1 செப்டம்பர், 2013

நெசவாளர் இனங்கள்/ Weavers

               

ஆடை :- மனிதன் மாறுபட்ட தட்ப வெப்ப நிலையிலிருந்து.தன் உடலை பாதுகாக்க நினைத்த போது உடை தோன்றியுள்ளது.

    முதலில் இலைத் தலைகளையும், பின் மிருக தோல்களையும் பயன்படுத்தி உள்ளான். சிவபெருமானை தோல் ஆடையுடன் சித்தரிக்கப்பட்டுள்ள ஓவியத்தை இப்பொழுதும் காணமுடிகிறது.

    முந்தய காலத்தில் மனிதர்கள் நீண்ட முடியை வளர்த்துள்ளனர். பின் அதில் பின்னல்களை பின்னியுள்ளனர். அதன் வலிமையை பார்த்து கயிறு செய்வது உருவாகியிருக்கிறது. இதுவே நெசவு தொழிலுக்கு காரணகர்த்தாவாக அமைந்தது.

    ஆட்டின் ரோமத்திலிருந்து கம்பளி தயாரிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சணல், பட்டுபூச்சி ஆகிய வற்றால் நெசவு தொழில் வளர்ந்துள்ளது. விவசாய தொழிலுக்கு முற்பட்டதாக நெசவு தொழில் இருந்துள்ளது.


சணல்:- ஆப்பிக்காவிலும், எகிப்திலும், --- கி.மு. 8000 த்திலும்.
பட்டு :- சீனா மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளிலும்—கி.மு.5000-3000 த்திலும்
பருத்தி;- முதலில் இந்தியாவிலும், பின் அமெரிக்காவிலும்-கி.மு.1700-1500 ல் இருந்துள்ளது.

    வியாபாரம் என்பது ஆடை தொழில்களில் தான் ஆரம்பித்திருக்கிறது. கி.மு.114 ல் பட்டு துணி வியாபாரம் மேற்கையும்,கிழக்கையும் இனைத்துள்ளது. 5000 மைல் தொலைவில் உள்ள மக்களையும் இது ஈர்த்துள்ளது.

    இந்தியாவில் பருத்தி துணியை பல வகையான சித்திர வேலைபாடுகளுடன் தயாரித்துள்ளனர். இது பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கிரேக், ரோமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கி.மு.3300-2600 ல் பருத்தியையே ஆடையாக பயன்படுத்தி உள்ளனர். என்பது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    சிலந்தியை முன் காலத்தில் நெசவாளர்களின் சின்னமாக சொல்லபட்டுள்ளது. பட்டு பூச்சியை போல சிலந்தி மூலமாக நூல் எடுக்க முயற்சிக்க பட்டுள்ளது. [Madagascar golden spiders] என்ற ஒரு வகை சிலந்தியின் நூல் இரும்பு கம்பிகளை விட வலிமையாக இருந்திருக்கிறது. அந்த சிலந்தி இனம் ஒன்றையொன்று சாப்பிட்டுக் கொள்ளும் இனமாதலாலும், அது நகரும் போது தான் நூல் எடுக்க முடியும் என்பதாலும். இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இருந்தாலும் சாதனைக்காக அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடு, பிரான்ஸ் நாடுகளில் ஒரு சில சட்டைகளை தயார் செய்து வைத்து உள்ளார்கள்.

நெசவு;- நெசவு என்பது ஆடை தயாரிக்கும் முறை. ஆடை தயாரிக்க பொதுவாக இரண்டு விதமான நூல் வேண்டும். பாவுநூல் எனப்படும் நீள வாக்கில் வரக்கூடிய நூலும், ஊடை நூல் எனப்படும் குறுக்கு வாக்கில் வரக்கூடிய  நூலும் [warp & weft] இந்த ஊடை நூல் குறுக்கு வாக்கில் பின்னபட வேண்டும். இந்த ஊடை நூல் வித,வித மாக பின்னபடுவதில் தான் வித,வித மான வடிவங்கள் உருவாகிறது.

நெசவாளர்களின் இனம்:- இந்திய நெசவாளர்களில் பல ஜாதிக்காரர்களும், பல மதத்தை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். பருத்தி, பட்டுநூல் கண்டுபிடிப்பின் மூலம் வாணிகத்தில் ஏற்றுமதி, இறக்குமதியில் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

    துளு நாட்டில் சாலியன் மரபை சார்ந்தவர்கள் பெரிய அளவில் வாழ்ந்துள்ளனர். சாலியன் என்ற வார்த்தை சிலந்தியை குறிக்கிறது. இவர்கள் நெசவாளர்களாக இருந்திருக்க வேண்டும்.

    செட்டியார்கள் துளு நாட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் வீரபத்திரன் என்ற கடவுளை வழிபட்டுள்ளனர். செட்டியார் என்ற வார்த்தை அர்த்தம் வியாபாரியை குறிக்கிறது. அவர்களின் இயல்பு தற்போது தழிழ் நாட்டில் உள்ள செட்டியார்களின் இயல்பை ஒத்திருக்கிறது.

    மத்திய அரசின் கணக்கெடுப்பில் நெசவை தன் குல தொழிலாக கொண்ட நிறைய இனம் இருந்திருக்கிறது. அவைகள்
1.பத்மசாலி. 2.தேவாங்கா. 3.ஜன்றா. 4.தொகட்டா. 5.தொகட்டா வீரகஸ்றியா. 6.பட்டகாரு. 7.கர்மிபக்துலா. 8.காரகால பாக்குலா. 9.சுவாகுலா சாலி. 10.நீலசாலி. 11.நலகண்டி நெஸ்சி. 12.குர்ணி. 13.குர்மி செட்டி சாலி. 14.கரிகாலா. 15.கைக்கோலன். 16.செங்குவாகன். 17.பட்டுசாலி. 18.செட்டிகார்.

1. பத்மசாலி:- ஆந்திரபிரதேசம்—தாய்மொழி தெலுங்கு, குல தெய்வம் பத்மாவதி. ஶ்ரீனிவாச கடவுளின் துணைவி.

2. தேவாங்கா:- கர்நாடகா,ஆந்திரா—தாய்மொழி கன்னடம், தெலுங்கு. சுத்தமான பருத்தி துணிகளை நெய்பவர்கள்.

3. சாலியர்/பத்மசாலியர்/செட்டியார்:- தமிழ்நாடு,ஆந்திர பிரதேசம்—தாய்மொழி தமிழ்,தெலுங்கு. இவர்கள் செயற்கை பட்டு நெசவாளர்கள்.

4. பட்டகாரு:- கேரளா—தாய்மொழி மலையாளம். மலையாளி நெசவாளர்களை சாலியன், சாலியர், சாலி என்று அழைக்க படுகின்றனர். குடும்ப பெயரை வைத்து அடையாளம் கண்டறியப் படுகின்றனர்.

5. செட்டிகார்:- கர்நாடகம்—தாய்மொழி துளு,கன்னடம். சாலியன், சாலியர், சாலி என்று இவர்கள் மலையாள நெசவாளர்களைப் போல் அழைக்கப்பட்டலும் கேரளாவில் உள்ளவர்களிடம் இருந்து பழக்கவழக்கங்களில் மாறுபட்டு பிராமின் பழக்கவழக்கங்களை ஒத்திருக்கும்.


நெசவாளர் சமூகங்கள்  
தேவாங்கர் :- மிக பழமையான இனதில் ஒன்று. ஆடை இல்லாத காலத்தில் பிரம்மன், மற்றும் தேவர்களும் சிவபெருமானிடம் வேண்ட தேவர்களுக்கு ஆடை தயார் செய்து கொடுப்பதற்காக. சிவபெருமான் தன் சக்தியின் மூலம் தேவலர் என்பவரை வர வழைத்து நான்கு யுகத்தில் ஏழு அவதாரங்கள் எடுக்க செய்திருக்கிறார். அவர்களின் சந்ததிகளே தேவாங்கா இனத்தவர்கள்.

    கடவுளுக்கும், மனிதர்களுக்கும் நூல், மற்றும் துணிகளை தயாரித்து தன் ஏழு அவதாரத்திலும் தயாரித்து கொடுத்துள்ளார். மூன்று தூய்மையான பருத்திநூல் [yajno paveeta] [தமிழில் - பூணூல்] இவரால் அறிமுகபடுத்த பட்டு இவரின் இனத்தவர்களும், பிராமணர், ஷத்திரியர்கள், வைஸ்சியர்கள். இவர்களும் அணிய ஆரம்பித்தனர்.

    ஆமேத நகர் அரசர் தேவாங்கர்களின் வரலாற்றை தெரிந்து அவற்றின் தத்துவங்களை பரப்பியுள்ளார்.

    தேவாங்கர்கள் பல பிரிவாக பிரிந்திருந்தனர். கட்டகார்ஸ், லிங்க யாட்ஸ் இவர்கள் கர்னாடகா, மகாராஸ்ட்ராவில் வசித்துள்ளனர். கட்டகார்ஸ் என்பவர்கள். தாங்கர் என்ற ஜாதிக்குள் இருந்திருக்கிறார்கள். தென் இந்திய ஜாதிகளை பற்றி எழுதிய Edgar Dhurston என்பவர் அந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில் கட்டகார்ஸ் என்ற பிரிவு தேவாங்கா இனத்தை சார்ந்தது என்று எழுதி இருக்கிறார். அவர்களை கொடிக்கால் கட்டக்காரர் என்று அழைத்துள்ளனர்.


கோலி :- சிலந்தி என்று அர்த்தம். இவர்களை மீனவர்கள் என்றும் சொல்லுவர். இவர்களின் பழக்க வழக்கங்கள், ராஜஸ்த்தான், குஜராத், ஹிமாசல பிரதேஸ், உத்தர பிரதேஸ், ஹரியானா, பெங்கால், ஒரிசா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திர பிரதேஷ் இந்த மாநிலத்தவர்களின் நெசவாளர்களை ஒத்துள்ளது. ஆகவே இவர்களும் நெசவாளர்களே. இவர்கள் கோலி என்ற வார்த்தையை தன் பெயருக்கு முன்னும், பின்னும் இந்தியா முழுவதும் உபயோகின்றனர்.


சால்வி :- இவர்கள் பட்டு நெசவாளர்கள். இவர்கள் 12 ம் நூற்றாண்டில் கர்நாடகா, மஹாராஷ்ட்ரா விலிருந்து குஜராத்தை சுற்றியுள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். Shal மற்றும் Sal என்றால் குஜராத்தியில் தறி என்று பொருள் படுகிறது. துணியின் பூ வேலை பாட்டிற்கு பேர் போனவர்கள்.


பட்டு நூல்காரர்/ கத்ரி :- இவர்கள் குஜராத்தின் பட்டு நெசவாளர்கள். இவர்கள் செளராஷ்ட்ரா [குஜராத்] வில் இருந்து நாயக்கர் அரசர் அழைப்பினால் மதுரை க்கு வந்தவர்கள். இவர்கள் பழமையான மொழியான செளராஷ்ட்ரியை தமிழ், கன்னடம், தெலுங்கு கலந்து பேசியுள்ளனர். இவர்கள் அதிகம் இருந்ததால் சாகித்ய அகாடமி அவர்கள் பேசிய மொழியை அங்கீகரித்து தனி மொழியாக அறிவித்துள்ளது.


செங்குந்தர் மற்றும் கைக்கோலர்கள் :- இவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேஷ், மற்றும் ஶ்ரீலங்கா வில் இருந்துள்ளனர். இவர்கள் முதலியார் என்ற பெயரை இவர்களின் பெயருக்கு பின்னால் போட்டு கொண்டனர். முதலியார் என்பது “moodeley” என்ற சொல்லில் இருந்து வந்திருக்கிறது. Moodeley என்பது தென் ஆப்பிரிக்கா நெசவாளர்களின் பெயர் ஆகும்.

    Kai [கை] Kol [தறியில் பயன் படுத்தும் குச்சி] Kol என்பது இரும்பையும் குறிக்கிறது. இவர்கள் வலுவான கரங்களை உடையவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்களால் தேவதாஸா என்ற அமைப்பு தொடங்க பட்டுள்ளது. கோவில் களில் ட்ரஸ்டியாகவும் இருந்துள்ளனர்.

    கி.பி. 800 ல் சோழ மன்னர் ஆட்சி காலத்தில் இவர்கள்  போர் வீரர்களாக இருந்துள்ளனர். பின் 13 ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஆட்சி வீழ்ச்சிக்கு பின்னர், இவர்கள் முழு நேர நெசவாளர்கள் ஆனார்கள்.

    இவர்கள் துணிகள் ஏற்றுமதியிலும், விற்பனையிலும் பெரியவர்களாய் விழங்கினர். வித்யா மலை பகுதியில் இருந்து ஶ்ரீலங்கா வரையிலும் வியாபாரம் செய்தனர். அதனால் இவர்கள் துறைமுகத்தின் அருகில் வசித்தனர். பெரிதும் மங்களூர், மலபார் ஏரியாவில் வசித்தனர்.


அச்சுவாரு [Acchuvaru] :- என்ற இன்த்தவர்கள் 1901 MADRAS கணக்கெடுப்பின்படி தானியம் விற்கும் ஒரியா மக்கள் என்று பதிவு செய்யப்பட்டது. ஆனால் அச்சுவாரு என்பது தறியில் அச்சு வேலை செய்யும் அச்சுபணியை குறிப்பது. கைகோல் நெசவாளரின் கிளையில் உள்ள ஜாட்டிபிள்ளை [Jatipillai] யை ஒத்துள்ளனர். ஜாட்டிபிள்ளை என்பவர்களும் துணிகள் நெய்யக்கூடிய தறியில் அச்சு வேலை செய்பவர்களே.

Talye/ Talyer, Settigars :- இவர்கள் துளுநாடு [பிரிக்க படாத கனடா] வில் நெசவு தொழில் செய்தவர்கள். துளு மொழியில் “TALIYE” என்பது சிலந்தியை குறிக்கிறது. “TA” என்ற எழுத்தை மாற்றி “SA” என்று வைத்துக் கொண்டனர். அதனால் டாலியே என்பதும் சாலியே என்பதும் ஒன்றே. அரசு பதிவின்படி இவர்களே செட்டிகார்ஸ் ஆவர். இவர்கள் தேவாங்காஸ் அமைப்பின் படியும் இருந்தனர்.

   இவர்களை சாலே, சாலி, சாலியா என்று கன்னடம், மலையாளத்தில் அழைத்தனர். குஜராத் நெசவாளர்களையும் சாலியா என்று அழைத்தனர்.

   பிள்ளி மாக்கா [Billimagga]:- துளு நாட்டில் இருந்து  கிழக்கு கடற்கரை [ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு பாண்டிய மதுரை தேசம்] மற்றும் மேற்கு கடற்கரை கேரளா வழியாக கர்நாடகா வந்திருக்கிறார்கள். இவர்கள் துளு மொழியை தமிழ், கன்னடம், தெலுங்கு கலந்து பேசியிருக்கிறார்கள்,

    இவர்களை பிள்ளி மாக்கா என்று அழைப்பார்களாம். இவர்கள் வெள்ளை துணியையே நெய்தார்களாம். இவர்கள் ஏழு கோத்திரங்களை கொண்டிருந்தனர். {Mangalore, Kundapur and Udupi} தெய்வங்களாக வீரபத்ரர், பிராமலிங்கா, அம்னோரு, இருந்தனர். மொத்த இனத்திற்கும் தலைவராக ஒருவரை நியமித்து அவரை “பாத்துக்கு சொல்ற செட்டிகார்” என்று அழைத்தனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் தலைவரை நியமித்து அவரை  “குறிகாறா” என்று அழைத்தனர். {'தெற்கு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இந்திய தொகுதி .1' ல் க்யூவி Billmagga 240-242, எட்கர் தர்ஸ்டன்}


சமுதாய அமைப்பு:- ஆந்திராவில் உள்ள தேவாங்கர்கள் “மகாசபை” என்றும். கன்னட தேவாங்கர்கள் “ஆயகட்டு, கட்டமனே” என்றும் ஒரு அமைப்பை வைத்திருந்தார்கள்.

    குரு, எஜமானன், செட்டிகார்கள், சேசராஜூ {செட்டியாருக்கு உதவி செய்பவர்}, கரனிக்கா {கணக்கு வழக்கை பார்ப்பவர்} அர்ச்சகர் {கோவில் பூசாரி} சிங்கமு/ சிங்கம் வல்லு {இறந்தவர்களின் சடங்குகளுக்கு உதவி செய்பவர்}

குரு  :- இவர் தேவாங்க கடவுளாக மதிக்கபடுபவர். இவர் வார்த்தையை மேன்மையாக கருதினர்.

குரு பீடத்தின் மறுமலர்ச்சி :-  1990 ம் வருடம் மே மாதத்தில் ஹம்பி ஹேம கூட காயத்ரி பீட ஜெகத் குருவாக ஶ்ரீஶ்ரீஶ்ரீ தயானந்தபுரி மஹாராஜாவை தேவாங்க குல மக்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த குரு பீட வழக்கம் விஜயநகர அரசர் காலத்தில் தொடங்க பட்டது. பின் அது காலத்தால் அழிந்தது. அது மீண்டும் மறுமலர்ச்சி பெற்றுள்ளது. இவருக்கு முன் ஶ்ரீமுத்துசங்கர் சுவாமி அவர்கள் ஜெகத் குருவாக இருந்தார்.


செட்டிகார்ஸ் :- வரலாற்று பதிவின் படி செட்டிகார்ஸ் என்பவர்கள். கர்நாடகா, ஆந்திர பிரதேஷ் தில் உள்ள தேவாங்கா/ பத்மசாலி யில் இருந்து பிரிக்க பட்டவர்கள்.  இவர்கள் வரதட்சனை அதிகம் கேட்டதால். இவர்களை முக்கிய பகுதியிலிருந்து விலக்கினர். இவர்கள் விஜயநகர அரசரின் காலத்தில் பெரும் மதிப்புடன் வாழ்ந்தனர்.

    நெசவாளர்கள் கிராமத்திலும், நகரத்திலும் ஒற்றுமையாய் வாழ்ந்தனர். இவர்களை “கேரி” என்று கன்னடத்திலும். டேரு என்று மலையாலத்திலும் கூறினர்.

    நெசவு என்பது குடும்ப தொழிலாகவே இருந்தது. தெற்கு இந்தியாவில் இரு பிரிவாக இருந்தனர். 1. மேல் பிரிவு. 2. கீழ் பிரிவு. தேவாங்கா மற்றும் கைக்கோலரை கீழ் இனத்தார் என்றும். ஆந்திராவில் உள்ள பத்மசாலியை மேல் இனத்தார் என்றும் அவர்களே வைத்து கொண்டனர். தமிழ்நாடு வழியாக இடம் பெயர்ந்த நெசவாளர்களையும் கீழ் இனத்தார் என்றே வைத்து கொண்டனர்.

வலங்கை - இடங்கை சாதிமுறைக் கேடுகள் என்னும் தலைப்பில் புலவர் கோ. இமயவரம்பன் என்பவர் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் 

கரிகால் சோழனது ஆட்சியின்போது சாதிகளைக் கொண்ட இரு பிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்கள் குறைகளை முறையிட்டுக் கொள்ள மன்னன் அவைக்குச் சென்றார்களாம்மன்னனுக்கு வலது கைப் பக்கம் நின்று முறையிட்டவர்களை வலங்கை சாதியினர் என்றும், இடது கைப் பக்கம் நின்று முறையிட்டவர்கள் இடங்கையினர் என்றும் மன்னனால் அழைக்கப் பட்டார்களாம்.

வலது கை, இடது கை சாதிப் பாகுபாடுகள் தோன்றியது கி.பி. 10ம் நூற்றாண்டளவில்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்காஞ்சிபுரத்தில் சபாநாயகன் என்;னும் ஆரிய வம்சத்தவர்கள் தலைமையில் வலது கை சாதியினர் 98 பிரிவினர்களும், இடது கை பிரிவினர் சிலரும் தங்களுக்குள் கட்சி உண்டாக்கியதில் சண்டையிட்டுக் கொண்டனர் என்று ஒரு சாசனம் தெரிவிக்கிறது.

நெசவாளர்களில் சாலியரும், சேணியரும் வலங்கைப் பிரிவினராகவும், தேவாங்கர் மற்றும் கைக்கோளர் இடங்கைப் பிரிவினராகவும் இருந்ததாக பேராசிரியர் சி.எஸ். ஸ்ரீனிவாச்சாரியார் எழுதிய சென்னை வரலாறு கூறுகிறது.)


    தேவாங்கர்கள் வேறு தொழில் செய்தாலும், அல்லது நெசவு தொழில் செய்து கொண்டு வேறு இனத்தில் இருந்தாலும், இவர்களை ஒன்று கூட்டுவது இவர்களின் மொழியே. அவர்களிடையே பல பிரிவினைகள் ஏற்பட்டிருந்தாலும் இவர்களின் மொழி ஒரு கருவியாய் அமைந்திருக்கிறது.

ஆதாரம் :  வேறு ஒரு  வலை பதிவில் ஆங்கிலத்தில்  -- Hosabettu Vishwanath (Pune) என்பவர் எழுதி இருக்கிறார் . எந்த ஆதார நூலையும் போடவில்லை. நடப்பில் உள்ள விசயங்களும், நமக்கு தெரிந்த விசயங்களும் நம்ப கூடிய வகையில் இருப்பதால். பதிவு செய்யப்  பட்டிருக்கிறது. S.V. RAJA RATHINAM. KARUR.


கட்டுரையை சுட்டி காட்டியவர் :- திரு. A. தியாகராஜன் அவர்கள்.


                 தமிழில்   பதிவு  செய்தது  :- S.V. ராஜ  ரத்தினம் .