸ், மின்
ஒலிபெருக்கியெல்லாம் இல்லாத காலம்).
காந்திஜி
எழுதியதைப் படிக்க ஆரம்பித்தார். உடம்பு
நடுங்கியது உரக்கப் படிக்கும்படி அருகிலிருந்தவர்
சொன்னார். ஆனால் அவர் தொனி
குறைந்து கொண்டே போனது.
நண்பர்
ஒருவர், அவர் எழுதிய பேப்பரைக்
கேட்டு வாங்கிப் படித்தார். தன்னைக் காப்பாற்ற வந்தவர்
குரல் தொனிதான் கூட்டத்திற்கு ஏற்றதொனி. ஆனால் கூடியிருந்த மக்கள்
இவர் படிப்பதை மறுத்து ‘வாச்சா’ வாச்சா என
முழங்கினார்கள்.
ஆகவே வாச்சா என்பவர் காந்திஜி
யின் பிரசங்கத்தைப் படித்தார். கூட்டம் அமைதியாகக் கேட்டது.
அவசியமான இடங்களில் கரகோஷம் செய்தார்கள். 26-10-1896ல் தமிழ்நாட்டுக்கு
வந்த போது சென்னை நகருக்கு
மகாத்மா காந்திஜி வந்தார். 1895ல் இந்திய தேசிய
காங்கிரஸ் அமைக்கப்பட்டது. பாரத நாட்டு மக்கள்
அடிமைத்தளையிலிருந்து விடுபட வேண்டும் என்று
நீண்டதொரு பிரசங்கம் செய்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனித்துக்கேட்டு
மகிழ்ந்தார்கள்.
காந்திஜிக்கு
சென்னையில் எல்லோரையும்விட அதிகமாக உதவி செய்தவர்
‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ பத்திரிக்கையின் ஆசிரியர் ஜி.பரமேஸ்வரன் பிள்ளை
ஆவார். காந்திஜி எழுதுவதை யெல்லாம் தன் பத்திரிக்கையில் பிரசுரித்தார்.
‘ஹிந்து’
பத்திரிக்கையின் ஜி.சுப்பிரமணியமும், டாக்டர்
சுப்பிரமணியமும் அனுதாபம் காட்டினார்கள்.
‘சென்னையில்
நான் அந்நியர் நடுவில் இருப்பதாக எனக்குத்
தோன்றவில்லை. நண்பர்கள் அனைவரும் அன்பைப் பொழிந்தார்கள். நான்
கொண்டிருந்த லட்சியத்திலும் அவர்கள் அதிக நம்பிக்கையும்
உற்சாகமும் காட்டினார்கள்’ என்று சென்னை வந்த
காந்திஜி கூறினார்.
1896-ல்
மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார் காந்திஜி. காந்திஜியுடன் மனைவி கஸ்தூரிபாயும் குமாரர்கள்
இருவரும் சென்றனர்.
நேட்டால்
இந்தியர் சங்கம் மூலம இந்திய
மக்களுக்குத் தேவையானவற்றை தென்னாப்பிரிக்க அரசாங்கத்துடன் போராடி, தேவைகளைப் பெற்றுத்
தந்தார். 1901ல் காந்திஜி ‘இனி’
எனக்கு தென்னாப்பிரிக்காவில் வேலையில்லை. இந்தியாவில் மக்களைச் சந்தித்து இந்தியாவுக்கு விடுதலை காண வேண்டும
என்னும் கொள்கையைப் பரப்ப இந்தியாவுக்குப் போக
வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தார்.
இதையறிந்த
நேட்டால் இந்தியர் சங்கம் பிரிவு உபசாரக்
கூட்டம் நடத்தினர். அதுசமயம் மக்களால் பல நிகழ்ச்சிகளில் அளிக்கப்பட்ட
வெகுமதிகளில் 52 பவுன், விலை உயர்ந்த
வைரம் பதித்த நகைகளும் அடங்கும்.
அவற்றை மனைவி கஸ்தூரிபாய் திருப்பிக்
கொடுப்பதாக இல்லை. ‘எனது வருங்கால
மருமகள்களுக்கு வேண்டும். நீங்கள் வாங்கித்தர முடியாது
என்பது எனக்குத் தெரியாதா?’ என்று பலமுறை மறுத்தும்
சமாதானம் சொல்லி, கஸ்தூரிபாயிடமிருந்து நகைகளை வாங்கிய
காந்திஜி சங்கத்துக்கு கொடுத்து சங்கம் மூலம் வசூலான
நன்கொடைகளையும் சங்கத்துக்கு கொடுத்த பின்பே புறப்பட்டு
இந்தியாவுக்கு குடும்பத்துடன் காந்திஜி வந்து சேர்ந்தார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, நகைகளைத் திருப்பிக்
கொடுத்ததுதான் புத்திசாலித்தனமென கஸ்தூரிபாய் உணர்ந்தார். 1901ல் கொல்கத்தாவில் காங்கிரஸ்
மாநாடு பிரம்மாண்டமான பந்தலும், தொண்டர்கள் கம்பீரமாக அணிவகுத்து நிற்பதும் மேடை மீது தலைவர்கள்
வீற்றிருப்பதும் தன்னை பிரமிக்க வைத்தன
என்று காந்திஜி சொல்லுகிறார். பல தலைவர்கள் கம்பீரமாகப்
பேசினார்கள். பிறகு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
கூட்டமும் குறைய ஆரம்பித்தது. இரவு
11 மணி. காந்திஜிக்குப் பேச துணிவு இல்லை.
இருந்தாலும தலைவரைப் பார்த்தார். பக்கத்தில் சென்று தனக்கு ஏதாவது
செய்யுமாறு அவர் காதில் சொன்னார்.
சிறிது
நேரத்தில் அவரை தென்னாப்பிரிக்கா பற்றிய
தீர்மானத்தைப் படிக்கச் சொன்னார் தலைவர்.
காந்திஜி
நடுங்கிக்கொண்டே தீர்மானத்தைப் படித்தார். தலைவர் ஆமோதித்தார். ஏகமனதாக
நிறைவேறியது என்று எல்லோரும் கூவினார்கள்.
இது பற்றி காந்திஜி கூறுகிறார்
“ஐந்து
நிமிடம் பேசுங்கள் என்றார் தலைவர். ஆனால்
தென்னாப்பிரிக்காவில் பெற்றிருந்த ஆற்றல் அச்சமயம் என்னை
விட்டுப் போய்விட்டதை உணர்ந்தேன், பேசினேன், தலை சுற்றியது. யாரோ
ஒருவர், வெளிநாடுகளில் குடியேறுவதைப் புகழ்ந்து எழுதிய கவிதையைப் பாடி,
பிறகு இரண்டு நிமிடம் பேசி,
எனது பேச்சை முடித்துக்கொண்டு உட்கார்ந்து
விட்டேன். இந்தப் பெரிய மாநாடு
எனக்கு முதல் மாநாடு1902-ல்
காசிக்கு ரயிலில் மூன்றாம் வகுப்புப்
பெட்டியில் சென்று காலை நேரம்
காசியை அடைந்தேன். அநேக பிராமணர்கள் என்னைச்
சுற்றி வளைத்துக் கொண்டனர். அதில் சுத்தமாக இருக்கக்கூடிய
ஒரு பண்டாவைத் தேர்ந்து, அவர் வீட்டுக்குச் சென்று,
எல்லா அனுஷ்டானங்களுக்கும் சேர்த்து ஒன்றேகால் ரூபாய் மட்டுமே கொடுப்பேன்
என்று சொல்லி உறுதி செய்து
கொண்டேன். பிறகு வைதீக முறைப்படி
எல்லா அனுஷ்டானங்களும் செய்து, ஸ்நானம் செய்து
12 மணிக்கு பூஜை முடிந்தது.
பிறகு விஸ்வநாத சுவாமி தரிசனத்துக்காக கோயிலுக்குச்
சென்றேன். கோயிலில் கண்டதைப் பார்த்து என் மனம் வேதனை
அடைந்தது.
பம்பாயில்
1891ல் ஒரு பிரசங்கத்தில் காசியில்
நடக்கும் மோசடி பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன்.
ஆனால், இன்று அருவருக்கத் தக்க
கூச்சல் குழப்பங்களையும் தெய்வ சிந்தனையற்ற ஜனங்களையும்
அசுத்தம் பரவியும், அமைதி என்பதேயில்லாமல் அலையும்
ஜனங்களையும் கண்டு மன வேதனை
அடைந்தேன்.
ஞானவாவி
(ஞானக்கிணறு)க்குப் பக்கத்தில் போய்
கடவுளைத் தேடினேன். அசுத்தங்கள் நிறைந்திருந்தன. தட்சிணை கொடுக்க விருப்பமேயில்லை.
இருந்தாலும் ஒரு பண்டாவுக்குஒரு பைசா
கொடுத்தேன். அவர் அந்தப் பைசாவை
வீசி எறிந்தவிட்டு ‘நீ நரகத்திற்குப் போவாய்
என்று திட்டினார். அந்த பைசாவை நான்
எடுத்துக்கொண்டு நடந்தேன். இதைப் பார்த்த பண்டா
எதெதையோ பேசி விட்டு அந்த
பைசாவைப் பெற்றுக் கொண்டார். கடவுளின் எல்லையற்ற கருணையில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் இம்மாதிரி புண்ணிய சேத்திரங்களுக்குப் போய்ப்
பாருங்கள். கடவுளின் தெய்வீகப் பெயரைக் கொண்டே செய்யப்படும்
வஞ்சகங்களையும் அதர்மங்களையும் கடவுள் சகித்துக்கொண்டு இருக்கிறார்
என்பதை அறியலாம். மனிதன் எதை விதைக்கிறானோ
அதையே அறுவடை செய்கிறான் என்னும்
விதி அமைந்திருப்பதால் தான் கடவுள் விலகி
நிற்கிறார் என்பதை உணர்வோம்.”
காந்திஜி
மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்று பல போராட்டங்கள்
நடத்தினார். 1904-ல் மன்சுக்லால் நாசர்
என்பவர் ‘இந்தியன் ஓபீனியன்’ என்ற பத்திரிக்கையை ஆரம்பித்து
நடத்தி வந்தார். அதில் போராட்டங்களைப் பற்றி
காந்திஜி எழுதியதால் மக்களிடையே அப்பத்திரிக்கை முக்கியத்துவம் பெற்று விளங்கியது.
சில மாதங்கள் கடந்து காந்திஜி தாய்
நாடான இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார். பிற நாட்டில் சுமார்
10 ஆண்டுகள் வாழ்ந்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தார். பிறகு பம்பாய் வந்து
சேர்ந்தார்.
பிறகு வக்கீல் தொழிலை மேற்கொண்டார்.
ஹரித்துவாரில்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவின்போது
ஒரு நண்பரைச் சந்திக்க ஹரித்துவாருக்குச் சென்றார்.
அவர் கூறுகிறார்,
“புண்ணியத்தை
நாடி யாத்திரை ஸ்தலங்களுக்குப் போக வேண்டும் என்று
நான் எண்ணியதேயில்லை. யாத்ரீகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளிவேஷமும்
துப்புக் கெட்ட தனமுமே அதிகமாக
இருந்தது. சாதுக்கள் உலக வாழ்க்கையின் இன்பங்களை
அனுபவிப்பதற்கே பிறந்தவர்களென எனக்குத் தோன்றியது.
ஒரு கன்றின் காலை வெட்டி
ஒரு பசுவின் உடலில் ஒட்ட
வைத்து ஐந்து கால் பசு
எனக் காட்டி பக்தர்களை ஏமாற்றி
பணத்தைக் கொள்ளையடிப்பது கண்டு நான் பதறிப்
போனேன்
ஆனால் கும்பமேளா உற்சவத்திற்கு வந்திருந்த 17 லட்சம் மக்கள் அனைவரும்
வெளிவேசக் காரர்களோ, வேடிக்கை பார்க்க வந்தவர்களோ அல்ல.
அவர்களில் அநேகம் பேர் புண்ணியத்தைத்
தேடவும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவுமே வந்துள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பாகம்
- 4
ஐரோப்பாவில்
நாசகரமான யுத்தம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது கேடாப் போராட்டம ஆரம்பமாயிற்று.
வைசிராய், டில்லியில் ஒரு யுத்த மாநாட்டைக்
கூட்டி, படைகளுக்கு ஆட்களைத் திரட்ட வேண்டுமென்று கேட்டுக்
கொண்டார்.
ஐரோப்பிய
சண்டைக்கு நாம் போவதா என்று
எண்ணிய மக்கள் நமது பிரசங்கங்களைக்
கேட்டு மனம் திருந்தி படையில்
சேர்ந்தார்கள்.
சில நாட்களில் ஜெர்மனி தோல்விடைந்தது. போர்
நின்றது. நமது இநதியப் போர்
வீரர்கள் தாய்நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஆங்கில
ஆட்சி நூற்றுக்கணக்கான மக்களை சிறையில் அடைத்து
வைத்திருந்தது. ஆனால், அமிர்தசரசில் காங்கிரஸ்
மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னாலே சிறையிலிருந்தவர்கள் அனைவரும் விடுதலை ஆனார்கள்.
பண்டித
மோதிலால் நேரு ஏராளமான வருமானத்தைப்
பெற்றுத் தந்த வக்கீல் தொழிலை
உதறி விட்டு, பாஞ்சாலத்தல் மகத்தான
சேவை செய்திருந்தார்.
இதற்கு
முந்திய காங்கிரஸ் மாநாடுகளில் சாதாரண தொண்டனகாயிருந்தேன். இந்த
அமிர்தசரஸ் காங்கிரஸில் நான் கலந்து கொண்டதுதான்
எனது உண்மையான பிரவேசம்.”
அந்நிய
துணி பகிஷ்காரம்
கதர் நூல் நூற்று,
நெய்து துணியை உபயோகிக்கத் தொடங்கியதும்,
கதரையே கட்டாயமாக மக்கள் உடுத்த, உபயோகிக்க
வேண்டும் என்றும் அந்நிய நாட்டுத்துணியை
நெருப்பிலிட வேண்டுமென்றும் திருச்சி (1920ல்) கூட்டத்தில் சொன்னார்.
இதை மக்கள் கடைப்பிடிக்க ஆரம்பித்ததும்
இங்கிலாந்து நாட்டுத் துணி இறக்குமதி குறைந்ததால்
ஆங்கில அரசாங்கம் திடுக்கிட்டது.
அகமதாபாத்
காங்கிரஸ் கூட்டத்தில் சட்ட மறுப்பு இயக்கம்
தோன்றியது. 200 க்கும் அதிகமானோர் கைது
செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். காந்திஜி 21-9-1920-ல் தென்னிந்திய சுற்றுப்
பயணத்தின்போது சென்னையில் ஶ்ரீமான் இராஜாஜி இல்லத்தில் தங்கினார்.
அது சமயம் பாரதியார் காந்திஜியை
சந்திக்க வந்தார். சுயராஜியம் பற்றிய சந்தேகங்களைப் பற்றி
கேள்வி ரூபமாக உரையாடல் நடந்ததை,
பாரதியார் கேள்விக் கவிதையாகவும் கேள்வியில் நல்ல பதிலைக் கண்டதற்கு,
ஒரு கவிதையும் இயற்றியுள்ளார்.
ஓரங்க நாடகம்
இதனைப் பள்ளியில் மாணவர்கள்முன்
ஓரங்க நாடகமாக, அணுகுண்டு தாத்தா நடித்துக் காட்டுகிறார்.
இதோ நாடகம் .....
மகாத்மா காந்தி சாந்தமே
உருவாக நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.
மகாகவி பாரதியார் முகத்தில்
கண் புலிப்பார்வையாகவும், மீசை ஆட்டுக்கிடா கொம்புபோல்
திருகின கம்பீரமான மீசையும், அஞ்சா நெஞ்சம் கொண்டோரின்
தோற்றமும் (பொய் பேசாத காரணத்தால்
பயம் இல்லாத சுபாவம் வாய்ந்தவர்.)
கொண்டு பார்ப்பவர்களுக்கு சிங்கம்போல் தோற்றத்துடன் வந்து, ‘மிஸ்டர் காந்தி*
காலை வணக்கம்*’ கூறி, அருகிலுள்ள நாற்காலியில்
கம்பீரமாக உட்கார்ந்தார்.
மகாத்மா காந்தி, இந்த
ஆண் முகத்தையும் மீசையையும் பார்த்தால் மோத வந்த முரடனாகயிருக்கலாம
என மனதில் நினைக்க ராஜாஜி
(ஊ.இராஜ கோபாலாச்சாரியார்) வந்து
இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
மகாத்மாகாந்தி பாரதியாருக்கு வணக்கம் சொன்னார். காந்திக்கு
அப்போது வயது 51. (1920) பாரதியார் வயது38. உரையாடலில் பாரதியார்
கேட்ட கேள்விகளை பாரதியார் கவிதையாக்கியுள்ளார்.
கவிதையும்
உரையாடலும்
பாரதியாரின் குரலும் தொனியும் உச்சத்தில்
தான் இருக்கும். எதற்கு அஞ்சாத சுபாவம்.
பாரதி் -
மிஸ்டர் காந்தி (தோரணையாக).
என்று தணியுமிந்த சுதந்திர
தாகம்?
என்னய்யா காந்தி* நம் பாரத
நாட்டு மக்களின் சுதந்திர தாகம் என்றைக்குத்
தீரும்?
நீங்களும் சுமார் 20 ஆண்டுகாலமாக சுதந்திரம் வேண்டும் என
கேட்கிறீர்
யாரய்யா கொடுப்பார்கள்?
என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்?
அடிமையாகவே
180 ஆண்டுகாலம் வாழ்ந்து பழகிப்போன வேண்டாத ஆசை மக்களைவிட்டு
என்றைக்கு நீங்கும் சொல்லையா?
காந்தி்
- என்ன இந்த ஆள் பேசுவதைப்
பார்த்தால் சுதந்திரம் பற்றி தெரிந்து கொள்ளவா?
இல்லை என்னை மடக்கவா? புரியலையே
என்று பயந்த சுபாவமாகப் பார்க்கிறார்.
பாரதி்
- என்னைய்யா
பார்க்கிறீர் மிஸ்டர் காந்தி. இன்னும் கேள்.
என்றெம தன்னை கை
விலங்குகள் போகும்
என்றெம தின்னல்கள் தீர்ந்து
மெய் மேவும்
மிஸ்டர்
காந்தி, ஆங்கிலேயர்கள் எங்கள் பாரத மாதாவின்
கைகளில் விலங்கு போட்டு 180 ஆண்டுகள்
ஆகின்றனவே. அந்த விலங்கை என்றைக்குக்
கழட்டுவது? எமது பாரதநாட்டு மக்களின்
ஆறாத் துன்பங்கள் தீர்ந்து என்றைக்கு சுகத்தைக் காண்பது? சொல்லய்யா?
காந்தி்
என்ன இந்த மீசைக்கார மனுஷன்
என்னை அதட்டுகிறார் என்று பயந்தபடி
பின்னால்
சாய்கிறார்.
பாரதி்
- என்
கேள்விக்கு பதிலென்ன? என்று கூர்ந்து (புலிப்பார்வை)
பார்த்து,
நன்றொரு பாரதம் நல்க
வந்தோனே
நல்லோரின் வாழ்வினை ஆதரிப்போனே
நல்லவர்களை ஆதரித்து, நல்லது செய்து, நல்லவர்களின்
ஆதரவால் நமது பாரத்தைப்
பெற வந்தவரே.
காந்தி
- நல்ல வார்த்தை பேசுகிறாரே (என்று மனதில் நினைக்கிறார்)
பாரதி்
- மிஸ்டர்
காந்தி,
வென்றி தரும் துணை
நின்னருளன்றோ
மெய்யறியாமலே வாடுகிறோம் இன்றும்
சுதந்திரத்தை வெற்றியுடன் பெறுவதற்கு காந்தி உனது சேவைதான்
தேவை.
தேவைதான்
என்றாலும் சுதந்திரம் கிடைக்கும் என்ற உண்மை தெரியலையே? உண்மை
தெரியாமைக்கு வருத்துகிறோம்.
காந்தி்..
இப்பவே உண்மை தெரியவேண்டுமென்று திடீர்
என்று இந்த மனுசன்
கேட்கிறாரே*
என்று நினைத்து எதார்த்தமாக மேலே பார்க்கிறார்.
பாரதி்
- உண்மையைச் சொல்லத் தெரியாமல் என்னய்யா
மேலே பார்க்கிறீர்.
இன்னமும்
கேள்.
பாஞ்சமும்
நோயும் நின் மெய்யடி யார்க்கோ
பாரத மேன்மை வேறினி யாருக்கு*
என்னைய்யா
காந்தி* உன்னை நம்பி வாழும்
இந்த பாரத நாட்டு மக்களுக்கு
பஞ்சமும் அதனால் ஏற்படக்கூடிய நோயும்தான்
சொந்தம் என்றால், இந்த பாரத நாட்டின்
வளமும் வற்றா செல்வங்களும் வேறு
யாருக்கய்யா?
தஞ்சமடைந்த
பின் கை விடலாமோ
தாயும்
தன் குழந்தையை தள்ளிடப் போமோ?
இந்த
20 வருஷமா நீ சொல்றதை நம்பி
நீயே கதி என்றுள்ள மக்களை,
என்னாலே முடியாதென்று கை விட்றாதே* ஏனய்யா*
தாய் பார்த்து தன் குழந்தையை போ
என்று தள்ளிவிட்டால் குழந்தை போகுமா? அது
மாதிரி இந்த
நாட்டு மக்களாகிய குழந்தைகளை நீ தள்ளிவிட்டாலும் நீதான்
தாயென்று உன்னை விட்டுப் பிரியமாட்டார்கள்.
தெரிந்ததா?
காந்தி்
… என்ன இந்த மனுஷன் இந்த
நாட்டு பாரத்தை முழுவதம் என்
தலையில்
வைத்து
அழுத்துகிறார் என்று எண்ணியவர் அசந்தர்ப்பமாக
காதைக் குடைகிறார்.
பாரதி்
- என்ன மிஸ்டர் காந்தி* காது
கேட்கிறதா, இல்லையா? பின்
ஏன் காதைக்
குடைகிறீர்*
காதைக் கொடும் இப்படி*
அஞ்ச லென்றருள் செய் கடமையில்லாயா?
ஆரிய நீயும் உன் அறம்
மறந்தாயா?
காந்தி
நீ மக்களைப் பார்த்து, ‘சகோதரர்களே, யாரும் பயப்பட வேண்டாம்.
சுதந்திரத்தை கட்டாயம் பெற்று விடுவோம்’ என்று
உறுதி வார்த்தை சொல்லும் பொறுப்பு உமக்கு இல்லையா? அறிவு
படைத்த க்ஷத்ரிய அறிஞனே* நீ போராடும்
தர்மத்தை மறந்துவிட்டாயா?
காந்தி
… இதென்ன இந்த மீசைக்கார மனிதனைப்
பார்க்கப் பார்க்க பயம்
உண்டாகிறது.
ஒரு சமயம் அடித்தாலும் அடித்துவிடுவார்
போலிருக்கிறதே.
போராடச்
சொல்லி மூக்கையும் சீண்டி விடுகிறார் என்று
நினைத்தவர் அசந்தர்ப்பமாக பின்னால் நகர்ந்த மாதிரி உட்கார்ந்தார்.
பாரதி்
- மிஸ்டர்
காந்தி என்ன பின்னால் போகிற
மாதிரி தெரிகிறது.
அப்படி போக
விடமாட்டோம்,
கேளும்.
வெஞ்செயல்
வெள்ளையரை விரட்ட வந்தோனே என்று
பாரதியார் சொன்னதும்,
காந்தி
… என்ன இந்த மனுஷன் சொல்லியும்
கொடுக்கிறார். உண்மையும்
சொல்லுகிறார்
என்று நினைக்க, ‘வீரசிகாமணி காந்தி மகானே’ என்று
பாரதியார் சொன்னதும் உடனே மகாத்மா காந்தி
எழுந்து பாரதியாரை ஆரத் தழுவிக் கொண்டார்.
பாரதி்
- மிஸ்டர்
காந்தி, நீர் சாப்பிடுவீரோ, மாட்டீரோ?
வெள்ளையரை ஆங்கிலேயரை
நம் நாட்டைவிட்டு விரட்டி, சுந்திரம் பெறுவது உம் வேலை.
உம் சேவைதான்.
ஆகவே உம்மை அஞ்சா நெஞ்சு
படைத்த ஆரிய வீரனென்றும் மகான்
என்றும் என் மனமார வாழ்த்துகிறேன்
என்று வாழ்த்துவதுடன் கேள்விப் பாடல் முடிகிறது.
அடுத்த நாள் பாரதி
யோசித்தார். காந்தியுடன் சுதந்திரம் பற்றிய சம்பாஷணையில் ‘சுதந்திரம்
கட்டாயம் பெறுவோம்’ என்று காந்தி சொன்ன
உறுதியை ஏற்று பாரதி நம்பிக்கையுடன்
இன்னொரு பாடல் எழுதுகிறார். அது
எல்லோருக்கும் தெரிந்த பாடல்தான். அதை
நான் பாடிக் காட்டுகிறேன் என்று
சொல்லி அணுகுண்டு தாத்தா பாடுகிறார்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து
விட்டோமென்று (ஆடு)
பார்ப்பானைஐய ரென்ற காலமும் போச்சே
– வெள்ளைப்
பரங்கியைத்
துரை யென்ற காலமும் போச்சே-பிச்ளை
ஏற்பாரைப்
பணிகின்ற காலமும் போச்சே – நம்மை
ஏய்ப்போருக்
கேவல் செய்யும் காலமும் போச்சே, (ஆடு)
எங்கும்
சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும்
சமமென்ப துறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
- இதைத்
தரணிக்கெல்லாம்
எடுத்து ஓதுவோமே. (ஆடு)
எல்லோரும்
ஒன்றென்னும் காலம்வந்ததே- பொய்யும்
ஏமாற்றும்
தொலைகின்ற காலம்வந்ததே - இனி
நல்லோர்
பொpயரென்னும் காலம்வந்ததே-கெட்ட
நயவஞ்சக்
காரருக்கு நாசம்வந்ததே. (ஆடு)
உழவுக்கும்
தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித்
திருப்போரை நிந்தனைசெய்வோம்
விழலுக்கு
நீர்ப்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்
வீணருக்கு
உழைத்துடவும் ஓயமாட்டோம். (ஆடு)
நாம் இருக்கும் நாடு நமதென்ப தறிந்தோம்
- இது
நமக்கே
உரிமையாம் என்பதறிந்தோம் - இந்தப்
பூமியி
லெவர்க்கு மினி அடிமை செய்வோம்
- பார்
பூரணனுக்
கே அடிமை செய்து வாழ்வோம்.
(ஆடு)
இப்படியாக
மகாத்மா காந்தியுடன் உரையாடிய பாரதியார் சுதந்திரம் பெற்று விட்டதாகப் பாடல்
பாடியுள்ளார் 1920 இல்.
மாணவர்களே! நமது
இந்தியா – நாம் சுதந்திரம பெற்ற
வருடம் எது? என்று அணுகுண்டு
தாத்தா கேட்க, மாணவர்கள் அனைவரும்
1947-ம் ஆண்டு எனக் கோஷமிடுகிறார்கள்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது
என்ன? ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்
என்று பாரதி பாடிய பின்
27 ஆண்டுக்குப் பிறகுதான் ஆங்கிலேயனிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றேhம். இது எந்த
அளவு தீர்க்கதரிசனம் என்பதை எண்ணிப்பாருங்கள்*
பாகம்
- 5
மாணவமணிகளே,
பண்டித மோதிலால், பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண
கோகலே, அபுல் கலாம் ஆசாத்,
முகம்மது அலி ஜின்னா, வல்லபாய்
படேல் இன்னும் பல பெரியோர்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் என்னும்
அமைப்பின் கீழ் நம்நாட்டின் விடுதலைக்காகப்
போராடினார்கள்.
1900-க்குப்
பிறகு காந்திஜி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ்
சந்திரபோஸ் முதலிய பல பெரியவர்கள்
காங்கிரசில் சேர்ந்தனர்.
நமது தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு கிளை ஏற்படுத்தினார்கள். அது
சமயம் தமிழ்நாடு காங்கிரசில் முக்கிய தலைவர்கள் மூவர்.
அவர்களில் ஈரோடு, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், சென்னை
இராஜ கோபாலச்சாரியார் (ராஜாஜி) தீரர் சத்தியமூர்த்தி
ஆகியோரும் காமராஜ் நாடார் இன்னும்
பலர் காங்கிரசில் சேர்ந்து சுதந்திரம் பெற போராடினார்கள்.
காங்கிரஸ்
தோன்றுவதற்கு முன் அதாவது ஆங்கிலேயர்
நமது பாரதத்தை ஆட்சி செய்ய வருவதற்கு
முன் (1700ஆண்டுகளுக்கு முன்) நம் நாடு
ஒரே இந்தியா என்றில்லாமல் பல
முடியரசு மன்னர்கள் சிலர் சிறிய நாடுகளாகவும்,
சிலர் பெரிய நாடுகளாகவும், போர்ப்படை
அதிகமுள்ள மன்னன், சில சிறிய
மன்னர்களை தன்னாட்சிக்கு உட்படுத்தி கப்பம் பெற்று சக்கரவர்த்தியாகவும்
ஆண்டுகொண்டு இருந்தார்கள். இப்படி அரசர்கள் நாட்டை
அளுங்காலத்தில், ஒரு நாட்டு மன்னன்
அடுத்த நாட்டு மன்னனை சண்டையில்
தோற்கடித்து அந்த நாட்டை தன்வசப்படுத்தி
நாட்டை ஆளுங்காலத்தில், ஒரு நாட்டு மன்னன்
அடுத்த நாட்டு மன்னனை சண்டையில்
தோற்கடித்து அந்த நாட்டை தன்வசப்படுத்தி
நாட்டை விரிவுபடுத்தி அரசாள்வதும் உண்டு. தானே தோற்றுப்போவதும்
உண்டு.
இப்படியாக
நாட்டுக்கு நாடு அடிக்கடி போர்
மூளும். அப்படி போர் மூளும்போது
வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக போர்ப்படையில்
சேர்ந்து போரிட வேண்டும். அது
அவரவர்கள் அவரவரது நாட்டைக் காப்பாற்றிக்
கொள்ளும் கடமை, நீதி, ஓரரசன்
திடீரென படையெடுத்து அடுத்த நாட்டு கிராமங்களில்
புகுந்து கிராம மக்களை அடித்து
துரத்தி கொள்ளையும் அடிப்பார்கள். பெண்களையும் கடத்துவார்கள்.
இது மட்டுமல்ல, கொள்ளைக் கூட்டத்தினர், தீவட்டிக் கொள்ளையென, கிராமங்களினூடே, கத்தி, அரிவாள், கம்புடன்
புகுந்து ஜனங்களை அடிப்பார்கள். அது
சமயம் தீவட்டிக் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வந்துவிட்டார்கள் என்று தெரிந்ததும் கிராம
மக்கள் கிராமத்தைவிட்டு வெளியேறி விடுவார்கள். கொள்ளையார்கள் கொள்ளையடித்துக்கொண்டு போனபிறகு கிராம மக்கள் கிராமத்துக்குள்
அவரவர் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.
வந்து பார்த்தால் வீட்டிலிருந்து சோளம், ராகி, கம்பு,
பருப்பு, துணி முதலியவற்றையெல்லாம் முழுவதுமாக
கொள்ளையர்கள் கொண்டு போயிருப்பார்கள். மற்றபடி
கொள்ளையடிப்பதற்கு பணமோ, காசோ, நகையோ
எதுவும் இருக்காது வீடுகளும் குடிசைகளாகத்தான் இருக்கும். ஓட்டு வீடு ஒன்றிரண்டு
இருப்பதே அரிது. இதில் ஒரு
குடும்பஸ்தன் யாராவது கொள்ளையரை எதிர்த்திருந்தால்
அடிபட்டு கைகால் முறியும், குடிசை
வீடு தீக்கிறையாகும். இப்படி கொள்ளையும், படையெடுப்பும்
அடிக்கடி நடைபெற்றதால் எந்தக் கிராமத்திலும் மக்கள்
நிம்மதியாக வாழ முடியாமல் துன்பமடைந்தனர்.
இதனால் மக்கள் ஆயுள் பூராவும்
பயந்து பயந்தே அக்காலத்தில் வாழவேண்டியிருந்தது.
மாணவர்களே,
இந்தப் பயம் எப்பொழுது, என்றைக்கு
நீங்கிற்று என்று தெரியுமா? சுமார்
கி.பி. 1750-ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு
வந்து (ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் ‘இந்தியா’
என்னும் ஒரு முழு நாடு
உருவானது) ஆட்சியைப் பிடித்து அங்கங்கு காவல் நிலையங்களை (போலீஸ்
ஸ்டேஷன்கள்) நிறுவி, போலீஸ்காரர்கள் துப்பாக்கியுடன்
காவல் புரிந்த பிறகே ஊருக்குள்,
கிராமத்திற்குள் மக்கள் பயமின்றி வாழ்க்கை
நடத்தும் நிலை ஏற்பட்டது.
1700-ம்
ஆண்டு காலங்களில், இந்தியாவை நோக்கி முஸ்லீம் படைகள்
வந்து, மன்னர்களோடு போர் புரிந்தும் மன்னர்
ஆட்சிகளைக் கைப்பற்றியும், இந்தியாவில் அறுபது சதவிகித கிராமங்களில்
புகுந்து, கோயில்களையெல்லாம் இடித்து, கல் விக்கிரகங்களை உடைத்து,
நாசப்படுத்தி, உலோக விக்கிரகங்களைக் கொள்ளையடித்து
மக்கள் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கினார்கள். கத்தி முனையிலும் மதமாற்றத்தைச்
செய்து கொண்டார்கள். பிறகு ‘குர்ஆன்’ வேதப்படி
நேர்மையாக, நீதியாக முஸ்லிம் மன்னர்கள்
அரசாளத் துவங்கினார்கள். பொதுமக்களிடையேயும், கலந்து வாழ்ந்து, சண்டை
சச்சரவுகள், மத எதிர்ப்புகள் இல்லாமல்
அமைதியைப் பரப்பினார்கள். இப்படியாக இந்து மத்தினரும் முஸ்லீம்
மதத்தினரும் ஒன்றுகூடி, உறவாடி, வாழும் வாழக்கை
அமைந்து வந்தது.
மாணவர்களே,
இந்தக் காலக் கட்டத்தில் அதாவது
கி.பி.1750-ல் ஐரோப்பியர்களான
ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இந்தியாவுக்குள் வந்து வியாபாரம் மூலம்;
போர் செய்வதன் மூலமும் நாடு பிடித்தார்கள்.
பாகம்
- 6
தியாகிகள்
வட இந்தியாவில் பகத்சிங்கும்
இன்னும் பலமும், தென்னிந்தியாவில் கட்டபொம்மனும்
மற்றும் பலரும் ஆங்கிலேயரை எதிர்த்துப்
போராடி, ஆங்கிலேயரிடம் பிடிபட்டு, தூக்கிலிடப்பட்டு உயிர்த் துறந்தார்கள். நாட்டைக்
காப்பதில் ஈடுபாடு கொண்டு உயிரிழந்து
தியாகிகள் ஆனார்கள். வெள்ளையராட்சியை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் அணி திரண்டு ஊர்வலம்
வந்தபொழுது போலீசாரால் அடிபட்டு, கீழே விழுந்ததும் கொடியைப்
போலீசார் பறிக்க, கொடியை விடாது
கையில் பிடித்துக்கொண்ட ‘குமரன்’ எனும் இளைஞன்
மருத்துவமனையில் 11-1-1932
-ல் உயிர் நீத்தார். அவரை
‘தியாகி திருப்பூர் குமரன்’ என்று இந்தியா
முழுவதும் பாராட்டப்படுகிறது. தியாகி திருப்பூர் குமரனின்
100-வது பிறந்தநாள் (2003-ல்) கடந்த ஆண்டில்
விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2004- ஆம்
ஆண்டில் தியாகி திருப்பூர் குமரன்
நினைவைப் போற்றி அமைக்கப்பட்டுள்ள கொடி
காத்த குமரன் நினைவிடச் சின்னத்தில்
உள்ளவாறு தபால் தலை வெளியிட்டதன்
வாயிலாக இந்திய அஞ்சல் துறை
பெருமைபெற்றது.
மாணவர்களே,
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களும்,
தொண்டர்களும் தேவைப்படும்போது மக்கள் அனைவரும் ஒன்று
திரண்டு ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து நாட்டு விடுதலைக்காகப் போராடிய
காலங்களில், ஆங்கிலேய அரசாங்கம், ‘இந்தியர்களே அமைதியாக வாழாமல் ராஜதுரோகமா செய்கிறீர்கள்,
இப்படி ராஜதுரோகம் செய்பவர்களை என்ன செய்யவேண்டும் என்பது
எங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லி தடியடி
நடத்துவதும் பொதுக்கூட்டத்தில் துப்பாகிச் சூடு நடத்திவதும் கைது
செய்வதும் சிறையில் அடைப்பதும் நாளுக்கு நாள் பெருகிற்று, பொதுக்
கூட்டத்திலும் ஊர்வலத்திலும் இந்தியா முழுவதிலும் தலைவர்களையும்
தொண்டர்களையும் தடியால் அடிப்பதும் துப்பாக்கியால்
சுடுவதும் சிறையில் அடைப்பதும் பெருகிவிட்டது.
நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒடுக்க,
நாசம் செய்ய ஆங்கிலேயனிடம் ஆயுதங்களாக
இருந்தவை ராணுவம், போலீஸ், பீரங்கி, துப்பாக்கி,
குதிரைப்படை, கைது, சிறைச்சாலை இன்னும்
பல.
சுதந்திரம்
பெற நம் தேசப்பிதா மகாத்மா
காந்தியிடம் இருந்த ஆயுதங்கள். தக்கிளி,
ராட்டை, காங்கிரஸ் சங்கம், தலைவர்கள், தொண்டர்கள்,
நாட்டு மக்கள், சத்தியம், தர்மம்,
அஹிம்சை, தேசிய உணர்வு, தேசிய
மரபு, நம் தேசிய கலாச்சாரம்,
அறப்போர், அறச்சேவை, ஒத்துழையாமை, சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், உப்புச் சத்தியாக்கிரகம், பொது
உடைமை, சமத்துவம், இத்யாதி இத்யாதி. இவற்றின்
துணையால் காந்திஜி ஆங்கிலேயருடன் போர் புரிந்தார்.
ஒரு சமயம் ‘ஜாலியன் வாலாபாக்’
போராட்டம் நடந்தது. (ஒரு பெரிய சதுப்பு
நிலத்தைச் சுற்றி காம்பவுண்டு சுவர்
உள்ள ஓர் இடம்) அதில்
பல ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்க காங்கரஸ் பொதுக்கூட்டம் நடக்கிறது. அந்தச் சமயத்தில் ஆங்கிலேய
அரசாங்கம் ராணுவத்தை விட்டு துப்பாக்கிச் சூடு
நடத்தியதில், தப்பித்துச் செல்ல வழி இல்லாமல்
காம்பவுண்டுக்குள் கூட்டம் அலைமோதியதில், துப்பாக்கிச்
சூட்டில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தார்கள். இப்படி ஈவு இரக்கமில்லாமல்
நம் மக்களை கொன்று குவித்துள்ளது
பிரிட்டிஷ் அரசாங்கம் என்பதை உங்கள் நினைவுக்குக்
கொண்டு வருகிறேன்.
சுதந்திரம்
பெற மக்களின் மந்திர கோஷம் ‘வந்தே
மாதரம் ஜெய வந்தே மாதரம்’
என்பதாகும்.
1920-ல்
காந்திஜி சென்னையிலிருந்து மதுரை நகரம் வந்து
சேர்ந்தார். மாலை பொதுக்கூட்டத்தில் கலந்து
கொள்ள காரைக்குடி போக வேண்டும் தயாராகி
வெளியே வந்தார். அவரை அழைத்துப் போகும்
தலைவர் கேட்டார். ‘மகாத்மாஜி பொதுக் கூட்டத்திற்குப் போக
வேண்டும். தாங்கள் வேட்டி, ஜிப்பா
அணிந்து வாருங்கள் போகலாம்’ என்றார். அதற்கு காந்திஜி, ‘நான்
இனிமேல் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு
இன்னொரு துண்டை மேலே போட்டுக்
கொள்வதுதான் எனது முழு ஆடை
என்று சொல்லி புறப்பட்டுவிட்டார். ஏன்
தெரியுமா மாணவர்களே? காந்திஜி சென்னையிலிருந்து
மதுரைக்கு ரயிலில் மூன்றாம் வகுப்பில்
(வழக்கமாக மூன்றாம் வகுப்பு) காந்திஜி வரும்போது, மக்கள் கோவணங்கட்டிக் கொண்டு
ஒரு துண்டை மேலே போட்டுக்
கொண்டு போவதையும் வருவதையும் பார்த்தார். ஆகா ஏழைகளின் வாழ்க்கை
ஒரு வேட்டி, ஒரு ஜிப்பா
அணியக்கூட முடியாது இருப்பதால் நானும் அதே தோற்றத்துடன்
தான் வாழ வேண்டுமென்று உறுதி
கொண்டார்.
ஒரு சமயம் மதுவிலக்குப் பிரசாரம்
செய்து மக்கள் மது குடிக்காமல்
வாழச் செய்ய வேண்டும் என
பொதுக்கூட்டத்தில் காந்திஜி கூறினார்.
காங்கிரஸில்
இருக்கும் ஈ.வெ.ரா.
அவர்கள், தனது தோப்பில் ஆயிரக்கணக்கான
தென்னை மரங்கள் இருக்கின்றன. அதில்
சில மரங்களில் (மது) போட்டிருந்தது. (மது)கள் போட்ட மரத்தை
அடியோடு வெட்டும்படி சொல்லி (சமாதானங்களை மறுத்து)
வெட்டி விட்டார்.
இன்னொரு
சமயம் தாழ்ந்த ஜாதியினரை எல்லாக்
கோயில்களிலும் உள்ளே சென்று சுவாமி
தரிசனம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும என காந்திஜி
பொதுக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார்.
இதை அறிந்த ஈ.வெ.ரா.அவர்கள் கேரளாவில்
வைக்கத்திற்கு சென்று மிக மிக
ஆச்சாரமுள்ள நம்பூதிரி பிராமணர்கள் நிர்வகிக்கும் கோயிலில், திருவனந்தபுரம் சமஸ்தான மன்னரிடம் அனுமதி
பெற்று தாழ்த்தப்பட்ட மக்களை சுவாமி தரிசனத்துக்கு
கோயிலினுள் அழைத்துச் சென்று சுவாமிதரிசனம் செய்வித்தார்,
கடவுள் பக்தி உள்ள ஈ.வெ.ராமசாமி நாய்க்கர்.
கதர் துணிகளை கிராமம் கிராமமாகச்
சுமந்து சென்று விற்றதன் மூலம்
கதர் துணி கட்டுவதால் சுயராஜ்ய
எண்ணம், தேச பக்தி, மக்கள்
உள்ளத்தில் படியும்படி பிரசாரம் செய்தார் காங்கரஸ் ஈ.வெ.ரா.
மகாத்மா
காந்தி அவர்களை ஆங்கிலேயர் கைது
செய்து சிறையில் அடைக்கும் ஒவ்வொரு முறையும் நம்
பாரத நாட்டு 30 கோடி மக்களின் உள்ளங்களிலும்,
தேச பக்தி, சுதந்திர எண்ண
எழுச்சி கொழுந்து விட்டு எரியும். பல
தடவை காந்திஜி அவர்களும் மற்ற தலைவர்களும் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒரு சமயம் காந்திஜி சிறையில்
அடைக்கப்பட்டிருக்கும் பொழுது ஆங்கிலேய அரசாங்க
அதிகாரி விஞ்ச் துரை சிறைக்குள்
வலம் வந்தார். கைதிகளைப் பார்வையிட்டு வரும்பொழுது ஒரு அறையில் காந்திஜி
யைப் பார்த்த அதிகாரி, இந்த
ஏழைப்பட்ட மனிதன் சிறைக்கு ஏன்
வந்தான் என்று தன்னுடன் வந்த
இன்னொரு அதிகாரியை விசாரித்து விபரம் அறிந்த பின்பு.
“இந்த சதையற்ற ஏழை எலும்பு
மனிதனா நம் அரசாங்கத்தை எதிர்ப்பவன்*
நாம் இந்தியாவை விட்டு வெளியேறணுமாம். நாம்
இந்த பூமியில் (உலகில்) ஐந்தில் ஒரு
பங்கை அரசோச்சுகிறோம். இன்னும் சொல்லப்போனால் நமது
அரசாட்சியில் சூரியன் அஸ்தமிப்பதேயில்லை. இந்த
அளவுக்கு உலகில் நீதியான ஆட்சியை
நாம் நடத்தி வருகிறோம் இதெல்லாம்
தெரியாதா இந்த மனிதனுக்கு?
இப்படியிருக்க
இந்தியப் பாமர மக்கள் நம்மைப்
பற்றி இல்லாததது பொல்லாததும், என்னவோ சுயராஜ்யமாம், ஜனங்களுக்குத்
தெரியாததை யெல்லாம் சொல்லி, எங்களை விரோதிகள்
என்று ஜனங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறான் இந்த மனிதன்.”
“ஆ*ஆ*” இந்த மனிதன்
எங்கள் வலிமையை அறியமாட்டான். இப்பவே
சுட்டுப் பொசுக்கவேண்டும் என்று திட்டுகிறான். விஞ்ச்
துரை திட்டுவதை மகாகவி பாரதி பாடலாக
கவி படைத்துள்ளார்.
மகாகவி
பாரதியார் நாம் செய்த புண்ணியத்தால்
தமிழ்நாட்டில் பிறந்தார். மக்களுக்குத் தேவையான தேச பக்தி,
ஆன்மீகம் இன்னும் பல நல்ல
நோக்கங்களை கவிதையாக வடித்துத் தந்துள்ளார். அதிலும் மகாத்மா காந்தி
அவர்கள், 21 ஆண்டு காலமாக நம்
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கியே ஆகவேண்டும் என தேச சேவை
செய்துகொண்டு வருவதை பல சுதந்திரக்
கவிதைகளாக இயற்றி மக்கள் மனதில்
சுதந்திர எண்ணத்தை நாட்டியுள்ளார்.
இப்படி
நாட்டியதன் உதாரணமாகத்தான் விஞ்ச் துரை திட்டுவதையும்
கவிதையாகத் தீட்டி, ஆங்கிலேயர் என்றால்
தெரிந்து கொள்ளுங்கள். நம் ஜென்ம விரோதிகள்
என்று, பாரதியார் கவிதையினை அணுகுண்டு தாத்தா ஆகிய நான்
பாடிக்காட்டுவேன்.
விஞ்ச்
துரை காந்திஜி யைத் திட்டுவது
நாட்டிலெங்கும்
சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய்
- கனல் மூட்டினாய் ;
வாட்டியுன்னை
மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன்
வலி காட்டுவேன்.
கூட்டங்கூடி
வந்தேமா தரமென்று
கோஷித்தாய்
- எமைத் தூஷித்தாய்
ஓட்டம்
நாங்கள் எடுக்கவென்றே கப்பல்
ஓட்டினாய்
- நீ பொருள் ஈட்டினாய்
கோழைப்பட்ட
ஜனங்களுக்கு உண்மைகள்
கூறினாய்
- சட்டம் மீறினாய்
ஏழ்மைப்பட்டிங்கு
இரத்த லிழி வென்றே
பேசினாய்
எங்களை யேசினாய்
அடிமைப்பேடிகள்
தம்மை மனிதர்கள்
ஆக்கினாய்
- பயத்தைப் போக்கினாய்
மிடிமை
போதும் நமக்கென்றிருந்தோரை
மீட்டினாய்
- சுதந்திர ஆசை ஊட்டினாய்
எங்குமிந்த
சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய்
- விதை தூவினாய்
சிங்கம்
செய்யுந் தொழிலை (நீ) சிறுமுயல்
செய்வதா
– நீங்கள் உய்வதா?
சுட்டு
வீழ்த்தியே புத்தி வந்திடப்
பண்ணுவேன்
- குத்திக் கொல்லுவேன் (என்னை)
தட்டிப்
பேசுவாருண்டோ (உன்னை) சிறைக்குள்ளே
தள்ளுவேன்
- பழி கொள்ளுவேன்.
மொழி வெறி, மத, சாதி
வெறி, தீண்டாமை ஆகியவற்றை நீக்க மக்கள் ஒன்றுபட
வேண்டும் என்று காந்திஜி சொன்னதை பாரதியார் கவிதை
ஆக்கினார். மாணவர்களே, மகாத்மா காந்திஜி யின்
சுதந்திரப் போராட்ட சேவையை, பல
சுதந்திரப் பாடல்களாக இயற்றி நம் தமிழ்நாட்டு
மக்கள் உள்ளங்களில் பாரதி பதித்து பதிவு
செய்துள்ளார். ஆகவே மகாகவி, தேசிய
கவி பாரதி அவர்களை நம்
உள்ளங்களிலே தோன்றச் செய்வோம். பாரதியை
மறக்கமாட்டோம் என உறுதி கொள்வோம்.
பாகம்
- 7
வட்ட மேஜை மாநாடு
15-9-1931-ல்
‘அரை நிர்வாண பக்கிரி (காந்தி)
வைசிராய் மாளிகையின் படிகளில் ஏறி நடப்பதா? என்று
சர்ச்சில் கேட்டார்.
பூரண சுயராஜ்யம் கோருவதற்கு
லண்டனில் நடக்கும் வட்ட மேஜை மகா
நாட்டுக்குச் செல்வதென முடிவு செய்துகொண்டு, காந்திஜி,
மாளவியா, சரோஜினி நாயுடு, ஸர்.பி. பட்டாணி, தேவதாஸ்
காந்தி, மீராபென், மகாதேவ தேசாய், பியாரிலால்,
ஜி.டி.பிர்லா ஆகியோர்
கப்பல் மூலம் லண்டனுக்குச் சென்றார்கள்.
13-9-1931 -ல்
காந்திஜி கிங்ஸ்சி
ஹாலில் இருந்து அமரிக்காவுக்கு முதன்முதலாக
ரேடியோ பிரசங்கம் செய்தார். ‘இதில்தான் நான் பேசவேண்டுமா’ என்று
மைக்கைக் காட்டி காந்திஜி கேட்டார்.
அரை மணி நேரம் பேசினார்.
லண்டனில்
வட்ட மேஜை மாநாட்டில், இந்தியாவுக்கு
சுயராஜ்யம் கொடுத்தே ஆகவேண்டும். பிறகு இந்தியாவும் பிரிட்டனும்
நேசத்தோடு வாழ்வோம் என காந்திஜி கேட்டுக்
கொண்டதால், பிரிட்டிஷ் அரசாங்கம் தன் பிடியைத் தளர்த்தியது.
மாகாணங்களில்
காங்கிரஸ் ஆட்சி துவங்க பிரிட்டிஷ்
அரசாங்கம் வழிவிட்டது. அனைவரும் லண்டனிலிருந்து பம்பாய் வந்து சேர்ந்தனர்.
1939-ல்
(காந்திஜி க்கு வயது அப்போது
70) உலகத்தை யுத்தத்தில் மூழ்கடிக்க வேண்டாம் என்று ஜெர்மனியை ஆளும்
ஹிட்லருக்கு காந்திஜி கடிதம் எழுதினார்.
1943 (காந்திஜி
வயது 74) சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்
காந்திஜி அவர்களை சந்தித்து, “காந்திஜி
அவர்களே, பீரங்கிப் படைகளை வைத்துக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் சர்க்காருடன்
போருக்கு ராட்டை, தக்கிளியுடன் உபவாசமிருந்து
எந்த உயிரும் சாகக்கூடாது என்றும்
அஹிம்சையை ஓதிக்கொண்டு போராடினால் சுயராஜ்யம் கிடைக்குமா? மன்னனுக்கு மன்னன், நாட்டுக்கு நாடு
சண்டை செய்து எதிரியைத் தோற்கடித்து
வெற்றி பெற்ற அரசன் அரசாள்வதே
பண்டைச் சரித்திரம். நீர் படித்ததில்லையா? இராமாயணம்,
மகாபாரதம் முழுதும் யுத்தமே.
ஆகவே நாமும் படையை உண்டாக்கி
அந்நிய நாட்டாரிடம் உதவி பெற்று போரில்
பிரிட்டிஷ்காரரை விரட்டுவதே நாம் சுதந்திரம் பெறும்
வழி. இதற்கு மக்களைத் தயார்
செய்வோம்” என்று நேதாஜி சுபாஸ்
சந்திர போஸ் கூறினார்.
அதற்கு
காந்திஜி அவர்கள், “பிரிட்டிஷ்காரர்கள் நீதிக்குத் தலை வணங்குபவர்கள். அவர்களை
நாம் நம்பலாம். நம்மிடையேதான் ஒற்றுமை கெடாமல் வளரவேண்டும்.
நீங்களும் நானும சேர்ந்து சுயராஜ்யம்
பெற பாடுபடுவோம்” என்று விளக்கினார் காந்திஜி.
பிறகு ராஜதுரோக சட்டத்தின்படி ஆங்கிலேய அரசாங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை
கைது செய்து வீட்டுச் சிறையில்
அடைத்தது. சில நாட்களில் மாறு
வேடமிட்டு வீட்டுக் காவலிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் தப்பி
வெளியே வந்து ஜெர்மனி சென்று
ஹிட்லரிடம் பிரிட்டிஷ் படையை விரட்ட, போர்
ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்யும்படி கோரினர்.
அதற்கு
ஹிட்லர் நாங்கள் இருவரும் ஐரோப்பியர்கள்,
எம்முள் சண்டையிருந்தாலும் பிரிட்டிஷாருக்கு எதிராக நாங்கள் எந்த
உதவியும் செய்யமாட்டோம் என ஹிட்லர் மறுத்துவிட்டார்.
பிறகு சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து
தலைமறைவாக பிரயாணம் செய்து ஜப்பானுக்கு வந்து,
ஜப்பான் அரசாங்கத்திடம் உதவி கேட்டார்.
அதற்கு
ஜப்பான் அரசாங்கம் அவருடைய போர்ப்படைக்கு உணவு
கொடுத்து உதவுவதாக வாக்களித்தது.
அந்தக்
காலகட்டத்தில் ஜப்பானில் ஒரு இந்தியர் இந்தியப்
படையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். சுபாஷ் சந்திரபோஸ் இதையறிந்து
அவருடன் சேர்ந்து போர்ப் படையை பலப்படுத்தி
I.N.A. எனப் படைக்குப் பெயரிட்டு ‘இந்தியா நோக்கிப் புறப்படு’
எனக் கோஷம் போட்டு வரும்
வழியில் பாதியில் கஷ்டம் தாங்கமுடியாமல் படை
சிதறுண்டது.
ஆகாய விமானம் மூலம் சுபாஷ்
சந்திரபோஸ் திரும்ப ஜப்பானுக்குச் செல்ல
நடு வழியில் விமானம் கீழே
விழுந்து நொறுங்கியது. சுபாஷ் சந்திர போஸ்
என்ன ஆனார் என்பது இதுவரை
தெரியவில்லை.
மாணவர்களே! மகாத்மா
காந்தி அவர்கள் ஆங்கிலேய அரசால்
கைது செய்யப்பட்டு சிறைவாசம் செய்துள்ளார். ஆங்கில அரசாங்கத்தை தன்
கோரிக்கைக்கு கட்டுப்படுத்த பலமுறை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
சில சமயம் மக்களைக் கட்டுப்படுத்தக்
கூட உபாச உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்தார்.
மாணவர்களே! மகாத்மா
காந்தி அவர்களுக்கு முகம்மது அலி ஜின்னா அவர்களும்
ஜவஹர்லால் நேருஜி அவர்களும் இன்னும்
மற்ற தலைவர்களும் அடிபட்டு, சிறையில் கஷ்டப்பட்டு அளவற்ற துன்பத்தையும் பல
ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து அஹிம்சை முறையில் போராடிப்
பெற்ற சுதந்திரம் - என்று வந்தது? மாணவர்களே,…
சொல்லுங்கள் என்று அணுகுண்டு தாத்தா
கேட்க, மாணவர்கள் அனைவரும் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் 15-ம் நாள் என்று
ஒரே குரலில் சொன்னார்கள்.
ஆம், இதற்கு முன் 04.07.1947ல்
பிரிட்டிஷ் பார்லிமெண்டில், 1947 ஆகஸ்ட் 15-ம் தேதியன்று இந்தியா,
பாகிஸ்தான் என்ற இரண்டு சுதந்திர
நாடுகள் உதயமாகும் என்னும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
எனவே
15-8-1947 -ல் பாரத நாடு சுதந்திரம்
அடைந்தது.
ஜெய் ஹிந்த் மகாத்மா காந்திக்கு
ஜே* மாணவர்களே, வருங்கால மக்களாக நீங்களும் சுதந்திரத்தை
மறவாமல் நம் தேசத்தைக் காப்பாற்றி
ஒற்றுமையுடன் நல்ல பண்புடன் வாழ்வோம்
என சூளுரைப்போம் என்பதைக் கூறி நிறைவு செய்கிறேன்.
பெற்ற சுதந்திரத்தை இனிப் பேணி காப்போம்.
பாகம்-
8
தெய்வ பக்தி
மாணவ மணிகளே, தேசபக்தி,
பெற்ற சுந்திரம் பற்றி சொன்னேன். இனி
தெய்வபக்தி, தெய்வ பக்திப் பாடல்
அடியேன் (அணுகுண்டு தாத்தா) இயற்றியது. இனிமேல்பெற
வேண்டிய உலக சுதந்திரம், அணுகுண்டின்
நன்மை பற்றி சொல்லுகிறேன்.
மாணவர்களே, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் அதாவது பண்டைய
காலங்களில் உலகில் மனிதராகப் பிறந்துள்ள
மக்கள் நல்வாழ்க்கை வாழ வேண்டுமென எண்ணம்
கொண்ட பொpயோர்களான ஞானிகள்,
தபஸ்விகள், தவசீலர்கள், சித்தர்கள், சிவனடியார்கள், வைணவ அடியார்கள், 63 நாயன்மார்கள்
இயேசு நாதர், முகம்மது நபி,
புத்தர் பிரான், ஆழ்வாராதிகள், பட்டினத்தார்,
திருவள்ளுவர், வள்ளலார் இராமலிங்க அடிகள் இன்னும் எண்ணற்ற
பொpயோர்கள் அந்தந்தக் கால
தர்மப்படி வேதாகம நு}ல்கள்,
ஞான நு}ல்கள், கீதை,
சைவ சித்தாந்தம், நாலாயிரதிவ்ய பிரபந்தம், திருக்குறள், திருப்புகழ், இராமாயணம், மகாபாரதம் முதலிய அhpய
நு}ல்களை இயற்றி உலகுக்குத்
தந்துள்ளார்கள்.
மேலும் மக்கள் பண்புகளை
மறக்காமல் உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ ஹரிச்சந்திர நாடகம்
சத்தியவான் சாவித்திரி, நளதமயந்தி நாடகங்களையும், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களையும் இயற்றித்
தந்துள்ளார்கள்.
இதல்லாமல், நல்ல மனத்துடன் இறைவனை
வணங்க ஊர்கள்தோறும் கோயில்களும் குளங்களும், மடாலயம், ஆஸ்ரமம், சர்ச்சு, பள்ளிவாசல்களும் ஏற்படுத்தியுள்ளார்கள்.
புண்ணிய யாத்திரை நடத்திச்
சென்று, புண்ணிய ஸ்தலங்களுக்கும் புண்ணிய
நதிகளில் நீராடுவதும், நோன்பு, விரதம் கோயில்
விழாக்கள், பக்திச் சொற்பொழிவு, பக்தி
பஜனை என முன்னோர்கள், ஏற்படுத்தியதன்
மூலம் மக்கள் சத்திய நெறி
தவறாமல் அன்பும் அமைதியும் தவழும்
வாழ்க்கை வாழ வழி அமைத்துள்ளார்கள்.
இதுவல்லாமல் உலகில் அநீதிகளையும் அக்ரமங்களையும்
துன்பங்களையும் துயரங்களையும் உண்டாக்கியே அரசாண்ட, அரக்க குணம் கொண்ட
ராட்ஷசர்களை மாய்த்து உலகில் நீதி, சத்தியம்,
அன்பு நிலைக்க வேண்டி ஆண்டவன்
(மகாவிஷ்ணு) மனித உருவத்தில் அவதாரமெடுத்து,
பிறந்து உலக மக்களைக் காப்பாற்றியதாக
பல புராணக் கதைகளை ஆன்றோர்கள்
இயற்றியுள்ளார்கள்.
அதன்படி இன்றைக்கும் நாம்
தீபாவளிப் பண்டிகையை ஆண்டுதோறும் பட்டாசு கொளுத்தி கொண்டாடுவது
வழக்கமாகி விட்டது. ஏன்?
நரகாசுரன் என்ற ஒரு அரக்கன்
உலகை ஆண்டு கொண்டு இருந்த
காலத்தில் உலக மக்களுக்குக் கொடுந்துன்பங்களை
இழைத்துக் கொண்டிருந்ததால் உலக மக்கள் மகாவிஷ்ணுவை
நோக்கி தவம் செய்து, நரகாசுரன்
கொடுமைகளைப் பற்றி முறையிட்டார்கள். அதை
அறிந்து மகாவிஷ்ணு, பூவுலகில் கிருஷ்ணவதாரமாகப் பிறந்து நரசாசுரனை வதம்
செய்தார். நரகாசுரன் உயிர் நீங்கும் தறுவாயில்
கிருஷ்ணரிடம் ஒரு வரம் கேட்டான்.
அந்த வரம் ‘மக்களுக்கு பயங்கர
துன்பங்களை செய்து கொண்டிருந்த நான்
சாவதே உலக மக்களுக்கு நல்லது.
இனி மக்கள் பயமின்றி அன்பாகவும்
அமைதியாகவும் வாழ்வார்கள்.
ஆகவே நான் சாகும்
இந்த நாளை, ஆண்டுதோறும் எண்ணெய்
தேய்த்துக்குளித்து புத்தாடை அணிந்து இனிப்பு முதலிய
பலகாரங்கள் செய்து சாப்பிட்டு இந்த
நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற
வரத்தைக் கேட்டான் அரக்கன்.
கேட்ட வரத்தை கிருஷ்ணன் மகிழ்ந்து
கொடுத்ததால், நாம் இன்று பட்டாசு
கொளுத்தி விமரிசையாக தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.
தவிர, முருகன் கோயில்களில் வருடா
வருடம் சூரசம்ஹாரத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதுபோல
அந்தந்தக் காலகட்டத்தில் ஆண்டவன் அவதாரமெடுத்து. ஆயிரக்கணக்கான
அரக்கர்களை மாய்த்துள்ளார்.
அவற்றில்
பத்து அவதாரங்களை மக்கள் மறக்காமலிருக்க தசாவதார
புராணங்களாக முன்னோர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
இவையெல்லாம்
நடந்து முடிந்தவை. ஆனால், இந்தக் காலத்தில்
முடிமன்னர்கள், அரசர்கள் நாடாள்வது இல்லை. அந்தந்த நாட்டில்
மக்களே சிலரைத் தேர்ந்தெடுத்து அரசமைத்து
ஆட்சி நடக்கிறது. என்றாலும் மக்களில் சிலர் பலருக்கு கேடுகளைச்
செய்வதில் அரக்கர்களாக இருக்கிறார்கள். இவர்களால் பெரும்பான்மையான மக்கள் துன்புறுகிறார்கள்.
புராண காலங்களில் கைச்சண்டை, மல்யுத்தம், தடிகளால் போர் செய்தல், காலாட்படை,
குதிரைப் படை யானைப்படை, தேர்ப்படை
- இவை எல்லாவற்றையும் விட பயங்கரமான வில்லம்பு
படை கொண்டுதான் போர் (சண்டை) நடந்தது.
ஆனால் இந்தக் காலத்தில், வெடிகுண்டு,
துப்பாக்கி, பீரங்கி, தானியங்கி விமானம் மூலம் குண்டு
போடுவது, தானியங்கித் துப்பாக்கி 5000 கி.மீட்டர் துரத்தை
குறி வைத்து ஏவுகணைகள் மூலம்
தாக்குதல் இவையெல்லாவற்றையும் விட அதிபயங்கரமான அணுகுண்டு
போன்றவை போராயுதங்களாக உள்ளன.
அதிலும்
அணுகுண்டின் பலம் என்ன தெரியுமா?
புராணங்கள் பற்றி பிரசங்கத்திலோ, பாராயணத்திலோ
சொல்லுவார்கள். அதில் அரக்கன் ஒருவன்
ஒரு யானையைப் பார்த்து, கையினால் ஒரு குத்துக் குத்தினால்
யானை இறந்துவிடும். யானை என்பது எவ்வளவு
பெரிய உருவம். அவ்வளவு மலைபோல்
இருக்கும் யானையை மனிதனாகயிருக்கும் அரக்கனின்
ஒரு குத்தில் யானை மடிகிறதென்றால் அரக்கனுக்கு
எவ்வளவு பலம் என்பதைக் காதால்
கேட்டு வாயைப் பிளப்போம் நாம்.
அப்படியனால்
ஓர் அணுகுண்டு போட்டால் 1000 யானைகள்
இருந்தாலும் அந்த இடத்தில் இருக்கும்
எல்லா உயிர்ப்பிராணிகளும், மனிதர்களும் அனைத்தும் மாண்டு போகும். ஆகையினால்
அணுகுண்டுக்கு எத்தனை ஆற்றல் சக்தி
என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஆகையினால்
அணுகுண்டை அணுகுண்டரக்கனாக பாவித்து, இந்த அணுகுண்டரக்கனை மாய்க்க
ஆண்டவனை வேண்டுவோம்.
அணுகுண்டை
வேண்டாமென்றும் அணுகுண்டரக்கனை மாய்க்க உலகில் மக்கள்
அனைவரும் கட்டாயமாக ஒன்றுபட்டே ஆக வேண்டுமென்பதே அணுகுண்டின்
நன்மை.
ஆகவே ஆண்டவனை வேண்டிக் கொள்வதை
சொல்லுகிறேன். மாணவர்களே, நீங்களும் தொடர்ந்து சொல்லுங்கள்.
‘அணுகுண்டரக்கனை
மாய்ப்பதற்கும் அவனுடைய ஆயிரமாயிரம் படைகளைத்
திருத்துவதற்கும் உலக மக்களிடையே நட்பும்
அமைதியும் வளர்வதற்கும் அணுவீஸ்வரக் கடவுள், சிவா, விஷ்ணு,
அல்லா, நபி, இயேசு, முருகா,
ராமா, கிருஷ்ணா, உலகில் எல்லா நாடுகளிலுமுள்ள
எல்லா கடவுள்களையும் காந்தி மற்றும் பராசக்தியையும்
பிரார்த்தனை செய்கிறோம்’.
இத்தனை
தெய்வங்களை ஏன் தொழவேண்டும்? ஏனென்றால்
அணுகுண்டரக்கன் உலகிற்கு ஒரு பயங்கரமான எதிரி.
அவனுடைய பலம் இந்த உலகை
ஒரு நொடியில் அழிக்க முடியும்.
1945 ஆகஸ்ட் மாதம் 6-ம்
தேதியில் ஜப்பான் நாட்டில் உள்ள
ஹிரோஷிமா என்னும் நகரின் மேல்,
அமெரிக்கா எய்த அணுகுண்டால் 1¼ லட்சம்
மக்கள் பலியாகி, அங்கிருந்த மற்ற உயிர்களும் மடிந்தன.
அமெரிக்கா அத்தோடுவிட்டதா? மேலும் ஒரு அணுகுண்டை,
நாகசாஹி நகரின் மேல் 9-ம்
தேதியன்று போட்டது. இதனால் ஒரு லட்சம
மக்களும் பல்லாயிரம் பிராணிகளும் மாண்டன. மாண்டதோடு முடிந்ததா?
இல்லை. அணுகுண்டரக்கனின் விஷக்காற்றினால், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில்
பிறக்கும் குழந்தைகள் ஊனமாகிப் பிறந்தன. சுமார் 25 ஆண்டு காலம் வரை
இப்படியே கண் உடல் பாதிப்பேற்பட்டு
பிறந்தன.
அணுகுண்டரக்கனுக்கு
படைகள் இருக்கின்றனவா? ஆம் இருக்கின்றன. எத்தனை?
ஆயிரமாயிரும் படைகள் இருக்கின்றன. அந்தப்
படைகள் என்ன செய்கின்றன.
அவை தூங்குவதில்லை. நாள்தோறும் ஒவ்வொரு நிமிடமும்; உலக
மக்களுக்குத் துன்பம், தொல்லை, தீமைகளைச் செய்து
கொண்டேயிருக்கின்றன.
அவற்றை
அன்றாடம் செய்திப் பத்திரிகைகளில் பார்த்தால் திருட்டு, புரட்டு, கொலை, களவு, கற்பழிப்பு,
லஞ்சம், வஞ்சம், மோசடி, ஊழல்,
பண மோசடி, மாமூல், துரோகம்,
கடத்தல், சிலை திருட்டு போன்ற
பெயரால் ஏகப்பட்ட வஞ்சனைகள், குற்றங்கள், தீமைகள் நடந்திருக்கும்.
இன்றைய
பேப்பரில் எத்தனை படைகள் என்று
எண்ணிப் பாருங்கள். 60 படையாவது எண்ணியிருப்பீர்கள். இது உலகம் முழுவதுமே
இடைவிடாமல் நடக்கின்றன.
நாளை, மறுநாள், எல்லா நாட்களிலும் இந்தப்
படைகள் குற்றங்கள் செய்துகொண்டேயிருப்பதால்தான் தூங்குவதில்லை என்று சொல்லுகிறேன்.
இத்தனை
படைகளுக்கும் தலைவனாக அணுகுண்டரக்கனை ஏற்றுக்
கொண்டு, இந்த இடர்பாடுகள் நீங்க
உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக
எல்லாக் கடவுள்களையும் வேண்டிக்கொள்வோம்.
தவிரவும்
இன்னொரு மிகச் சிறிய படையும்
இருக்கிறது. சொல்லுகிறேன்.
அதாவது,
‘நல்ல சினிமாக்களை வரவேற்கிறோம். ஆனால் ஆபாச சினிமாக்காரர்களைக்
கண்டிக்கிறோம்’. இது சுருக்கம்.
விரிவாகச்
சொல்லுகிறேன். ஆபாசப் படமெடுக்கும் ஆபாச
சினிமாக்காரர்களே, நீங்கள் ஆபாச சினிமா
படமெடுத்து நாள்தோறும் நான்கு காட்சிகளைக் காட்டி,
ஆபாசத்தையே வளர்த்து மக்களைக் கெடுத்து, கொள்ளையடித்து ஆபாசத்தையே தின்று கொழுக்காதீர்கள் என்று
கண்டிக்கிறோம்.
நல்ல சினிமா படம் எடுத்து,
நல்ல காட்சிகளைக் காட்டி, நல்ல பண்பை
வளர்த்து நல்ல சோறு சாப்பிட்டு
மக்களுக்கு நல்வழி காட்டுங்கள் என்று
உங்கள் காலில் விழுந்து வணங்குகிறோம்.
அது ஏன் சினிமாக்காரர்கள் காலில்
விழவேண்டும்? என ஒருவர் கேட்கிறார்.
அதாவது
உலகில் மனிதர்களுக்குத் தேவையான தொழில்கள் யாவுமே
சிறந்தவைதான். அதில் தாழ்ந்தது உயர்ந்தது
என்றில்லை. தொழில் என்றால் ஒருவரைக்கொண்டு
ஒருவர் பழகவேண்டும். அல்லது படித்துத் தெரிந்து
கொள்ளவேண்டும். ஆனால் சினிமாவை குழந்தைகளிலிருந்து
முதியவர் வரை பார்த்து தெரிந்து
கொள்ளலாம் ஆகையினால் நல்ல பண்புள்ள சினிமா
படம் எடுத்துக் காண்பித்து நாட்டின் பண்பு கெடாமல் நம்
நற்பண்பை வளர்க்க உதவவேண்டும்.
மாணவர்களே,
ஆபாச சினிமா அரக்கனைப் பற்றிய
புராணத்தை இத்துடன் நிறுத்தி தனியாக புராணம் தருகிறேன்.
இப்பொழுது
அணுகுண்டரக்கனை மாய்க்க இறைவனை வேண்டி
எளிய சொற்களில் 10 வயது பாலகளும் மறவாமல்
பாடக்கூடிய எளிய மந்திரப் பாடலை
நான் பாடுகிறேன். நீங்கள் அனைவரும் தொடர்ந்து
பாடுங்கள்.
மாணவர்களே,
இதற்கு முன்னதாக, உலகில் மக்கள் வாழ்க்கை
நலமாக அமையவேண்டுமானால், தெய்வ பக்தியின் மார்க்கத்தில்
முழு நம்பிக்கை வைத்து, சமுதாய வாழ்க்கையில்
அன்பு நிலவ அனைவரும் ஒற்றுமையாக
ஒன்றுபட்டு, நல்ல பண்பினை வளர்த்து
வாழ்ந்தால் மட்டுமே அமைதியான வாழ்வு
கிட்டும். தற்கால உலகில் அமைதியே
வாழ்க்கைக்கு மூலாதாரம் என்பதை அறிந்து செயல்படவேண்டும்.
உலகில் அனைவரும் அமைதியாக வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
இதை மறவாதீர்கள்.
நாள்தோறும்
காலையில் சாமி கும்பிடும் முன்
ஐந்து முறை இந்த மந்திரத்தைச்
சொல்லுங்கள்.
‘உலகில்
அனைவரும் அமைதியாக வாழ்வோமாக*’
பின் குறிப்பு
அணுகுண்டரக்கன் மாய்வான் என இறுதியில் பாடும்
சில பாடல்களை சுருக்கமாக அணுகுண்டு தாத்தா முதலில் பாட,
மாணவர்கள் பின்தொடர்ந்து பாடுவார்கள். இப்படிப் பாடும் பொழுது கல்விக் கூடம் ஆன்மீகக் கூடமாக தேவலோகமாக பரிணமிக்கும்.
நிறைவு பெற்றது.